இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

பேரிடர் மீட்புக்கு புதிய ரோபோ!

பேரிடர் காலங்களில் மீட்புப் பணியில் குறிப்பிட்ட இடத்துக்கு செல்வது, இடிபாடுகளுக்குள் புகுவது போன்றவை மீட்புக்குழு முன் உள்ள மிகப்பெரிய சவால்கள்.

News image
Updated On :13 அக்டோபர் 2015, 6:12 pm IST

பேரிடர் காலங்களில் மீட்புப் பணியில் குறிப்பிட்ட இடத்துக்கு செல்வது, இடிபாடுகளுக்குள் புகுவது போன்றவை மீட்புக்குழு முன் உள்ள மிகப்பெரிய சவால்கள். முன்னேறிய நாடுகளில் இந்தப்பணிகளில் ரோபோக்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் ரோபோக்கள் மனிதனைப் போன்று இயங்க முடியாது. எடையும் கூடுதல். இடிபாடுகளுக்குள் ரோபோக்களால் எளிதில் நுழைய முடியாது.

இப்போது ஒரேகான் மாநில பல்கலைக்கழக இயந்திரவியல் ஆய்வகம் ஆட்ரியாஸ்-2 என்ற ரோபோவை வடிவமைத்துள்ளது. இதன் எடை மிகக் குறைவு. ஆற்றல் மிக அதிகம்.

இருகால்கள் மட்டுமே கொண்டது. கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் இடிபாடுகளுக்குள் புகுந்து மீட்புப்பணிகளுக்கு உதவுகிறது.

பரிசோதனை நிலையில் இந்த ரோபோ ஒரு மீட்பு வாகனத்தை கரடு முரடான பாதையில் இயக்கிச் சென்று, சுவரைத் துளைத்து, கதவுகளை உடைத்து சிக்கியிருந்தவர்களைச் சேதமின்றி மீட்டது.

பொதுவாக நடைமுறையில் உள்ள ரோபோக்களின் கால்கள் குட்டையானவை. மோட்டார்கள் இயக்கத்தால் நடப்பவை. அதனால் ஆற்றல் செலவு அதிகம். விரைவில் சக்தியை இழந்துவிடும்.

இந்த ஆட்ரியாஸ் -2வில் இவை அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன. மனிதன் கால்களைப் போன்று இதன் இரு கால்களும் நீளமாக அமைக்கப்பட்டுள்ளன. மனிதனைப் போன்று முழங்கால் அமைக்கப்பட்டு வளையும் தன்மையைப் பெற்றுள்ளது. தரையில் கால் பதிக்கும் போது அங்குள்ள அனைத்தையும் உணரும் சென்சார்கள் பாதத்தின் அடியில் பொருத்தப்பட்டுள்ளன. சிறிய மோட்டார்கள், ஸ்பிரிங்குகள், பைபர் சக்கரங்கள் கொண்டு இதன் இயக்கம் நடைபெறுகிறது. மனிதனைப் போலவே இது நடக்கும், ஓடும், குதிக்கவும், தாவவும் செய்யும். கேமராக்கள், சென்சார்கள் என வழக்கமாக ரோபோக்களில் உள்ள அனைத்தும் இதிலும் உள்ளன. அடுத்த தலைமுறை ரோபோக்களின் முதல் பிறவியாக இந்த ஆட்ரியாஸ்-2 வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.