பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பாராளுமன்றச் செயலகங்களில் வேலைவாய்ப்புகள்!

பாராளுமன்றச் செயலகங்களில் பலவிதமான பதவிகள் எப்போதும் காத்திருக்கின்றன'' என்கிறார் ஓய்வு பெற்ற மத்திய தொலைத் தொடர்புத்துறை இயக்குநர் (பாராளுமன்றம்) என்.எம்.பெருமாள். அவர் மேலும் கூறியது:

News image
Updated On :13 ஜூன் 2016, 2:35 pm

வி.குமாரமுருகன்

பாராளுமன்றச் செயலகங்களில் பலவிதமான பதவிகள் எப்போதும் காத்திருக்கின்றன'' என்கிறார் ஓய்வு பெற்ற மத்திய தொலைத் தொடர்புத்துறை இயக்குநர் (பாராளுமன்றம்) என்.எம்.பெருமாள். அவர் மேலும் கூறியது:

"" இந்திய குடியரசுத்தலைவரைத் தலைமை அங்கமாகக் கொண்டு விளங்குபவை மக்களவையும் (Lok Sabha) மாநிலங்களவையும் (Rajya Sabha) ஆகும். இரு அவைகளுக்கும் தனித்தனியே செயலகங்கள் (Secretariat) உள்ளன. இவ்விரு செயலகங்களிலும் பல்வேறு நிலைகளில் பலவிதமான பணிகள் உள்ளன. இரு அவைகளுக்கும் சேர்ந்தே ஓர் ஆட்சேர்ப்பு பிரிவு (Joint Recruitment Cell) உள்ளது. இப் பிரிவு அவ்வப்போது பல்வேறு வேலைகளுக்காக ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

மாநிலங்களவை செயலகத்தில் பல்வேறு பதவிகள் உள்ளன. அவைகளில் பொதுப்படையானவைகளில் சில.

i) Legislative  Committee  Protocol - Executive Officer   ii) Legislative  Committee  Protocol - Executive Asst iii) Junior Clerk  iv) Stenographer  v) Interpreter   vi) Security Officer  Assistant போன்றவை.

செயலகத்தில் தற்போது அநேக பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு உள்ளது. அது போன்று Executive Asst பதவிக்கும் முதல்

நிலைத் தேர்வு உள்ளது. இத்தேர்வில் புத்திக்கூர்மை, பொது அறிவு, ஆங்கிலம் மூன்றும் உண்டு. இரண்டாம் நிலைத் தேர்வில் ஆங்கிலம் ஒரு தாள், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றொரு தாள் என இரண்டு தாள்கள் உண்டு. இரண்டு தாள்களும் கட்டுரை வடிவில் எழுத வேண்டும். இவை கொள்குறி வகையைச் சார்ந்தவை அல்ல. அதே போன்று கீழ்நிலை எழுத்தர் (Junior Clerk) தேர்விலும் இரண்டு நிலைகள் உள்ளன. இத்தேர்விலும் இரண்டாம் நிலையில் ஒரு தாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆகும்.

மக்களவை செயலகத்திலும் கிட்டத்தட்ட இதே மாதிரி பதவிகள் உள்ளன. இதைப் பற்றிய விவரங்களைப் பாராளுமன்ற இணையம் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். அநேக பதவிகளுக்கு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என்று இருக்கும். முதல்நிலைத் தேர்வில் புத்திக் கூர்மை, அறிதிறன், பொது அறிவு, ஆங்கிலம் போன்றவைகளில் கேள்விகள் இருக்கும். முதன்மைத் தேர்வில் பொது அறிவைத் தவிர இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் அதிக மதிப்பெண்கள் இருக்கும். துறை சார்ந்த தாள்களும் இருக்கும். எடுத்துக் காட்டாக, நூலகம் சார்ந்த பதவிகளில் நூலகவியலில் தனித் தாள்கள் இருக்கும்.

மிகமிக இளவயதிலேயே மக்களவை செயலகத்தில் ஓர் அதிகாரியாக (Legislative Committee  Protocol  Executive Officer) நீங்கள் சேர்ந்தால், வேலையில் திறமையுடன் நீங்கள் செயலாற்றினால், உயர் பதவிகள் உங்கள் வாழ்க்கையில் அமையலாம். சட்டம், ஆங்கில இலக்கியம் பயின்றவர்களும், ஓரளவு ஆங்கிலப் புலமை வாய்ந்த பட்டதாரிகளும் அரசு வேலைகளில் சேர விருப்பமிருந்தால் கண்டிப்பாக எழுத வேண்டிய தேர்வுகள் பாராளுமன்ற செயலகத் தேர்வுகள் ஆகும்.

