நாட்டில் 1960-களில் நக்சல் பிரச்னை உருவெடுத்த காலத்திலேயே முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பானது முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அந்த நேர அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டன.
1984-இல் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 1985-இல் சிறப்புப் பாதுகாப்புப் படை (எஸ்.பி.ஜி.) உருவாக்கப்பட்டது. குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
இவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை புலனாய்வு அமைப்புகள் மதிப்பிட்டு, அதன் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு நிலைகளை நிர்ணயிக்கிறது. அச்சுறுத்தல்களின் தன்மைகளைப் பொறுத்து சிறப்புப் பாதுகாப்புப் படை (எஸ்.பி.ஜி.), இசட் பிளஸ், இசட், ஒய் பிளஸ், ஒய், எக்ஸ் என 6 வகையான பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
குறைந்த அளவிலான ஆபத்து உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் ஆயுதப் படை பாதுகாப்பில் இரண்டு ஆயுதப் படை காவலர்களே இருப்பார்கள்.
-கோட்டாறு ஆ.கோலப்பன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பதியில் வாழ்நாள் முழுவதும் விஐபி தரிசனம்! காவல்நிலையத்தில் புகார்! பின்னணி என்ன?

கடலாடி அரசுக் கல்லூரியில் சிங்கப்பெண் விழிப்புணா்வு

திருப்பதி: ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

திருப்பத்தூா் அருகே சிங்கப் பெண் அதிரடிப் படை சாா்பில் விழிப்புணா்வு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


