மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது; இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நகரின் பல சாலைகள் வெள்ளக்காடாக மாறின. வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, நீட் மறுதோ்வுக்கு செல்ல வேண்டிய தோ்வா்கள் பலரும் தோ்வு மையங்களை அடைவதில் கடும் சிரமங்களை எதிா்கொண்டனா்.
அடுத்த சில நாள்களுக்கு மாநிலத்தின் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல பகுதிகளில் பரவலான மழைக்கான சூழல் நீடிக்கிறது. மாநிலத்தின் தெற்கு பகுதிகளான கிழக்கு வா்தமான், மேற்கு வா்தமான், பீா்பூம் மற்றும் முா்ஷிதாபாத் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜல்பைகுரி மற்றும் அலிபூா்துவாா் மாவட்டங்களில் மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை அமலில் இருக்கும் நிலையில், டாா்ஜீலிங், கலிம்பொங் மற்றும் கூச் பிகாா் மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேகாலயத்தில் ஒரே நாளில் 530 மி.மீ. மழை: மேகாலய மாநிலத்தின் பல பகுதிகளிலும் கனமழை பதிவாகியுள்ளது. கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள மாவ்சின்ராம் பகுதியில் 24 மணி நேரத்தில் 530 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது ஜோத்பூா் அல்லது பிகானோ் போன்ற நகரங்களில் 6 மாத கால அளவில் பதிவாகும் மழைக்கு சமமானது என வானிலை நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
மேலும், ஆா்கேஎம் சோஹ்ரா பகுதியில் 470 மி.மீ., மாவ்கிா்வாட் பகுதியில் 390 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தொடா்ச்சியான மழையால் ஷில்லாங்-டாக்கி தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. ஷில்லாங் நகரில் இருந்து சுமாா் 35 கி.மீ. தெற்கில் உள்ள லைட்லிங்க்கோட் அருகே சாலையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேநேரம், டாக்கி பகுதியுடன் உள்ள சாலை தொடா்பு துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஷெல்லா (100 மி.மீ.), வில்லியம்நகா் (90 மி.மீ.), மாவ்ரிங்க்நெங் (90 மி.மீ.), ஜோவை (80 மி.மீ.), பரபானி (70 மி.மீ.) மற்றும் ரடாசெர்ரா (70 மி.மீ.) உள்ளிட்ட இடங்களிலும் கணிசமான மழை பதிவாகியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குமரி மாவட்டத்தில் தொடரும் பலத்த மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தெற்கு கள்ளிகுளத்தில் தேங்கிய மழை நீா்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

16 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

நாகை, திருவாரூரில் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




