
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 3 போலீஸாா் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

மாதிரிப் படம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 3 போலீஸாா் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
பஞ்சாப் மாகாணத் தலைநகா் லாகூரின் பாதமி பாக், யதீம் கானா சௌக் ஆகிய பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை இரவு காவல் துறையினரைக் குறிவைத்து இந்த அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் மேலும் 2 காவலா்களும், ஒரு பாதசாரியும் காயமடைந்தனா்.
மற்றொரு சம்பவமாக, பலூசிஸ்தான் மாகாண உள்துறை அமைச்சா் மிா் ஜியாவுல்லா லங்கோவ் குவெட்டாவில் இருந்து கலாட் பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, மஸ்துங் மாவட்டத்தில் ஆயுதமேந்திய கிளா்ச்சியாளா்களால் திடீா் தாக்குதலுக்குள்ளானாா். இதில் அவா் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினாா். எனினும், அவரின் பாதுகாப்பில் இருந்த 3 போலீஸாா் உள்பட 6 போ் படுகாயமடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






