பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மூன்று பைசா தபால் அட்டைகள்!

நாட்டில் மூன்று பைசா மதிப்பில் தபால் அட்டை முதன் முதலில் 1879- ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஆங்கிலேய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

News image
Updated On :12 ஜூலை 2026, 12:00 am IST

நாட்டில் மூன்று பைசா மதிப்பில் தபால் அட்டை முதன் முதலில் 1879- ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஆங்கிலேய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அட்டைகளில் ஆங்கிலேய அரசு சின்னம், ராணி விக்டோரியா, ஐந்தாம் ஜார்ஜ் படங்கள் போன்றவை அச்சிடப்பட்டிருந்தன. இவை சிறிய செய்திகள், விழாவுக்கான வாழ்த்துகள், திருமண அழைப்பிதழ்கள், வணிகத் தகவல்களுக்குப் பயன்படுத்தப்பட்டது.

அந்த எளிமையான தபால் அட்டை அறிமுகமான, ஒன்பது மாதங்களில் 7.5 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகியது. பல ஆண்டுகளுக்குப் பயன்பாட்டில் இருந்தது. இன்று தபால் சேகரிப்பாளர்கள், தபால் அருங்காட்சி அரங்குகளில் மட்டுமே இவை உள்ளன.

1835-1957-ஆம் ஆண்டுக்கு இடையில் ஒரு ரூபாய், பதினாறு அணாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அணாவுக்கும் நான்கு பைசா. ஒவ்வொரு பைசாவுக்கும் மூன்று தம்பிடி. 1947-இல் தம்பிடி காசு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

1955-இல் இந்திய நாணயங்கள் மெட்ரிக் முறைக்கு மாறின. இந்திய நாணயச் சட்டம் திருத்தப்பட்டு, அதன்படி புதிய மெட்ரிக் நாணயங்கள் 1957-இல் அறிமுகமானது. இவை 1957-74 வரை 'நயா பைசா' என அழைக்கப்பட்டன. இதில் 1964 ஆம் வருடம் ஜூன்1-இல் நயா பைசாவில் இருந்த 'நயா' கைவிடப்பட்டது. காலப்போக்கில் நாலு அணா, எட்டு அணா நாணயங்கள் திரும்பப் பெறப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.