ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

உலகமயம்... ஒரு படிப்பு!

இன்றைய நிலையில் ஒவ்வொரு வணிகமும் சர்வதேசச் சந்தையை நோக்கி விரிவடைந்து வருகிறது. உலகச் சந்தை நம் வணிகத்தை அங்கீகரிக்க வேண்டுமானால், அதன் வேகத்தில் நாம் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். 

News image
Updated On :10 ஏப்ரல் 2018, 3:20 am

இரா. மகாதேவன்

இன்றைய நிலையில் ஒவ்வொரு வணிகமும் சர்வதேசச் சந்தையை நோக்கி விரிவடைந்து வருகிறது. உலகச் சந்தை நம் வணிகத்தை அங்கீகரிக்க வேண்டுமானால், அதன் வேகத்தில் நாம் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். 
இதனாலேயே இன்று பல்வேறு தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் மற்றும் வணிகத்தை உலக அளவில் நடத்தும் வகையில், உலகளாவிய வர்த்தகம் (International Business) படித்த திறன்மிக்க பட்டதாரிகளைப் பணியில் அமர்த்தி வருகின்றன. முதுநிலை வணிக நிர்வாகத்தில் (MBA) உலகளாவிய வர்த்தகம் குறித்த படிப்பு மாணவர்களுக்கு சர்வதேச வணிகம் குறித்த அடிப்படை அறிவையும் திறன்சார்ந்த பயிற்சிகளையும் வழங்குகிறது. உலக பொருளாதார வளங்களை மேம்படுத்தும் வகையிலும், அதற்கேற்ற திறமை மிக்க மேலாளர்களை உருவாக்கும் வகையிலும் இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 1963-இல் மத்திய அரசால் The Indian Institute of Foreign Trade (IIFT) என்ற தன்னாட்சி அமைப்பு மூலம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் MBA (International Business) -க்கு மிகப் பரந்த அளவில் வரவேற்பும், தேவையும் ஏற்பட்டுள்ளது.
இந்த கோர்ஸ் பயிலும் மாணவர்கள் ஏற்றுமதி, இறக்குமதி குறித்த செயல்முறைகள், அதில் தொடர்புடைய ஆவணங்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை அணுகும் முறைகள், பணப்பரிமாற்றம், பண மதிப்பு ஏற்ற, இறக்கம், சர்வதேசச் சந்தை மற்றும் விநியோக சந்தையில் மூலதனத்தை உயர்த்துதல் குறித்து விரிவான அறிவைப் பெறுவார்கள். MBA (IB)  படிப்பை 2 ஆண்டுகள் முழு நேரம், பகுதிநேரம், தொலைநிலைக் கல்வி என நம் சூழ்நிலைக்கு ஏற்ப பயில முடியும். 
IIFT--இன் புதுதில்லி, கொல்கத்தா, டார்-எஸ்-சலாம் வளாகங்களில் 2 ஆண்டுகள் முழுநேர வகுப்பும், புதுதில்லி, கொல்கத்தா வளாகங்களில் வாரத்தின் கடைசி 2 நாட்கள் என இரண்டரை ஆண்டுகள் பகுதிநேர வகுப்பும் உள்ளன. அதோடு, புதுதில்லி வளாகத்தில் Executive Masters in International Business, Certificate Programme in Export Management  ஆகிய முழுநேர கோர்ஸ்களும் உள்ளன. இவற்றில் சேர 55 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஓர் இளநிலை பட்டமும் பெற்றிருந்தால் போதுமானது. மருத்துவம், சட்டம், பொறியியல், கட்டடக்கலை, தொழில்நுட்பம் படித்தவர்களும் சேரலாம். வயதுவரம்பு இல்லை. 
