

புரொபஸரும் கணேஷும் ஒரு மின்மயானத்துக்கு வெளியே நிற்கிறார்கள். அவரது நாய் ஜூலி எதிரில் உள்ள மாநகராட்சி தண்ணீர் தொட்டியின் கீழ் படுத்துக் கிடக்கிறது தன்னைச் சுற்றிப் பறக்கும் ஈயைக் கடிக்க முயல்கிறது. அவருக்கு பரிச்சயமானவர்கள் வருகிறார்கள். அவர்களும் அவரைப் போன்றே வயதானவர்கள். அவரிடம் வந்து சோகமாய்ப் பேசி விட்டு போகிறார்கள். எல்லாரும் தவறாமல், ""இன்னும் ஆரம்பிக்கலையா?'' எனக் கேட்கிறார்கள்.
கணேஷ்: ஏன் எல்லாரும் ஆரம்பிக்கலையானே கேட்கிறாங்க?
புரொபஸர்: எரிக்க ஆரம்பிக்கலையான்னு தான். நாலு மணிக்கு போன கரெண்டு இன்னும் வரலையே. மேளமெல்லாம் அடிச்சு பாடையை ஜோரா தூக்கி வந்தாச்சு. ஆனால் சேஷாச்சலம் பாவம், இன்னும் எரிக்கிற மெஷின் பக்கத்திலையே வெயிட் பண்ணிக் கிட்டு இருக்கான்.
கணேஷ்: சேஷாச்சலமா?
புரொபஸர்: அவன் தான்டா செத்துப் போன என் சிநேகிதன். ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரை என் கூட படிச்சவன். ரொம்ப துடிப்பானவன். ஒரு விநாடி ஒரு இடத்தில சும்மா இருக்க மாட்டான்.
கணேஷ்: சார் பாடைக்கு இங்கிலீஷ்ல என்ன?
புரொபஸர்: bier. உச்சரிப்பு பியர் போல. பி-யெ
கணேஷ்: எரிக்கிறதுன்னா funeral தானே சார்?
புரொபஸர்: இல்ல. ஈமச்சடங்கு தான் funeral. எரிக்கிறதுக்கு மட்டுமுன்னா அதுக்கு வேற வார்த்தை இருக்கு. Cremate. He was cremated in an electronic crematorium.. அந்தச் செயலை cremationன்னு சொல்வோம்.
அப்போது முதியவர் ஒருவர் தள்ளாடியபடி கைத்தடியை ஊன்றி வருகிறார்.
புரொபஸர் (அவரைப் பார்த்து) : சடகோபா இப்பத் தான் வர்றியா?
சடகோபன்: ஆமா. (கணேஷைக் காட்டி) இது யாரு உன் பையனா?
புரொபஸர்: என் பையன் மாதிரி. என் ஸ்டுடெண்ட். கணேஷ்.
சடகோபன்: Hello young man. So what is up
கணேஷ் தயங்கியபடி வணங்குகிறான்.
சடகோபன்: என் பேச மாட்டேங்குற? Cat got your tongue
கணேஷ்: நீங்க கேட்டது புரியல. அதான்
சடகோபன்: உங்க வாத்தியார் சொல்லித் தரலையா? ஒருத்தர் ரொம்ப கூச்சப்பட்டோ இல்ல விருப்பமில்லாமலோ பேசாம இருந்தால் has cat got your tongueன்னு கேட்கலாம்.
கணேஷ்: தாங்க்ஸ் சார். முதல்ல எதுவோ ன்ல்ன்னு கேட்டீங்களே?
சடகோபன்: அதுவா What is upன்னா எப்பிடி இருக்கேன்னு அர்த்தம். இது சம்பந்தமா இன்னொரு idiom நினைவு வருது. A cat in gloves catches no mice. அதாவது துணிச்சல் இல்லேன்னா எதையும் சாதிக்க முடியாது. முடிவெடுக்க பயந்து கிட்டே இருக்கிறது, ஒரு பூனை கையுறை அணிஞ்சிக்கிட்டு எலி புடிக்கிற மாதிரி.
அப்போது ஒரு வயதான பெண் அவர்களுக்கு மறுபக்கமாய் குடை பிடித்தபடி வந்து நிற்கிறார். சடகோபன் கண்ணை சுருக்கி அவரைப் பார்க்கிறார்.
சடகோபன்: அது கோமளவல்லி இல்ல?
புரொபஸர்: ஆமா. இப்பவாச்சும் வந்தாளே
கணேஷ்: ஏன் சார்?
சடகோபன்: உள்ளே இருக்கானே சேஷாச்சலம் அவனோட old flame இவள்.
கணேஷ்: அதென்ன சார்?
சடகோபன்: that is பழைய காதலி. Former lover.
புரொபஸர் (சற்று எரிச்சலாக): Former loverன்னே சொல்லலாமே அதென்ன flameன்லாம் சொல்லிக்கிட்டு.
சடகோபன்: இவனுக்கு ஒண்ணும் தெரியாது. ரெண்டுக்கும் முக்கியமான வித்தியாசம் இருக்கு. Former loverன்னா முன்னாடி காதலி ஒருத்தர். அவரை நமக்கு இப்போ பிடிக்காமக் கூட இருக்கலாம்.
ஆனா old flameன்னா அப்பிடி இல்ல. இப்பவும் அவங்களை நினைச்சா நமக்கு மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கும். சந்தோசமாவோ வருத்தமாவோ இருக்கும்.
கணேஷ்: சார் உங்க ரெண்டு பேரையும் பார்த்தா ஒரு பிரண்டு செத்த துக்கமே தெரியல. You dont look worried.
சடகோபன்: என்ன இப்பிடிச் சொல்லிட்டே? சேஷாச்சலத்துக்கு நாங்க மட்டும் தான் பிரண்ட்ஸ்
கணேஷ்: இத்தன பேரு அவரை பாக்கிறதுக்கு வந்திருக்காங்களே?
சடகோபன்: அவங்க எல்லாம் acquintances அதாவது பரிச்சயம் உள்ளவங்க. நண்பர்கள். அப்புறம் இன்னொரு விசயம் அது worried இல்ல.
கணேஷ்: ம்ம்ம் sorrow... Sorrowful
சடகோபன்: இல்ல தப்பு
கணேஷ்: ஆங்!
புரொபஸர்: அது பேரு grief. ஒருத்தர் இறந்தா ஏற்படுற துக்கம் தான் grief.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும்

வாக்குப் பதிவு மையங்களில் அடிப்படை வசதிகளை செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

பரமபதம் விளையாட்டு மூலம் தோ்தல் விழிப்புணா்வு

செண்பகராமன்புதூரில் டாஸ்மாக் கிடங்கு முற்றுகை
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

