பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள்!
ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் (Steel Authority of India Limited)


சென்ற வார தொடர்ச்சி..
ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் (Steel Authority of India Limited)
பி.இ. பட்டம் பெற்றுள்ள பொதுப்பிரிவினர்/ ஓபி.சி-யினர் 65 சதவிகித மதிப்பெண்களும் எஸ்.சி/எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகள், துறை சார்ந்து தேர்வு எழுதுவோர் பொறியியல் பட்டத்தில் 55 சதவிகித மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இந்நிறுவனம் சார்பாக நடத்தப்படும் எழுத்துத் தேர்விலும் நேர்முகத்தேர்விலும் வெற்றி பெறுவோர்க்கு பணி வாய்ப்பு வழங்கப்படும்.
இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேசன் (Indian Space Research Organisation)
இந்நிறுவனத்தில் வேலைவாய்ப்புப் பெற பி.இ/பி.டெக். ஆகியவற்றில் ஏதாவதொன்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், கல்வி நிறுவனத்தில் 65 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இந்நிறுவனம் சார்பாக நடத்தப்படும் எழுத்துத் தேர்விலும் நேர்முகத்தேர்விலும் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு வெற்றி பெறுவோருக்கு பணிவாய்ப்பு வழங்கப்படும்.
டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் (Delhi Metro Rail Corporation)
இந்நிறுவனத்தில் பணி வாய்ப்புப் பெற விரும்புவோர் பி.இ/பி.டெக் ஏதாவதொரு படிப்பில் 70 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வில் வெற்றி பெற்றிருப்பதுடன், இந்நிறுவனம் நடத்தும் குழு விவாதத்திலும் நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்றால் பணிவாய்ப்பு வழங்கப்படும்.
விசாக் ஸ்டீல் பிளாண்ட் (Vizag Steel Plant)
இந்நிறுவனத்தின் தேர்வை எழுத விரும்புவோர் பி.இ / பி.டெக் ஏதாவதொரு படிப்பில் பொதுப்பிரினரும் ஓபிசி பிரிவினரும் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். இந்நிறுவனத்தில் பணிவாய்ப்புப் பெற இந்நிறுவனம் நடத்தும் எழுத்துத் தேர்விலும் குழு விவாதத்திலும் நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.
ஹெவி இஞ்சினியரிங் கார்ப்பரேசன் லிமிடெட் (Heavy Engineering Corporation Limited)
இத்துறையில் பணிவாய்ப்புப் பெற பி.இ/பி.டெக்/எ.எம்.ஐ.இ. படித்துள்ளோர் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் இந்நிறுவனம் நடத்தும் நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்றால் பணி வாய்ப்புக் கிடைக்கும்.
டெல்லி டெவலப்மெண்ட் அதாரிட்டி (Delhi Development Authority)
இத்துறையில் பணிவாய்ப்புப் பெற பி.இ/பி.டெக்/எ.எம்.ஐ.இ ஆகிய படிப்புகளில் ஏதாவதொன்றில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வில் வெற்றி பெற்றிருப்பதுடன் இந்நிறுவனம் நடத்தும் நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்றால் பணி வாய்ப்புக் கிடைக்கும்.
எலக்ட்ரானிக்ஸ் கார்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் (Electronic Corporation of India Limited)
பொறியியல் படிப்பில் 65 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகள் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இத்துறையில் பணியாற்ற விரும்புவோர் இத்துறை நடத்தும் எழுத்துத் தேர்விலும் நேர்முகத்தேர்விலும் வெற்றி பெற்றால் பணிவாய்ப்பு வழங்கப்படும்.
ஒடிசா பவர் ஜெனரேசன் கார்ப்பரேசன் லிமிடெட் (Odisha Power Generation Corporation Limited)
இத்துறையில் பணிவாய்ப்புப் பெற விரும்புவோர் பி.இ/பி.டெக்/எ.எம்.ஐ.இ. ஆகிய படிப்புகளில் ஏதாவதொன்றில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இத்துறை சார்பாக நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றால் பணிவாய்ப்பினைப் பெறலாம்.
தாஸ்கின் குஜராத் விஜ் கம்பெனி லிமிடெட் (Dakshin Gujarar Vij.Company Limited)
இத்துறையில் பணியில் சேர விரும்புவோர் பி.இ/பி.டெக் ஆகிய படிப்புகளில் ஏதாவதொன்றில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகள் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. இத்துறை நடத்தும் எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுவதுடன் இத்துறை நடத்தும் நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்றால் பணிவாய்ப்புக் கிடைக்கும்.
ராஜஸ்தான் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (Rajasthan Public Service Commission)
ஆர்.பி.எஸ்.சி நடத்தும் பொறியியல் சார்ந்த பணிக்கான வேலை வாய்ப்பினைப் பெறுவதற்குக் குறைந்த பட்ச கல்வித் தகுதியாக பி.இ/பி.டெக் படிப்புகளில் ஏதாவதொன்றில் 60 சதவிகித மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். ஆர்.பி.எஸ்.சி நடத்தும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வுகளில் தேர்ச்சி அடைவோருக்குப் பணி வாய்ப்பு வழங்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...