நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர் கணேஷுக்கு reported speech என்றால் என்னவென விளக்குகிறார். அப்போது pissed off எனும் phrasel verb - ஐ பயன்படுத்த அதன் அர்த்தத்தை கணேஷ் வினவுகிறான். அவர்கள் பேசிக் கொண்டிருக்க அருகே புரொபஸரின் நண்பர் பக்ஷிராஜன் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றைப் பிரித்து அதில் உள்ள பிழைகளை அடிக்கோடிட்டு எண்ணியபடி இருக்கிறார்.

புரொபஸர்: piss off என்றால் ஒருவரை எரிச்சல்படுத்துவது. ஒருவரிடம் வேணும்ன்னே வம்பாய் கேள்வி கேட்க, அவர் அடிக்க கையை ஒங்கிக் கொண்டு வருகிறாரே, அது போல கடுப்பாவது தான். அதை pissed off எனலாம். அதே போல ஒருவர் எரிச்சலில் கத்தினால் அதை ஆங்கிலத்தில் piss off என்பார்கள். யாராவது கடுப்பேற்றிக் கொண்டிருந்தால் அவரைப் பார்த்து pissed off எனலாம்.

பக்ஷிராஜன்: சிறுநீரில் ரத்தம் வருவதையும் அப்படி சொல்லலாம்.

புரொபஸர்: ஓ!

பக்ஷிராஜன்: ஆமாம். போன தடவை எனக்கு வயிற்று வலி என ராமானுஜம் டாக்டர் கிட்ட போனபோது, do you piss off blood? என்று கேட்டார். எனக்குக் கொஞ்ச நேரம் புரியல. அப்புறம் வீட்டுக்கு வந்து டிக்்ஷனரியைப் புரட்டி தெரிஞ்சிக்கிட்டேன்.

கணேஷ்: ரத்தம் வந்துதா, இல்லியா சார்?

பக்ஷிராஜன்: அதெல்லாம் சின்ன பையன் உனக்கு எதுக்கு? நீ முதல்ல ரிப்போர்ட்டட் ஸ்பீச்சை முழுசா கத்துக்கோ.

புரொபஸர்: சரி உன் கேர்ல் பிரண்ட் உன்னைப் பார்த்து I am getting pissed off with you என்று சொல்கிறாள். இதை reported speechக்கு மாற்று. கவனி. மூன்று படிகள் இருக்கு. முதலில் she said  என்று ஆரம்பிக்கணும். அடுத்து I am getting ஐ past tenseக்கு மாற்றணும். I ஐ she ஆக மாற்றனும். கடைசியா with youவில் உள்ள youவை meன்னு மாத்தணும்.

பக்ஷிராஜன்: ஜோர். உங்க வாத்தியார் பிட்டை கொடுத்து எழுது எழுதுன்னு கெஞ்சறார்.

புரொபஸர்: நீ சொல்லு கணேஷ்.

கணேஷ்: She said she சார் இதுக்கு மேலே தெரியல.

புரொபஸர்: ஒண்ணும் பிரச்சனை இல்லை. நான் உனக்கு பல tenseகளில் ரிப்போர்ட்டட் ஸ்பீச் எழுத பயிற்சி தரேன். முதலில் present tense  இப்போ continuous tense. I am getting என்ன tense?

கணேஷ்: am என்றால் present tense

புரொபஸர்: அப்போ getting

கணேஷ்: தெரியல சார்.

புரொபஸர்: ingயில் முடிந்தால் என்ன Swimming, dancing, reading, sleeping  தொடர்ந்து நடக்கும் செயல்கள்.

கணேஷ்: யெஸ் சார் நினைவு வந்திருச்சு present continuous.

புரொபஸர்: வெரி குட். நீ செய்ய வேண்டியதெல்லாம் present continuous  ஐ past continuous ஆக மாற்றுவதே.

கணேஷ்: I am getting இல்ல she is getting.

புரொபஸர்: இல்ல தப்பு. am என்பது present. அதன் past என்ன?

கணேஷ்: சத்தியமா தெரியல சார். இதுக்கு அந்த பொண்ணு என்னை லவ் பண்ணாமலே இருந்திருக்கலாம்.

புரொபஸர்: am என்பது I எனும் first person nounக்கான வினைச்சொல். அதாவது நிகழ்கால வினைச்சொல். I am happyன்னு நிகழ்காலத்தில் சொல்லலாம். ஆனால் இன்று ரொம்ப சோகமாய் இருக்கிறாய். நேற்று இந்த நேரம் எவ்வள்வு சந்தோசமாய் இருந்தோமுன்னு நினைக்கிறாய்.

கணேஷ்: அதாவது அவள் எங்கிட்ட ஐ லவ் யு சொன்னப்ப மகிழ்ச்சியா இருந்தேன். இப்போ அவள் இன்னிக்கு என்கிட்ட Piss off சொன்னதில சோகமாயிட்டேன். சரியா சார்?

புரொபஸர்: அப்பிடியும் வச்சுக்கலாம். நீ நேத்து எப்பிடி இருந்தேன்னு இங்கிலீஷ்ல சொல்லு.

கணேஷ்: I was happy.

புரொபஸர்: வெரி குட். இப்போ எப்பிடி இருக்கிறாய்ன்னு சொல்லு?

கணேஷ்: இப்போ I am sad

புரொபஸர்: am  எப்பிடி கடந்த காலத்துக்கு போனதும் was ஆகுது பார்த்தாயா?

கணேஷ்: ஆமா சார். அப்பிடீன்னா she said she was pissed off with  me.

புரொபஸர்: continuous tense ஐ மறந்திட்டே. She said she was getting pissed off with me.

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.