நிரந்தர அமைதி!

நிரந்தர அமைதி!

அமெரிக்காவின்  30-ஆவது  அதிபர்  கால்வின் கூலிட்ஜ்க்கு ( 1923-1929)  "அமைதி கால்'  எனப் பெயர்.  காரணம்,  அவர் மிக  அபூர்வமாகத்தான் பேசுவார்.  பேசும் போதும் சரி, வேலையை  செய்யும்போதும் சரி, மிக ஜாக்கிறதையாகத்தான் இருப்பார். இருந்தாலும்  சிறப்பாக ஆட்சி செய்ததுடன்  மக்களிடமும் அவருக்கு நல்ல பெயர்தான்.  அரசியல்வாதி என்றாலே நிறைய பேசிபேசியே  மக்களிடம்  இடம் பிடிப்பர்.  ஆனால் கால்வின்  கூலிட்ஜ்.. வித்தியாசமானவர். அவருடைய  அமைதி பற்றியும்  சில கதைகள் உலாவுகின்றன.

அதில் ஒன்று...

 ஒருசமயம்,  ஒரு பார்ட்டியில்  அவர் அருகில்  ஒருவர்  உட்கார்ந்திருந்தார்.  அவர்  அதிபர்  கால்வினிடம்,  "இன்று உங்களை  இரண்டு வார்த்தைகளுக்குமேல்  பேச வைப்பேன்  என நண்பரிடம்  கூறி வந்துள்ளேன்'' என்றார்.

"நீங்கள்  தோற்பீர்கள்''  என்றார் கால்வின்.

இனி அமெரிக்க அதிபரைவிட்டுவிட்டு சீன தத்துவ  ஞானி லாவோசூவிடம் செல்வோம்.

இவர்  "அமைதியாக  இருப்பது  நமக்கு  கூடுதல் வலுவை தரும்' என்பார்.

அவரைப்பற்றி கூறப்படும் கதை.

இவருடன்  எப்போதும் ஒரு நண்பர்  வாக்கிங்  செல்வார்  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  நடப்பார். ஆனால் ஒரு வார்த்தை  கூட பேசிக் கொள்ளமாட்டார்கள்.
ஒருநாள்  அந்த நண்பர், தன்னுடைய விருந்தினர்  ஒருவரையும், வாக்கிங்கிற்கு  அழைத்து வந்தார்.  மூன்று  பேரும்  நீண்ட தூரம்  நடந்தும் ஒருவார்த்தை கூட  பேசவில்லை.  இது , கூட  வந்த விருந்தினருக்கு தர்மசங்கடத்தை  தந்தது.  அதனால்  அவர் பொறுக்கமாட்டாமல்

"ஆஹா.. என்ன அழகான  காலை'' என கூற, அதற்கு  கூட,  வந்த  மற்ற இருவரும்  பதில் கூறவில்லை.

அடுத்த நாள், விருந்தினர் வராமல் நண்பர்  மட்டும்  வந்தார்.

லாவோசூ அவரிடம்,  "இனிமேல்  உங்கள் நண்பரை  கூட  அழைச்சுக்கிட்டு  வராதீங்க..  அவர் ரொம்ப  பேசறார்''  என்றார்.
மொத்தமே.. நடையின்போது அவர் ஒரே ஒரு  வாசகம் தான் பேசினார்.  அத்துடன் அவர் அதில் எந்த பொய்யும்  சொல்லலே, காலை  அழகாகக்தான்  இருக்கு.  ஆனால்,  அதை ஒரு  வாக்கியத்தில்  முற்றுப்புள்ளி  வெச்சுட்டாரே.  அதான்!

அதனைப்புரிந்து கொண்ட  லாயூடிசு  தானே  விளக்கினார்:

சூரியன்  எழுகிறது  அதன் சிவப்பு கிரணங்கள் கிழக்கிலிருந்து  வரிவிடைஞ்சுகிட்டே வருது..  வானம் தெளிவாகவும்..  நீலமாகவும்  ஜொலிக்கிறது.  தென்றல்  மாதிரி  ஒரு மென்மையான  காற்று அடிக்குது. பறவைகள்.. உணவு  தேட, கூட்டைவிட்டு  கிளம்பிச் செல்கின்றன. காடுமுழுவதும்  அவை  எழுப்பும்  ஒலிகள்.. எழும்பிய  வண்ணம்  உள்ளன. ஆக  சாதாரணமா.. பேசுகிறவர் கூட,  இவற்றைப்  பார்த்ததும்,  அமைதியாகிவிடுவர்.  ஆக , ஒரு காலை  விடிதலில்  இவ்வளவு  விஷயம் இருக்கு.  உங்கள்  விருந்தினர்.  ஆரம்பத்தில்  அமைதியாகத்தான் வந்தார்.  ஆனால்,  அவற்றை  பார்த்ததுடன்  பேச ஆரம்பித்துவிட்டாரே. ஆக,  அவர் பேசியதன் மூலம்  விடிதலின் அழகை அவர் குறைத்துவிட்டார்' என  முடித்தார்  லாவோசூ. இதன் பொருள்.. வார்த்தைகளே  தேவையில்லாதபோது,  அதனை பேசுவதில்  அர்த்தமில்லை.  அதேசமயம்,  ஒருவராகவும் அமைதி  காக்கக் கூடாது.   

மீண்டும்  அமெரிக்க ஜனாதிபதி  கால்வின் கூலிட்ஜ்க்கு  வருவோம்.

அவரைப் பற்றி அமெரிக்காவின்  கவிஞர் மற்றும்  எழுத்தாளர்  டோரதி  பார்க்கர்,  இப்படி சொன்னார்,

கூலிட்ஜ் இறந்தபோது,  அதைப் பற்றி  எப்படி  பேசியிருப்பார்கள் அமைதியானவர்..  இறந்ததின் மூலம்,  நிரந்தர  அமைதியாகிவிட்டார் 

என்றுதானே சரியா...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com