ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

நூலக அறிவியலில் பட்டப் படிப்பு!

உலகம் என்பது முன்பு, புத்தகங்கள், உலக வரைபடங்கள் போன்றவற்றைச் சேகரித்து வைத்திருக்கும் இடம் என்பதாக மட்டுமே இருந்தது.

News image
Updated On :12 ஏப்ரல் 2016, 4:52 am

ஜெ. வீரநாதன்

உலகம் என்பது முன்பு, புத்தகங்கள், உலக வரைபடங்கள் போன்றவற்றைச் சேகரித்து வைத்திருக்கும் இடம் என்பதாக மட்டுமே இருந்தது. ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால், நூலகம் என்பது புத்தகங்கள், வரைபடங்கள் மட்டுமல்லாது, ஒலி நாடாக்கள், காணொளி பதிவுகள், ஒலி-ஒளி குறுவட்டுகள், மின்னூல் குறுவட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வெளிப்பாடுகளையும் சேகரித்து வைக்கும் இடமாகத் திகழ்கின்றன.

அத்துடன் கடந்த ஒரு தலைமுறைக்கு முன்பாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இணையம் என்பதும் நூலகங்களில் இடம் பிடித்துவிட்டது. இணையம் வழியாக தகவல்களைத் தேடிக் கண்டு பிடிக்கப்படும் இடமாகவும் நூலகங்கள் செயல்படுகின்றன.

இன்று நூலகம் என்பது, அரசால் மட்டுமே நடத்தப்படுவதில்லை. எல்லா இடங்களிலும் அமைக்கப்படுகின்றன.

வாழ்க்கையின் அவசியங்களுள் இதுவும் ஒன்றாக மாறிவிட்டதால், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்விச் சாலைகளில் கண்டிப்பாக நிறுவப்படுகின்றன.

அதுமட்டுமல்லாது, பத்திரிகைகள், இதழ்கள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களிலும், தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட பல ஊடக நிலையங்களிலும் நூலகங்கள் அவசியமாகிவிட்டன.

செய்திகள், தகவல்கள் தேவைப்படும் பெரிய, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வழக்கறிஞர்களின் கூடங்கள், நீதிமன்றங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள், அருங்காட்சியகங்கள் போன்ற இடங்களிலும் நூலகங்கள் செயல்படுத்தப் படுகின்றன.

தற்போது பல தனி நபர்களும், கூட்டமைப்புகளும், தங்களது சொந்த முயற்சியால் நூலகங்களைத் துவங்கி நடத்தி வருகின்றன. இவை தவிர, வணிக நோக்கிலும் நூலகங்கள் நடத்தப்படுகின்றன.

எத்தனை மின்னணு ஊடகங்கள் வந்தாலும் அச்சிட்ட புத்தகங்களின் தேவை குறையாது என்பதற்கு இப்படி பெரிய அளவில் வளர்ந்துவரும் நூலகத் துறையும், புதிதாக உருவாக்கப்படும் நூலகங்களும் சாட்சிகளாக இருக்கின்றன.

நூலகங்களில், நூலகர் என்ற நபரின் தலைமையில் பல பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நூலக உதவியாளர்கள், உதவி நூலகர், துணை நூலகர், நூல்களை வரிசைப்படுத்துபவர், நூல்களைத் தெரிவு செய்பவர், தொழில்நுட்ப உதவியாளர், நூலக இயக்குநர் என்பது உள்ளிட்ட பல பதவிகளில் பல நபர்களின் பங்களிப்பு உள்ளது.

என்றாலும் நூலகர் என்பவரும், நூலகங்களில் பணிபுரிபவர்களும், ஏதோ கடமைக்கும், சம்பளத்திற்கும் பணிபுரிபவர்களாக இருப்பதில்லை. அது ஓர் ஆத்மார்த்தமான பணி.

