தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நிறைய... புகைப்படங்கள்!

நாம் மொபைல் போனில் போட்டோக்கள் அதிகமிருந்தால், தேவையான அளவு ஸ்டேரேஜ் இல்லாமல் போய்விடும். கூடுதலாக ஒரு போட்டோவைக் கூட நாம்

News image
Updated On :2 நவம்பர் 2016, 7:02 am

ஒய்.டேவிட் ராஜா

நாம் மொபைல் போனில் போட்டோக்கள் அதிகமிருந்தால், தேவையான அளவு ஸ்டேரேஜ் இல்லாமல் போய்விடும். கூடுதலாக ஒரு போட்டோவைக் கூட நாம் அதில் சேர்க்க முடியாது. அப்போது, உங்கள்  மொபைலில் உள்ள ஏதாவது ஒரு போட்டோவை அழித்தால்தான் புதிய போட்டோவை அதில் சேர்க்க முடியும்.  இந்த இக்கட்டான சூழ்நிலை ஏற்படாமல் தடுக்க வந்துள்ளது ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான ஒரு செயலி - அதன் பெயர் கிராம்.
இந்தச் செயலியில் முக்கிய அம்சம் என்னவென்றால், ஒரு படத்தின் அளவை 60%வரை குறைக்க முடியும். இதனால் அதிக அளவு இடம் உங்கள் மொபைல் போனில் மீதமாகிறது.  இதனால் இன்னும் அதிகமான போட்டோக்களை உங்கள் மொபைலில் சேகரித்து வைக்கலாம்.
இந்த செயலியின் அளவு - 2.90 எம்.பி. இதில் மொத்தம் 300 போட்டோக்களின் அளவுகளை மட்டுமே இலவசமாகக் குறைக்க இயலும்.

Story image

மெயில் அல்லது சமூக வலைத்தளங்களில் குறைந்தது 50 முறை போட்டோக்களை ஷேர் செய்வதன்மூலம், கூடுதலாக 100 படங்களின் அளவுகளைக் குறைக்கலாம்.
நாம் ஒவ்வொரு போட்டோவின் அளவுகளைக் குறைக்க குறைக்க மொத்த எண்ணிக்கை 300-இல் இருந்து குறையும். மேலும் நாம் அளவைக் குறைத்தவுடன் ஒரிஜினல் படத்தை அழிக்கவா? வேண்டாமா? எனக் கேட்கும். நமக்கு எது தேவையோ அந்த போட்டோவைக் கிளிக் செய்யலாம். அளவு குறைக்கப்பட்ட போட்டோக்கள் மொபைல் கேலரியில் கிராம்இட் என்ற தனி போல்டரில் சேமிக்கப்பட்டிருக்கும்.
ரூ.105.78 செலுத்தினால், அளவில்லாமல் எவ்வளவு போட்டோக்களின் அளவுகளை வேண்டுமானாலும் குறைக்கலாம். இது மொபைலில் போட்டோக்களைச் சேகரித்து வைப்பவர்களுக்கும், அளவில்லாமல் செல்ஃபி எடுப்பவர்களுக்கும் தேவைப்படும் ஒரு நல்ல செயலி ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.