அதிலும் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர்கள் கண்டிப்பாக எழுத வேண்டிய தேர்வு, பாராளுமன்ற செயலகத்துறை தேர்வுஆகும். குறிப்பாக அவர்கள் பொது அறிவையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினையும் ஆழ்ந்து படித்தால் வெற்றிக் கனியைப் பறிப்பது மிகவும் எளிதான செயலாகும். ஒரு சில நேரங்களில் நிரப்பப்பட வேண்டிய பதவிகள் மிகக் குறைந்த அளவே இருக்கும். அதைப்பற்றிக் கவலைப்படாமல் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும்.

பாராளுமன்ற செயலகத் தேர்வுகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆழ்ந்த அறிவு தேவை. பள்ளி நூல்களைத் தவிர தொடக்க நிலையாக என்.எம். பெருமாளின், இந்திய அரசியலைமைப்புச் சட்டம் (தமிழில் கேள்வி பதில் வடிவில் உள்ளது) மற்றும் க. வெங்கடேசன் எழுதிய இந்திய அரசியலமைப்பு போன்ற நூல்களைப் படிக்கலாம். ஈஈ. ஆஹள்ன் எழுதியுள்ள DD. Basu GݧÙs[ An Introduction to the Constitution of India என்ற நூலை கண்டிப்பாகப் படிக்கவும். இதைத் தவிர முன்னாள் மக்களவை செக்ரடரி ஜெனரல் Subash Kashyab எழுதியுள்ள Our Constitution மற்றும் பேராசிரியர் M.V. Pylee எழுதியுள்ள Indian Constitution என்ற நூல்களைப் படிக்கவும். இந்நூல்களைப் படித்தால் பாராளுமன்ற செயலகத்தில் உயர்நிலை வேலைகளுக்குண்டான தேர்வில் } இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கென்றே இருக்கும் ஒரு தாளில் } கட்டுரை வடிவில் பதில் எழுத வேண்டிய கேள்விகளுக்கு விடை எழுத வசதியாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கென்றே Competition Success Review,pratiyogita Darpan, Competition Wizard போன்ற நூல்கள் வருகின்றன.

நாளிதழ்களில் அரசியலமைப்புச் சட்டத்தோடு தொடர்புடைய கட்டுரைகள் வரும். அவற்றைப் படித்து தங்களது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பாராளுமன்ற செயலகத்தில் வேலை செய்பவர்களுக்கு அங்கு இருக்கும் மற்ற பதவிகளில் போட்டியிட வயது வரம்பு கிடையாது. இது ஓர் அருமையான வாய்ப்பாகும். எடுத்துக்காட்டாக ஓர் இளைஞர் இளநிலை எழுத்தராக பாராளுமன்ற செயலகத்தில் வேலைக்குச் செல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் சுருக்கெழுத்து கற்றோ, நூலகவியல் பட்டம் பெற்றோ தங்களது பாதைகளை மாற்றிக் கொள்ளலாம். பாராளுமன்றத்தில் ஒரு பெரிய நூலகம் உள்ளது. அதனால் நூலகவியல் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. அதே மாதிரி சுருக்கெழுத்துத் துறையிலும் அதிக அளவு வேலைவாய்ப்பு இருப்பதால் செயலகத்தில் சேர்ந்த பின்பு அதிலும் புலமை பெறுவது வாழ்க்கையில் உயர்நிலை அடைவதற்கு வழிவகுக்கும்.

எந்த இளைஞரும் ஓர் அலுவலகத்தில் சேரும் பொழுது அந்த அலுவலகத்தின் மற்ற பிரிவுகளில் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன? எப்படி தன்னைத் தயார் செய்து கொள்ளலாம்? என்று யோசிக்க வேண்டும். அதற்கு தகுந்தவாறு தங்களைத் தயார்படுத்தி நல்ல வேலைகளுக்கு முயலவேண்டும்'' என்றார் பெருமாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.