துப்பறியும் கதை

விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்களில் ஒன்று 'கொலை'. இதில் விஜய் ஆண்டனியுடன் ரித்திகா சிங், ஜான் விஜய், ராதிகா சரத்குமார், முரளி சர்மா
துப்பறியும் கதை

விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்களில் ஒன்று 'கொலை'. இதில் விஜய் ஆண்டனியுடன் ரித்திகா சிங், ஜான் விஜய், ராதிகா சரத்குமார், முரளி சர்மா, மீனாட்சி சௌத்ரி, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், சம்கித் போரா உள்பட பலர் நடிக்கிறார்கள். 'விடியும் முன்' படத்தை இயக்கிய பாலாஜி குமார் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது... "இந்த படம் 1923-இல் நடந்த டோரதி கிங்கின் கொலை சம்பவத்தால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட தாகும், அந்தக் கொலை சம்பவம் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அந்தக் கொலையின் பின்னால் உள்ள மர்மத்தை உடைக்க உலகம் துடித்தது. 

அந்த மர்மம் எப்படி இருந்திருக்கும் என்கிற கற்பனையே இந்த படம். லீலா என்ற அழகான மாடலைப் பற்றியது, அவர் தனது குடியிருப்பில் கொலை செய்யப்படுகிறார். அவளுக்குத் தெரிந்த ஐந்து ஆண்களில்,  ஒவ்வொருவரும் லீலா இறக்க வேண்டும் என்று விரும்புவர்களாக இருக்கிறார்கள்.

அதில் கொலையாளி யார் என்பது மர்மம். துப்பறியும் நபரான விநாயக் (விஜய் ஆண்டனி) பல ஆண்டுகளாக தனிப்பட்ட சோகத்தால் களப்பணிகளில் இருந்து விலகி, முடங்கி இருக்கிறார்.

இந்த கொலை வழக்கு சிக்கலானதாக இருப்பதால், காவல்துறைக்கு வேறு வழிகள் இல்லை, கொலை மர்மத்தை உடைக்க அவரை மீண்டும் அழைக்கிறது. அவர் எப்படி இதனை கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com