சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாளை நான் ஐஏஎஸ்

ஐ.ஏ.எஸ் தேர்வுகள் என பரவலாக அறியப்படும் இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளுக்குத் தயாராவது படித்த பல இளைஞர்களின் கனவுகளில் ஒன்று. சிலரின்

News image
Updated On :14 செப்டம்பர் 2015, 10:45 am

மு.சிபிகுமரன்

ஐ.ஏ.எஸ் தேர்வுகள் என பரவலாக அறியப்படும் இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளுக்குத் தயாராவது படித்த பல இளைஞர்களின் கனவுகளில் ஒன்று. சிலரின் கனவே அதுதான். இந்திய அரசுப் பணிகளில் உயர்ந்த பணியாக இப்பணிகள் இருப்பதே அதற்குக் காரணம்.

இன்று  படித்த இளைஞர்களிடமும், படிக்கின்ற மாணவர்களிடமும் ஊடகங்கள் இத்தேர்வுகள் பற்றிய விழிப்

புணர்வுகளைப் பெருமளவு ஏற்படுத்தியிருக்கின்றன.

 ஐ.ஏ.எஸ் தேர்வுகள் பற்றிச் சிந்திப்பது இன்றைய பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. அதே வேளையில் அத்தேர்வுக்கு எப்படித் தயாராவது? என்ற தவிப்பும் உருவாகிவிடுகிறது.

என்னால் ஐ.ஏ.எஸ் ஆக முடியுமா? என்ற கேள்வி ஒவ்வோர் இளைஞனுக்குள்ளும்  எழுந்து கொண்டே இருக்கின்றது. ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு எப்படிப் படிப்பது? என்ற ஐயம் கலந்த ஆர்வம் பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் பெரும்பாலானோருக்கு நிச்சயம் உண்டு.

""என் மகள் ஐ.ஏ.எஸ் தேர்வுகள் எழுதுவதில் ஆர்வமாக இருக்கின்றாள். எந்த வகுப்பில் இருந்து ஐ.ஏ.எஸ் தேர்வுகளுக்கு தயார்ப்படுத்தலாம்?'' என்ற கேள்வியோடு ஏராளமான பெற்றோர்கள் விடைதேடி அலைகிறார்கள். பயிற்சி வகுப்பிற்குச் சென்றுதான் படிக்க முடியுமா? வீட்டிலிருந்தே படிக்க முடியுமா? என்றெல்லாம் கேள்விகள் வருகின்றன.

நல்ல சமுதாயத்தை } எதிர்கால இந்தியாவை உருவாக்கிட } எண்ணுகின்ற நல்லாசிரியர்கள் தன்னிடம் படிக்கின்ற கூர்மையான அறிவும், சமூக சிந்தனையும் உள்ள மாணவர்களை, ""நீ படித்து பிற்காலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வந்தால் சமுதாயத்திற்கு நன்மை நடக்கும்'' என்று சிலரை அடையாளம் கண்டு உற்சாகப்படுத்துவர்.

இந்த உற்சாகத்தால் அத்தகைய மாணவர்கள் மகிழ்ச்சியடைவர். ஐ.ஏ.எஸ் தேர்வு சம்பந்தமான அவர்களது ஆர்வம் பெருகும். எவ்வாறு படிக்க வேண்டும் என்ற வினாவும் பிறக்கும்.

 ""ஐ.ஏ.எஸ் தேர்வுகளை ஆங்கிலத்தில் புலமை இருந்தால் மட்டும்தான் எழுத முடியுமா?'' என்று பயம் கலந்த கேள்வி கேட்பார், தமிழ்வழியில் படித்த மாணவர்.

இவைபோன்ற எண்ணற்ற வினாக்கள்...  பற்பல ஐயங்கள். இதற்கான சரியான வழிகாட்டுதல்கள் எங்கு கிடைக்கும்? யார் தருவார்கள்? இதுதான் சரியா? என்றெல்லாம் எண்ணுகின்ற தேடல் உள்ள பெற்றோர்களுக்கும், உயர்ந்த இலக்கு கொண்ட மாணவர்களுக்கும், நெறிப்படுத்திட விரும்பும் ஆசிரியர்களுக்கும் இத்தொடர் சரியான பதில்களை நிரப்பிக் கொண்டு வரும்.

பெற்றோரே... உங்களின் மகன், மகள் - நல்ல ஆசிரியரே... உங்களின் மாணவர் - உயர்ந்த இலட்சியம் கொண்ட இளைஞரே... நீங்கள் - நாளை நான் ஐ.ஏ.எஸ் என்று நம்பிக்கையோடு தயாராகிட இத்தொடர் தெளிவான வழிகாட்டும். தொடர்ந்து படித்தால் இலட்சியம் நோக்கிய பாதையில் படிந்திருக்கும் இருள் விலகும்.  வெளிச்சம் பெருகும்.

அன்பான மாணவர்களே ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவது கனவல்ல. அது ஒவ்வோர் ஆண்டும் நிகழ்கின்ற ஒரு நிகழ்வே.

தமிழ்வழியில் படித்தோம் என்ற தயக்கம் வேண்டாம். தலைநிமிர்ந்து நில்லுங்கள். தமிழ்வழியில் படித்தவர்கள் தகர்க்க முடியாத சாதனைகளை இத்தேர்வுகளில் படைத்துள்ளனர். அஞ்சல் வழியில் படித்தவர்கள் பிறர் அஞ்சும் அளவிற்கு சாதனை வெற்றியை அடைந்துள்ளார்கள்.

அரசுப் பள்ளியில் படித்தேன் என்ற அச்சம் வேண்டாம். அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்தாம் இத்தேர்வுகளில் அளப்பரிய வெற்றியினைப் பெற்றவர்கள். எல்லாவற்றிற்கும் ஆதாரம் உண்டு. இவை வெற்று வார்த்தைகளல்ல.

கிராமப்புறத்தில் இருந்து இத்தேர்வுகளுக்குத் தயாராக சென்னை, டெல்லி போன்ற நகரங்களுக்கு வந்து தீவிரமான பயிற்சினை மேற்கொண்டு இறுதிவரை போராடி இமாலய வெற்றி பெற்றதைப் பார்த்திருக்கின்றேன். அவர்கள் பதித்து வைத்த நம்பிக்கைச் சுவடுகளை உங்களுக்குப் பகிரவும் இருக்கின்றேன்.

அதே வேளையில் இதுபோன்ற பெரு நகரங்களுக்கு வந்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை இன்று மாறிவிட்டது. நீங்களாகவே சுயமுயற்சியோடு படித்து வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளையும் இக்கட்டுரைத் தொடர் விளக்கும்.

இவையெல்லாம் எப்படிச் சாத்தியம்? நாமும் சாதிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வி உங்களிடம் எழும். இதற்கு ஒரே பதில் தகுதியை வளர்த்தல்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.