நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம்... 34

புரொபஸரும் கணேஷும் எல்.ஐ.சி அலுவலகத்தில் இருக்கிறார்கள். அங்கு வேலை செய்யும் நண்பர் பக்ஷிராஜனை புரொபஸர் சந்திக்கிறார்.

News image
Updated On :2 மே 2016, 2:55 pm

ஆர்.அபி​லாஷ்

புரொபஸரும் கணேஷும் எல்.ஐ.சி அலுவலகத்தில் இருக்கிறார்கள். அங்கு வேலை செய்யும் நண்பர் பக்ஷிராஜனை புரொபஸர் சந்திக்கிறார்.

பக்ஷிராஜன் ஒரு மேஜை முன் அமர்ந்து ஓர் ஆங்கில நாளிதழைக் கையில் லென்ஸ் வைத்து பார்த்து, திருத்திக் கொண்டிருக்கிறார்.

புரொபஸர் (அவரிடம்): என்னடா பட்சி? ஏதாவது புதையல் மேப்பா?

பக்ஷிராஜன் நிமிர்ந்து பார்த்து சிரிக்கிறார்: டேய் வா வா. இது யாரு உன் பின்னாடி விக்கெட் கீப்பர் மாதிரி ஒருத்தன் ஒளிஞ்சு ஒளிஞ்சு வரான்

புரொபஸர்: இது கணேஷ்

பக்ஷிராஜன்: ஹாய். கணேஷ்-வசந்தில வர கணேஷா?

புரொபஸர்: அப்பிடியும் வச்சுக்கலாம்

புரொபஸர் (கணேஷிடம்): இது பக்ஷிராஜன். பெரிய துப்பறியும் நிபுணன். ஒரு இங்கிலிஷ் பேப்பர் விடாம படிச்சு, அதில வர பிழையெல்லாம் லிஸ்ட் போட்டு எடிட்டருக்கு காகிதம் போடுவான். அது தான் இவன் மெயின் வேலையே...

பக்ஷிராஜன்: இதைப் பாரேன் இப்போ தான் படிச்சேன். Huge blunder. Its a serious blooper.

கணேஷ்: சார் blunderன்னா தப்பு தானே?

பக்ஷிராஜன்: சாதா தப்பில்ல. இது ஸ்பெஷல் மசாலா தோசை தப்பு. வேடிக்கையான முட்டாள்தனமான தப்பு. Blooper, bloomer, howler, botch, slip-up, debacle, fiasco

புரொபஸர்: ஒரு கட்சித் தலைவர் தன் வேட்பாளர் பெயரைத் தவறா உச்சரிக்கிறது mistake. அவர் தேர்தல் தேதியையே தப்பா சொன்னா அது ஒரு fiasco, ஒரு blooper. ஏன்னா கட்சித் தலைவர் லெவல்ங்கிறது தனி.

பக்ஷிராஜன்: சரி, இந்த பேப்பர்ல எழுதி இருக்கிறத படிக்கிறேன் கேளு: the opposition party leader made a point that his party is going to clinch victory in the coming polls. ஹி ஹி தமாஷா இல்ல?

கணேஷ்: இதில எனக்கு ஒண்ணும் தப்பா படலையே?

பக்ஷிராஜன்: அந்த வாக்கியமே சுத்த அபத்தம். இரண்டு tenses அதுவும் present and past tense சேர்ந்து எப்படி ஒரே வாக்கியத்தில வரலாம் சொல்லு. அது மட்டுமில்ல reported speechஇல?

கணேஷ்: சார் reported speechன்னா என்ன?

பக்ஷிராஜன்: துப்பாக்கிக்கு உள்ள புகுந்து சுடப்பாக்குறியே கணேஷ்

கணேஷ்: ஆங்!

புரொபஸர்: நீ அவசரப்படுறியாம். அது ஆங்கிலத்தில உள்ள ஒரு idiom. Jump the gun. அதை பக்ஷி தமிழ்ல மொழிபெயர்த்து சொல்றான். Jump the gun என்றால் அவசரக்குடுக்கையா செயல்படுறது. ரேஸ்ல போட்டி துவங்குறதுக்கு அறிகுறியா துப்பாக்கியால மேலே சுடுவாங்க. ஆனா அதுக்கு முன்னாடியே ஒருத்தர் ஓட ஆரம்பிக்கிறதை he jumped the gunன்னு சொல்லலாம். சொல்லப் போனா ஓட்டப் பந்தயத்தில உள்ள இந்த பழக்கத்தை வச்சு தான் இந்த இடியம் உருவாகி

இருக்கணும்.

பக்ஷிராஜன்: மந்திரம் சொல்ல ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி தாலி கட்டுறது, ஆம்புலன்ஸில போற வழியிலே புட்டுக்கிறது.

புரொபஸர்: இவன் இப்பிடித் தான் அபத்தமா உதாரணம் கொடுப்பான். ஏன்டா பக்ஷி இந்த பழக்கத்தை நீ விட்டொழிக்கலையா? சரி விடு. நான் உனக்கு reported speechன்னா என்னெண்ணு விளக்குறேன். இரண்டு பேர் இடையிலான உரையாடலை எழுத்தில எப்படி எல்லாம் சொல்லலாம்?

கணேஷ்: இவர் இப்பிடி சொன்னார்னு சொல்லலாம். அப்புறம் நேரடியாவும் சொல்லலாம், அதாவது quotation marks  உள்ளே போட்டு.

புரொபஸர்: உதாரணம் சொல்லு

கணேஷ்: டேய் இங்க வா, அவர் சொன்னார். அப்புறம் இதையே ஒரு வாக்கியமா சொல்லலாம். இங்க வான்னு அவர் சொன்னார்.

புரொபஸர்: சரி தான். ஆனா ரெண்டு தப்பு இருக்கு. 1) இங்கே வான்னு இருக்கிறதை வாக்கியமா சொல்லும் போது அங்கேன்னு மாத்துவோம். 2) டேய்ங்கிறதோட அர்த்தத்தை எப்படி கொண்டு வருவே?

கணேஷ்: மிரட்டினார்.

புரொபஸர்: இல்ல. அவர் உன்னை ஆணையிடுறார். மிரட்டுறதுன்னா படவா அடி வாங்கப் போறேன்னு சொல்றது. இது அதிகாரமா கூப்பிடறது. அங்கே செல்லும் படி அவர் ஆணையிட்டார். இது தான் சரி. இப்போ நீ முதல்ல quotation marksக்கு உள்ளே நேரடியா சொன்னது direct speech.  அதையே வாக்கியமா சொன்னது reported speech. சரி நீ சொன்ன உதாரணத்தையே இங்கிலீஷ்ல சொல்லு பார்க்கலாம்.

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.