
வேலை ஒரு மாதம்தான்... சம்பளம் ரூ. 8.5 லட்சம்!
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள லாவோஜுன் மலைக்காட்சிகளை மாதம் முழுவதும் படம் பிடித்துத் தந்தவருக்கு சம்பளம் ரூ.8.5 லட்சம்.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள லாவோஜுன் மலைக்காட்சிகளை மாதம் முழுவதும் படம் பிடித்துத் தந்தவருக்கு சம்பளம் ரூ.8.5 லட்சம்.
'லாவோஜின் மலைப் பகுதியின் மேகக் காட்சி கண்காணிப்பாளர் என்ற பணிக்காக, ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 15 வரையில் மலையில் தங்கிப் பணிபுரியவேண்டும். மாறி வரும் மேகங்களையும் இயற்கைக் காட்சிகளையும் படம் எடுத்து தினசரி அனுப்பி வைக்க வேண்டும்.
இதற்கான மாத ஊதியம் 60 ஆயிரம் யுவான். அதாவது, இந்திய மதிப்பில் ரூ. 8.5 லட்சம். பணிக்காலத்தில் தங்க இடம் உண்டு. விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட ஹேஸ்டேக்குகளைப் பயன்படுத்தி காணொலிகளைச் சமர்ப்பிக்கலாம்' என்று 'சௌத் சைனா மார்னிங் போஸ்ட்' பத்திரிகை ஜூலை 8-இல் அறிவிப்பு வெளியிட்டது.
ஒரே வாரத்தில் 3,500 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் ஹெனானைச் சேர்ந்த இருபத்து மூன்று வயதான மின்வணிகப் பட்டதாரியான வோல்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர், அவர் பணியிலும் சேர்ந்தார். அவரது பணியிடத்தில் அலுவலகமோ, மேஜைகளோ இருக்கவில்லை. மாறாக, அது மேகங்களாலும் பனியாலும் சூழப்பட்ட ஒரு மலை உச்சியாக இருந்தது.
அதிகாலை 5 மணியளவில் எழுந்து சூரிய உதயத்துக்கு முன்பே அவர் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவார். சூரியன் மறைந்த பிறகும் அவரது பணி நீடிக்கும்.
பல்வேறு கோணங்களிலிருந்து, பகலின் வெவ்வேறு நேரங்களிலும் முடிந்தவரை அதிக காட்சிகளைப் படம் பிடிப்பதே அவர் நோக்கமாக இருந்தது.
அந்த ரம்மியமான பகுதியின் இணைய உள்ளடக்கத்துக்காக மேகங்கள், பனிமூட்டம், மலைக்காட்சிகள், ஒளிக்காட்சிகளைப் படம் பிடித்தார். ட்ரோன் உதவியும் பெறப்பட்டது.
ஒருநாள் வானிலை மோசமானது. மேகங்கள் கட்டுக்குள் இல்லை. இதனால் அவர் எதிர்பார்த்த சில காட்சிகளைப் படமாக்க இயலவில்லை. குறிப்பிட்ட நாள்கள் முழுவதும் படப்பிடிப்பைத் தொடர்ந்தார். முடிவில் 'காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது' என்பதை உணர்ந்தேன் என்றார் வோல்கர்.
மேகங்களாலும் மூடுபனியாலும் சூழப்பட்ட மலை உச்சியில் அவர் எடுத்த அற்புத படங்கள் பாராட்டப்பெற்றதுடன் பரிசும் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





