மும்பையில், ஏற்கனவே கனமழை பெய்து வெள்ளக்காடாக மாறிய நிலையில், அங்கு அடுத்த மூன்று நாள்களுக்கு மிகக் கனமழைக்கான வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மும்பைக்கு, அடுத்த 48 மணி நேரத்துக்கு மிக அதிகனமழைக்கான வாய்ப்பிருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வழக்கமாக மழை குறித்து வானிலை ஆய்வுகளை முன்கணித்து மக்களுக்காக, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான்.
இவர் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மும்பைக்கு மிக மோசமான மழை காத்திருக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் மிக அதி கனமழை பெய்யலாம். மும்பையில் ஒரு சில இடங்களில் அடுத்த 2 அல்லது 3 நாள்களில் அதிகபட்சமாக 400 - 500 மி.மீ. மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல், இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரை மும்பையின் ஒரு சில இடங்களில் இடைநிற்காமல், தொடர்ந்து கனமழை பெய்யலாம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
ஜூலை 4ஆம் தேதி - 110 மி.மீ.
ஜூலை 3ஆம் தேதி - 107 மி.மீ.
ஜூலை 2ஆம் தேதி - 205 மி.மீ.
ஜூலை 1-ஆம் தேதி - 96 மி.மீ. மழை
எனவே, மக்களே அடுத்த 3 நாள்களுக்கு மும்பைக்கு செல்வதாக இருந்தால் தவிர்த்துவிடுங்கள்.
சென்னையில் மேகக் கூட்டங்கள் சூழ்ந்திருக்கும். ஆனால், அவ்வப்போது லேசான மழைத் தூறல் போட்டு டாமால் டூமீல் என மழை பெய்யும் மேகங்கள் திரள்வதைத் தடுத்து வருகின்றன.
ஆனால், இந்த நிலை மாறி, ஒரு சில நாள்கள் மழை பெய்யலாம். 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு, சென்னையில் ஜூலை மாதத்தில் மழைத் தூறல்களைக் காணலாம் என்றும் பதிவிட்டுள்ளார்.
இது தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் கொட்டித் தீா்த்த மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தஞ்சாவூரில் 45 நிமிஷங்களில் 32 மி.மீ. மழை: சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்ததால் மக்கள் அவதி

தருமபுரியில் இரவில் கொட்டித் தீா்த்த மழை: கோயிலுக்குள் புகுந்த மழைநீா்






