காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

'நாணய' டீக்கடைக்காரர்!

ஆவடி திருமுல்லைவாயல் பேருந்து நிறுத்தம் அருகே முப்பத்தொரு ஆண்டுகளாக தேநீர்க் கடை நடத்தி வருபவர் லோகநாதன்.

Published On :6 செப்டம்பர் 2026, 4:11 am IST

ஆவடி திருமுல்லைவாயல் பேருந்து நிறுத்தம் அருகே முப்பத்தொரு ஆண்டுகளாக தேநீர்க் கடை நடத்தி வருபவர் லோகநாதன். இவர் பழைய நாணயங்கள் சேகரிப்பில் தீவிரமாக இயங்கி, 1980-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாணயங்களைச் சேகரித்துள்ளார். இவரது கடையில் அவற்றைக் காட்சிப்படுத்தியும் உள்ளார்.

'இந்த ஆர்வம் எப்படி ஏற்பட்டது?' என்பது குறித்து அவரிடம் பேசியபோது:

'சிவகங்கை மாவட்டத்துக்கு உள்ள வெற்றியூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னய்யா - ஆனந்தவல்லி தம்பதிக்கு மகனாகப் பிறந்தேன். பிளஸ் 2 வரை படித்தேன். சிறுவயதிலேயே நாணயங்கள் சேகரிப்பில் ஆர்வம் இருந்தது. படித்து முடித்தவுடன் சென்னைக்கு வந்துவிட்டு, ஆவடியில் தேநீர்க் கடையை நடத்தி வருகிறேன்.

தேநீர்க் கடையில் வாடிக்கையாளர்கள் அளிக்கும் பழைய நாணயங்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். இவ்வாறாக நாணயங்கள் குவிந்தன. ஒரு பைசா, இரண்டு பைசா, ஐந்து பைசா, பத்து பைசா, ஓரணா, இரண்டனா, அரையணா, நயா பைசா, தம்புடி உள்ளிட்ட அரிய நாணயங்கள் உள்ளன.

அரசர் கால நாணயங்கள், ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி வெளியிட்ட நாணயங்கள், பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட நாணயங்கள், இந்திய அரசு வெளியிட்ட நாணயங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாணயங்கள் என்னிடம் உள்ளன.

Story image

1835, 1935-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட செம்பு காலணா நாணயம் என்னிடம் உள்ளது. நூறு ஆண்டுகள் இடைவெளியில் வெளியான செப்பு நாணயம் ஒரே தரத்தில் இருப்பது விசித்திரமானது.

ஹிந்தி, ஆங்கிலம், உருது, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியிடப்பட்ட இரண்டு அணா நாணயம் உள்ளிட்ட பல அரிய நாணயங்களும் எனது சேகரிப்பில் உள்ளன.

ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், சவூதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களும் என்னிடம் உள்ளன.

எனது இந்த நாணயச் சேகரிப்புக்கு குடும்பத்தினர், நண்பர்கள் உறுதுணையாக இருக்கின்றனர்' என்கிறார் லோகநாதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.