

இந்திய கலைக் கல்வி பயிற்சி, ஆன்மீக மேம்பாடு சம்பந்தமான பயிற்சி ஆகியவற்றை "சென்டர் ஃபார் கல்சுரல் ரிசோர்சஸ் அன்ட் ட்ரெயினிங் அமைப்பு' வழங்கி வருகிறது.
இது மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் இயங்கி வருகிறது. புதுதில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இது இயங்கி வருகிறது. மேலும் ஹைதராபாத், கௌஹாத்தி, உதய்பூர் ஆகிய இடங்களில் வட்டார மையங்கள் செயல்படுகிறது.
பண்பாடு, கலைகள் சம்பந்தமான பயிற்சிகள், கருத்தரங்குகள் இந்த அமைப்பால் நடத்தப்படுகின்றன. நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கைவினை மையங்கள் ஆகிய இடங்களுக்கும் கல்வி சுற்றுலா அழைத்துச் சென்று பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
மேலும் கலாசாரத் திறன் தேடுதல் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. ஆண்டு தோறும் ரூ.650 கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இத்தகைய பயிற்சி பெற்றவர்கள் பண்பாடு, கலை சம்பந்தமான துறைகளில் வேலை வாய்ப்பு பெற்று வருவாய் ஈட்ட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. சுற்றுலா வழிகாட்டிகளாகவும் வருவாய் ஈட்டலாம்.
மேலும் விவரங்களுக்கு :
Centre for Cultural Resources and Training
Ministry of Culture, Government of India
15-A, Sector-7, Dwarka, New Delhi- 110075
Telephone: (011) 25088638, 25309300
Fax: 91-11-25088637,
E-mail:-dir.ccrt@nic.in
http://ccrtindia.gov.in/
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.