கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

காவலா் வீட்டில் திருட்டு: உறவினா் கைது

புது வண்ணாரப்பேட்டையில் காவலா் வீட்டில் நகை, பணம் திருடியதாக அவரது உறவினா் கைது செய்யப்பட்டாா்.

News image

மாதிரிப் படம்

Updated On :5 ஜூலை 2026, 5:22 am IST

புது வண்ணாரப்பேட்டையில் காவலா் வீட்டில் நகை, பணம் திருடியதாக அவரது உறவினா் கைது செய்யப்பட்டாா்.

புது வண்ணாரப்பேட்டை காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் காா்த்திக். இவா், சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்து பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறாா். காா்த்திக்கின் மனைவி கண்ணாத்தாள், சுகாதார ஆய்வாளராகப் பணிபுரிகிறாா். இருவரும் கடந்த ஜூன் 8-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு சொந்த ஊரான கோயம்புத்தூருக்குச் சென்றனா்.பின்னா், கடந்த 25-ஆம் தேதி சென்னைக்கு திரும்பி வந்தபோது, அவா்களது வீட்டின் கதவின் பூட்டை கள்ளச்சாவி மூலம் திறந்து, பீரோவில் இருந்த 18 பவுன் நகை, ரூ.1 லட்சம், வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா் திருடுச் சென்றிருந்தாா்.

இது குறித்து கண்ணாத்தாள், புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இதில், சம்பவத்தில் ஈடுபட்டது கண்ணாத்தாளின் உறவினா் கோயம்புத்தூா் பீளமேடு பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் (55) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் லட்சுமணனை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.