ரகசியம் என்பது ஒருவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும் வரையில்தான் அது ரகசியமாக பேணப்படும். எந்த ஒரு விசயமும் இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ளப்படும்போது அது ரகசியமாக இருக்காது. பலநேரங்களில் அது "கிசு கிசு' ஆகிவிடும். "புறம் பேசுதல்' என்று நல்ல தமிழில் இதைச் சொல்வார்கள்.
மற்றவர்களைப் பற்றிய ரகசியங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில் நமக்கு நிகர் நாமேதான். இந்த கிசு கிசு பேச்சுக்களால் யாருக்கும் எந்த பயனும் இருப்பதில்லை. ஆனாலும் அது ஒரு பழக்கமாகவே நம்மில் பலரிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக அலுவலகங்களில் தேவையில்லாமல் இதுபோல் கிசு கிசு பேசுவதினால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. குழுவாகப் பணி செய்வதின் ஆற்றல் குறைகிறது. தேவையில்லாத பகை, தேவையில்லாத மன இறுக்கம், தேவையில்லாமல் வேலைகளில் பிழை ஏற்படுதல் என ஏகப்பட்ட பிரச்னைகள்.
இந்த கிசு கிசு பேச்சுக்களை எப்படியெல்லாம் தவிர்க்கலாம்? இதோ சில யோசனைகள்:
முன்மாதிரியாக இருங்கள்: நீங்கள் உங்கள் அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பிலோ அல்லது மேலாளராகவோ இருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு கீழ் இருப்பவர்கள் கிசு கிசு பேசாமல் இருக்க முதலில் உங்களிடம் இருந்து அதைத் தொடங்குங்கள்.
பிரச்னைகளை காதுகொடுத்து கேளுங்கள்: உங்களுடன்பணியாற்றுபவர்கள் உங்களிடம் கொண்டுவரும் பிரச்னைகளை முதலில் முழுவதுமாக காதுகொடுத்து கேளுங்கள். கேட்காவிட்டால் அவர்களிடமிருந்து நீங்கள் அந்நியப்பட்டுப் போவீர்கள். அடுத்த கிசு கிசு உங்களைப் பற்றிதான்.
தொடர்பில் இருங்கள்: உங்களுடன்பணியாற்றுபவர்களின் பிரச்னை சரியாகிவிட்டதா என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை அந்தப் பிரச்னைகளை உங்களால் சரி செய்ய முடியும் என்றால் சரி செய்ய வேண்டும். எதுவாக இருந்தாலும் உடன் பணி செய்பவர்களுடன் தொடர்பில் இருங்கள்.
எதிர்மறை நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்: குறிப்பிட்ட பிரச்னை குறித்த கிசு கிசுவை தவிர்க்க, கிசு கிசு பேசுபவரைக் கண்டுபிடிக்க வேண்டும். அவரிடம் தனிப்பட்ட முறையில் அறிவுப்பூர்வமாகப் பேச வேண்டும். அவரைப் பகைவராகக் கருதக் கூடாது. அதனால் கிசு கிசு அதிகமாகும். குறையாது.
கிசுகிசுவை எதிர்கொள்ளுங்கள்: உங்களைப் பற்றி பரப்பப்படும் கிசுகிசுகளுக்கு நீங்கள் எதிர்விணை ஆற்றக் கூடாது. அவ்வாறு செய்தால் அது மேலும் கிசு கிசு பேசுவதற்கு வழிவகுத்து விடும். கிசு கிசு பேசுவோர்களின் வட்டம் விரிவடையும்.
அருகில் இல்லாதவர்கள் பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும்: வதந்திகளை நிறுத்துவதற்கான ஒரு நல்ல வழி என்னவென்றால் அருகில் இல்லாத நபர்களைப் பற்றிய எந்த கருத்துக்கும் காதுகொடுக்காமல் இருப்பதோடு அதற்கு பதில் அளிக்காமலும் இருக்க வேண்டும். முடிந்தவரை பொதுவான விசயங்களை மட்டுமே பேச வேண்டும்.
தீர விசாரிப்பது நல்லது: உங்களால் கிசுகிசுக்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றால், குறைந்தபட்சம் உங்கள் காதுகளுக்கு வரும் தகவல்களின் உண்மைத் தன்மையை தீர விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வாறு விசாரிப்பதன் மூலம் ஆதாரமற்ற எதையும் நீங்கள் நம்புபவர் இல்லை என்பதையும் தெளிவுபடுத்திவிடுகிறீர்கள்.
தற்பெருமை கொள்ளாதீர்கள்: கிசு கிசுகளைத் தவிர்க்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பற்றி யாரிடமும் பேசாதீர்கள். கிசு கிசு பேசுவதைக் கண்டும் காணாமலும் இருந்துவிட்டால் அது நாளடைவில் தானாக சரியாகிவிடுவதோடு மேலும் உங்களைப் பற்றிய வதந்திகள் எழாமலும் தடுக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress

மே. வங்கத்தில் திரிணமூல், கேரளத்தில் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக வெற்றி: ஃபரூக் அப்துல்லா

ஈரான் தலைநகரில் நாளை முதல் மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கம்!

பலம் வாய்ந்த ஆர்சிபியுடன் மோதும் குஜராத்: சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைக்குமா?
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


