மைச்சரே... மாதம் மும்மாரி பெய்கின்றதா?''
''மன்னா... மாரி மட்டும் மாதம் மும்முறை வந்து விடுகிறான், வசூல் செய்ய!''
-மஞ்சுதேவன், பெங்களூரு.
''அடுத்த பஸ் ஸ்டாப்பில் அதிகாரிங்க ஏறுவாங்க... எல்லோரும் டிக்கெட் எடுத்திடுங்க!''
''எங்களுக்கு நாங்க டிக்கெட் எடுத்திட்டோம்... அதிகாரிகளுக்கு நாங்க ஏன் சார் எடுக்கணும்?''
* * * *
''உங்க படத்துல நடுவுல முட்டையை ஏன் காட்டுறீங்க?''
''கதையில கரு இல்லைன்னு யாரும் சொல்லிடக் கூடாதுல்ல!''
-இந்து குமரப்பன், விழுப்புரம்.
''இப்போ காஸ் தட்டுப்பாடே இல்லையே...''
''ஆமாம்.''
''அப்படின்னா... டீ விலையைக் குறைக்கலாமே?''
''டீக்கடையை உங்களிடம் கொடுக்கறேன்... அப்புறம் நீங்களே பார்த்து முடிவு பண்ணுங்க!''
* * * *
''மொய் வைக்க மறந்துட்டேன்...''
''அதனால என்ன? போய் வெச்சிட்டு வந்திடுங்க...''
''இன்னொரு முறை சாப்பிட முடியாதே!''
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
''உங்கள் வீட்டில் சண்டையா... பாத்திரம் உருண்ட ஓசை கேட்டுதே?''
''சண்டை இல்லை... அது கடாய் கரண்டி பறக்கும் இன்டோர் கேம் ஓசை!''
* * * *
''ரசத்தில் உப்பு அதிகம்.''
'' நான் சரியாதான் உப்பு போட்டேன்...''
''அது உன் தப்பு இல்ல... சரியா வாங்கிக்காதது ரசத்தின் தப்பு!''
* * * *
''எனக்குப் புகழ்ச்சி பிடிக்காது...''
''அதாவது உன்னை எவரும் புகழக் கூடாது... அப்படித்தானே?''
''ஊஹூம்... நான் எவரையும் புகழ மாட்டேன்!''
- பர்வதவர்த்தினி, பம்மல்.
'' நம்ம பேங்க்ல என்ன கலாட்டா?''
''லோன் வேணுமான்னு கேட்பதை மட்டும் லேடீசை வச்சுக் கேட்கிறீங்க... ஆனால், பணம் வசூல் பண்ண மட்டும் பவுன்சரை ஏன் அனுப்பறீங்கன்னு வாடிக்கையாளருங்க சண்டை போடுறாங்க!''
* * * *
''மனைவி சந்தோசமா இருக்க ஏதாவது வழி இருக்கா?''
''இரண்டு வழி இருக்கு... சில நேரங்களில் உங்கள் மனைவியை முடிவெடுக்க விடுங்கள்... மற்ற நேரங்களில் அவர்கள் எடுக்கும் முடிவுக்கு சரி என்று சொல்லுங்கள்!''
* * * *
''எப்போதும் போனையே பார்க்காதீங்க ... அதுக்குப் பின்னாடியும் ஓர் உலகம் இருக்கு...''
''ஒரு லிங்க் அனுப்புங்க சார்... பார்க்கிறேன்!''
* * * *
''என்னங்க... இன்னைக்கு குழம்பு ரொம்ப நல்லா இருக்கு.''
''ஏன் சொல்ல மாட்டே... காய்கறி வெட்டிக்
கொடுத்தது நான்தானே!''
-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
''நோயாளிகளுக்கெல்லாம் கையில முடிக்கயிறு கட்டுறாங்களே, எதுக்கு?''
''நோயைக் கட்டுக்குள் வச்சிருக்கவாம்!''
* * * *
''வெண்பா வேண்டுமா? விருத்தப்பா பாடவா? அல்லது சந்தப்பா பாடவா, மன்னா?''
''எப்பாவாயினும் பரவாயில்லை... தப்பா பாடாமல் இருந்தால் போதும், புலவரே!''
* * * *
''மெதுவடை என்னப்பா கல்லு மாதிரி இருக்கு?''
''கல்லூர் உளுந்துல செய்தது, சார்!''
-வி.ரேவதி, தஞ்சை.
தொடர்புடையது
தனியாா் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டது ஏன்? அமைச்சா் செங்கோட்டையன் விளக்கம்

இது தெரியுமா? கடலின் ஆழத்துக்குச் செல்லச் செல்ல அழுத்தம் அதிகமாக இருப்பது ஏன்?
குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் என்ன செய்வது?
சிரி... சிரி...
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


