நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம்... 36

புரொபஸர் கணேஷிடம் ரிப்போர்ட்டட் ஸ்பீச் (Reported speech) பற்றி விளக்கிக் கொண்டு இருக்கிறார். She says I love you என்பதை கணேஷ் தன் நண்பர்களிடம் கூறுவதானால் அதை ரிப்போர்ட்டட் ஸ்பீச்சிலே சொல்லி ஆக வேண்டும். எப்படி சொல்வது பார்ப்போம்.

News image
Updated On :16 மே 2016, 3:50 pm

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர் கணேஷிடம் ரிப்போர்ட்டட் ஸ்பீச் (Reported speech) பற்றி விளக்கிக் கொண்டு இருக்கிறார். She says I love you என்பதை கணேஷ் தன் நண்பர்களிடம் கூறுவதானால் அதை ரிப்போர்ட்டட் ஸ்பீச்சிலே சொல்லி ஆக வேண்டும். எப்படி சொல்வது பார்ப்போம்.

கணேஷ்: சார் உங்க கேள்வி எனக்கு சரியா படல

புரொபஸர்: ஏன்?

கணேஷ்: ரிப்போர்ட்டட் ஸ்பீச்சில ஒரு வாக்கியத்தை present tense இல் இருந்து past tenseக்கு மாத்தணும்.

புரொபஸர்: ஆமா

கணேஷ்: இப்போ நான் ஐ லவ் யூவை past tenseக்கு மாத்தணும். ஆனா அது எப்படி முடியும்?

புரொபஸர்: ஏன் முடியாது?

கணேஷ்: அப்படி செஞ்சா அவள் என்னை கடந்த காலத்தில தான் காதலித்தாள், இப்போ இல்லேன்னு ஆகிடுமே?

புரொபஸர்: ரெண்டு விசயங்கள்: 1) ரிப்போர்ட்டட் ஸ்பீச்சில ஒரு விசயத்தை கடந்த காலத்தில் சொன்னால் அது கடந்த காலம் ஆகணுமுன்னு இல்லை. ஏனென்றால் சொல்லக் கூடிய நீ அப்போதும் நிகழ்காலத்தில் தான் இருக்கிறாய். நீ நிகழ்காலத்தில் இருக்கிறதால் அந்தப் பெண்ணும் நிகழ்காலத்தில் தான் இருக்கிறாள். உதாரணமாய் இரண்டு நண்பர்கள் சண்டை போட்டுக்கிறாங்க. ஒருத்தன் இன்னொருத்தனோட கழுத்தை பிடிச்சு நெரிச்சுக்கிட்டு சொல்றான்: you are dead. உன்ன கொல்லப் போறேன்டா. நான் இதைப் பார்த்து போன் பண்ணி எனக்குத் தெரிஞ்ச ஒருத்தருக்குச் சொல்றேன். இப்படி He threatened him that he was dead. இப்போ நான் இதைச் சொல்லும் போது அவன் சாகலை, ஆனா நான் ரிப்போர்ட்டட் ஸ்பீச்சில் he was dead ன்னு சொல்றேன். ஆனா சொல்லும் போது நான் நிகழ்காலத்தில் இருக்கிறேன். அவனும் சாகல. அவன் நிகழ்காலத்தில் இருக்கிறான். அதனால் நான் சொல்றதைக் கேட்கிறவங்களோ படிக்கிறவங்களோ புரிஞ்சிப்பாங்க.

கணேஷ்: ஒகே சார். அந்த ரெண்டாவது விசயம்?

புரொபஸர்: நான் உனக்கு ஒரு உதாரணத்துக்கு தான் ஒரு பொண்ணு உங்கிட்ட "ஐ லவ் யூ' சொல்றதா சொன்னேன். ஏதோ அது நிஜமாவே இருக்கிற மாதிரி பீல் பண்ணுறே?

கணேஷ்: சாரி சார்.

புரொபஸர்: சரி வேலையை முடி. அந்த வாக்கியத்தை எப்பிடி reported speechஇல் சொல்லுவே?

கணேஷ்: she said I love you

புரொபஸர்: இது direct speech.

கணேஷ்: சாரி. she said she loves you

புரொபஸர்: யாரு? என்னையா?

கணேஷ்: உங்களை இல்ல சார். என்னை லவ் பண்ணுறதா சொல்றா.

புரொபஸர்: பிறகு ஏன் she love youன்னு சொல்றே?

கணேஷ்: ஓகே. she loves me

புரொபஸர்: கடந்த காலத்துக்கு மாற்று

கணேஷ்: she loved me. She said she loved me.

புரொபஸர்: வெரி குட். இப்போ அவள் சொல்றா I will kick your ass

கணேஷ்: அப்பிடீன்னா?

புரொபஸர்: உன்னை உதைக்கப் போறேன்னு அர்த்தம்.

கணேஷ்: இந்த பொண்ணு சரியில்ல சார். அவ வேணாம்

புரொபஸர்: அவ சொன்னதை நீ வருத்தமா என் கிட்ட வந்து சொல்றே. எப்படிச் சொல்லுவே? ரிப்போர்ட்டட் ஸ்பீச்சில சொல்லு.

கணேஷ்: she said she will kick your ass

புரொபஸர்: என்னை உதைப்பேன்னு சொல்றா?

கணேஷ்: இல்ல சார். என்னை

புரொபஸர்: ஏன் அதே தப்பை திரும்பத் திரும்ப பண்றே? ரிப்போர்ட்டட் ஸ்பீச்சிலே youவை meன்னு மாத்தணும். புரியுதா?

கணேஷ்: ஓகே சார். She said she will kick my ass

புரொபஸர்: கடந்த காலம்

கணேஷ்: she willன்னா எதிர்காலம் தானே?

புரொபஸர்: ஆமா

கணேஷ்: எதிர்காலத்தை எப்படி கடந்த காலத்தில சொல்றது?

புரொபஸர்: ஏன் முடியாது? Will - ஓட கடந்த காலம் would. Shall - should. May - might. Can -  could.

கணேஷ்: She said she would kick my ass.

புரொபஸர்: சூப்பர். இப்போ அவ உன் செய்கைகளைப் பார்த்து எரிச்சலாகி சொல்றா I am getting pissed off with you.

கணேஷ்: piss ன்னா உச்சா தானே?

புரொபஸர்: ஆனா இதோட மீனிங் வேறே

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.