அரசு நடத்தும் நூலகங்கள் உட்பட பல்வேறு நூலகங்களில் பணி புரிவதற்காக மட்டுமல்லாது, அநேகமாக தற்போது தனிநபர்கள் தங்கள் வீடுகளிலேயே தொடங்கும் நூலகங்களைப் பராமரிப்பதற்கும், நூல்களை வரிசைப்படுத்தி வைப்பதற்கும் நூலக அறிவியல் என்ற படிப்பைப் படித்து வைத்திருப்பது நல்லது.

தற்போதைய +2விற்குப் பிறகு ஆறுமாத காலம் நடத்தப்படும் நூலக அறிவியல் சான்றிதழ் படிப்பைப் படிக்கலாம். அல்லது ஏதேனும் ஒரு பட்டம் பெற்றுள்ள நிலையில், தொடர்ந்து நூலக அறிவியலில் பட்டப் படிப்பை முடிக்க வேண்டும்.

ஒரே ஆண்டில் கிடைக்கும் ஒரே பட்டப்படிப்பு நூலக அறிவியலாகத்தான் இருக்கும். இதன் தொடர்ச்சியாக ஓர் ஆண்டு படிப்பான முதுநிலை பட்டப்படிப்பையும் முடிக்கலாம்.

இந்த மூன்று நிலைகளையும் தற்போது அஞ்சல் வழியிலும் படிக்க முடிகிறது. மதுரை காமராசர் பல்கலைக் கழகம், அண்ணாமலை பல்கலைக் கழகம் உள்ளிட்ட சில பல்கலைக் கழகங்கள் அஞ்சல் வழியில் இந்த நூலக அறிவியல் படிப்புகளை வழங்குகின்றன.

அதன் பிறகு தொடர்ந்து நூலக அறிவியலில் எம்.ஃபில்., பிஎச்.டி., பி.லிட்., படிப்புகளும் உள்ளன.

இந்த நூலக அறிவியல் படிப்பை முடித்தவர்களுக்கு நூலகங்களில் வேலை வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் வளர்ந்து வரும் நூலகத்துறை மற்றும் நூலகங்களின் நிலை, வேலை வாய்ப்பு, நூலகங்களில் பணி

புரியும் நபர்கள் பற்றிய விவரங்களை http:employmentnews.gov.in CAREER_NFORMATION_SCIENCE.asp என்ற வலைதளத்தில் பார்த்து அறியலாம்.

நூலகர் என்பவர், நூலகத்தை நாடிவரும் ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கானவை கிடைப்பதற்கு உதவிபுரிபவராக இருக்கின்றார். செய்திகள், தகவல்கள், தொழில்நுட்பம் போன்றவற்றில் தன்னை அன்றைய நாள்வரைக்கும் இற்றைப்படுத்தியுள்ளவராக விளங்குகின்றார். தனது பணியிடத்தில் உள்ள நூல்கள், குறுவட்டுகள் உள்ளிட்ட ஒவ்வொன்றையும் பயன்படுத்தும் வழிமுறைகளை எடுத்துச் சொல்பவராகப் பணியாற்றுகிறார்.

இந்திய அரசிலும், இந்தியாவெங்கிலும் நூலகங்களில் உள்ள பணியிடங்கள் பற்றிய செய்திகளை http:www.naukri.comlibrarian-jobs  என்ற வலைதளத்தில் பார்த்து அறியலாம்.

இப்படி நூலகத்தில் பணி புரிய விருப்பம் இல்லையென்றால், நூலகம் தொடர்பாக சுய தொழிலைத் துவங்கலாம். வாடகை நூலகம் துவங்கலாம் நூல்களை வந்து வாங்கிச் செல்லுபவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை வாடகையாகப் பெற்றுக் கொண்டு படிக்கக் கொடுத்து வாங்கலாம். வீடுகளுக்குக் கொண்டு சென்று புத்தகங்களைக் கொடுத்து வாங்கலாம்.

சேவை மனப்பான்மை உள்ளவர்கள் நடமாடும் நூலகத்தை உருவாக்கி, கிராமத்து மக்கள் பயன்பெரும் வகையில் செயல்படுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.