நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம்... 35

ரொபஸர் கணேஷுக்கு reported speech என்றால் என்னவென விளக்குகிறார். முதலில் ""டேய் இங்க வா என அவர் சொன்னார்'' என்பதை reported speech-இல் திரும்ப சொல்லும்படி கேட்கிறார்.

News image
Updated On :9 மே 2016, 2:58 pm

ஆர்.அபி​லாஷ்

(போன வாரத்தில்)

ரொபஸர் கணேஷுக்கு reported speech என்றால் என்னவென விளக்குகிறார். முதலில் ""டேய் இங்க வா என அவர் சொன்னார்'' என்பதை reported speech-இல் திரும்ப சொல்லும்படி கேட்கிறார். கணேஷ் அதை, ""இங்கே வா என்று சொன்னார்'' என்று சொல்ல, புரொபஸர், ""அங்கே செல்லும்படி அவர் ஆணையிட்டார்'' எனச் சொல்வதே சரி என திருத்துகிறார். அடுத்து இந்த வாக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்படி கேட்கிறார்.

(இனி வருவது)

கணேஷ்: He said to him come here

புரொபஸர்: நீ சொல்லி இருக்கிற வாக்கியம் க்ண்ழ்ங்ஸ்ரீற் ள்ல்ங்ங்ஸ்ரீட். அதாவது நேரடியான பேச்சு. அதில் பேச்சு quotation marks உள்ளே இருக்கும். பெரும்பாலும் அதில் உள்ள பேச்சு நிகழ்காலத்திலும், அந்தப் பேச்சை ரிப்போர்ட் செய்கிற வாக்கியம் கடந்த காலத்திலும் இருக்கும். நீ சொன்ன வாக்கியத்தில He said to him கடந்த காலத்தில் இருக்கும். ஆனா come here நிகழ்காலத்தில் இருக்கும். இதையே நீ reported speechக்கு மாத்தும் போது இரண்டு வாக்கியங்களும் ஒரே காலத்தில், அதாவது ஒரே டென்ஸில் இருக்கணும். Quotation marks அல்லது inverted commas ஐ நீக்கி விடணும்.

கணேஷ்: சார்... இது ரொம்ப சிக்கலா தோணுதே?

புரொபஸர்: ஆமா சிக்கல் தான். ரிப்போர்டட் ஸ்பீச் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் ஓர் அதிகாரபூர்வமான கடிதம் எழுதும் போதும், அறிக்கை தயாரிக்கும் போதும் ரிப்போர்ட்டட் ஸ்பீச் தான் பயன்படுத்தணும். அது கெüரவமா, தகவல்பூர்வமா இருக்கும். உதாரணமா நீ ஒரு விபத்தைப் பார்க்கிறே. அதை ஒரு அறிக்கையா எழுதி சமர்ப்பிக்கிறே. ஒரு லாரி வேகமா வந்திச்சு. அப்போ ரோட்டில குறுக்கே வந்த ஆள் மேலே அது ஏறிடுச்சின்னு நீ எழுதினா, அது உன் பார்வையில சொல்கிற கதை. அது தப்பாவும் இருக்கலாம், இல்லையா? அதனால ரிப்போர்டட் ஸ்பீச்சில நீ அதை எழுதலாம். ரோட்டில் வேகமா வந்த லாரி ஏறி, ஒருவர் கொல்லப்பட்டார். இங்க யார் மேல குற்றம்? லாரி டிரைவர் மேலா? அல்லது சாலையில் நடந்து வந்தவர் மேலா? என்று நாம் சொல்லப் போறதில்ல. இதில் நம் சார்பு எதுவும் தெரியாது. இதனால தான் ஆங்கிலத்தில் ரிப்போர்ட்டட் ஸ்பீச் ரொம்ப முக்கியம். நிருபரா இருக்கிறவங்க, கட்டாயமா அதை தெரிஞ்சு வச்சுக்கணும். சரி, இப்போ அந்த தமிழ் வாக்கியத்தை ஆங்கிலத்தில் சொல்லு.

கணேஷ்: He said to him come here.

புரொபஸர்: இரண்டு வாக்கியத்தையும் இணைக்க நடுவில் ஒரு ற்ர் வேணும்.

கணேஷ்: He said to him to come here

புரொபஸர்: ம்ஹும் இப்பவும் தப்பு. வேறெப்படி சொல்லலாம்? யோசி...

கணேஷ்: He told him to

புரொபஸர்: இல்ல. டேய் இங்க வாங்கிறதை தமிழில் ஆணையிட்டோம்னு சொன்னோமே. அப்போ இங்கிலீஷ்ல?

கணேஷ்: commanded

புரொபஸர்: கரெக்ட். Ordered கூட சொல்லலாம். He ordered him

கணேஷ்: He ordered him to come here

புரொபஸர்: come என்பதை go என்று மாத்தணும். அதே போல் here I there  என மாற்றணும். ரிப்போர்ட்டட் ஸ்பீச்சில இப்படி படிப்படியா நிறைய வேலை இருக்கு. முதலில் இரண்டு வாக்கியங்களிலும் ஒரே tense  இருக்கும்படியா பார்த்துக்கணும். Invereted commasஐ நீக்கணும். Said to வை orderedன்னு மாத்தின மாதிரி வாக்கியத்தோட தொனிக்கு ஏற்ற ஒரு வினைச்சொல்லை அறிமுகப்படுத்தணும். Here - there  ஆகணும். Todayவை That day ன்னு மாத்தணும். Then,  now ஆகணும். Tomorrowவை next dayவா மாத்தணும். Yesterday - The day before ஆகணும். Come,  go ஆகணும்

கணேஷ்: ம்ம்ம்... அப்படீன்னா he ordered him to go there.

புரொபஸர்: கரெக்ட். இன்னொரு டெஸ்ட் வைக்கிறேன். ஒரு பொண்ணு உன் கிட்ட ஐ லவ் யு சொல்றா. She says I love you. . இதை உன் நண்பர்கள் கிட்ட சொல்லணும்னு தவிக்கிறே. அதுக்கு இதை ரிப்போர்ட்டட் ஸ்பீச்சில மாத்தணும். எப்படி செய்வே?

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.