MBA (IB)- 2 ஆண்டுகள் முழுநேர வகுப்புக்கு எழுத்துத் தேர்வு, கட்டுரை எழுதுதல், குழு கலந்துரையாடல், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட தேர்வு மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும். முழுநேர படிப்புக்கு கல்விக் கட்டணம்-பொது/ஓபிசி- ஆண்டுக்கு ரூ. 7.6 லட்சம். SC/ST/PH  பிரிவினருக்கு ஆண்டுக்கு ரூ. 3.5 லட்சம். நூலகம் உள்ளிட்ட இதர கட்டணம் ரூ. 50 ஆயிரம். இதற்கான சேர்க்கை குறித்த அறிவிப்பு IIFT இணையதளத்தில் ஜூலை 2ஆவது வாரத்தில் வெளியிடப்படும். 
பட்டம் முடித்து 3 ஆண்டுகள் நிர்வாகப் பதவியில் அனுபவம் பெற்றவர்கள் இரண்டரை ஆண்டுகள் கொண்ட பகுதிநேர வகுப்பில் சேரலாம். நிறுவனங்கள் மூலம் சேராதவர்கள் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களில் இருந்து NOC பெற்றுத் தரவேண்டும். எழுத்துத் தேர்வு மட்டும் கிடையாது. முழு கல்விக் கட்டணம் பொது/ஓபிசி- ரூ. 7.5 லட்சம். நஇ/நப/டஏ பிரிவினருக்கு ரூ. 3.75 லட்சம். நூலகம் உள்ளிட்ட இதர கட்டணம் ரூ. 50 ஆயிரம். மார்ச்/ஏப்ரல் மாதங்களில் சேர்க்கை அறிவிப்பு வெளியாகும். 
International Business, International Marketing, Capital and Finance Markets ஆகிய பிரிவுகளில் 18 மாதங்கள் முழுநேரம் கொண்ட Executive Post Graduate Diploma கோர்ஸ்கள் உள்ளன. இவற்றுக்கான சேர்க்கை அறிவிப்பு மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியாகும். முதுநிலை பட்டம் முடித்து நிர்வாகப் பதவியில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் அல்லது இளநிலைப் பட்டத்துடன் 5 ஆண்டுகள் நிர்வாகப் பதவியில் அனுபவம் பெற்றவர்கள் இந்த கோர்ஸ்களில் சேரலாம். வயதுவரம்பு இல்லை. முழு கல்விக் கட்டணம் பொது/ஓபிசி- ரூ. 3.5 லட்சம். SC/ST/PH -ரூ. 1.75 லட்சம். இதர கட்டணம் ரூ. 10 ஆயிரம்.
இவையல்லாமல், Export Import Management, Capital & Financial Markets, Global Trade Logistics and operations என்ற 3 மாதங்கள் கொண்ட சான்றிதழ் கோர்ஸ்கள் உள்ளன.இவற்றில் இளநிலை பட்டம் பெற்ற அனைவரும் சேரலாம். வயதுவரம்பு இல்லை. கட்டணம் ரூ. 75 ஆயிரம். மேலும், முதுநிலை பட்டம், எம்.பில்., முதுநிலை டிப்ளமா முடித்தவர்கள் உலகளாவிய வர்த்தகம் தொடர்பாக ஐஐஊப-இல் டட்.ஈ. மேற்கொள்ளலாம். இதற்கு ஏப்ரல் 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
IIFT அல்லாமல் Amity International Business School, University of Delhi, Aligarh Muslim University, Symbiosis Institute of International Business, Banaras Hindu University ஆகியவை MBA (IB)  பயில தேசிய அளவில் உள்ள குறிப்பிடத் தகுந்த கல்வி நிறுவனங்கள். மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இந்த கோர்ஸ் உள்ளது. 
ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றுவிட்டு அடுத்து எதில் சேருவது என குழப்பத்தில் உள்ள மாணவர்கள் International Business தொடர்பான வகுப்பில் சேர்வதன் மூலம் உள்நாட்டில் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் வேலைவாய்ப்புகளைப் பெறலாம். தொடக்க நிலையிலேயே ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை ஊதியம் பெறும் வாய்ப்புகள் உள்ளன.
IIFT-இல் 2016-18 ஆம் ஆண்டில் MBA (IB)  முடித்த மாணவர்களில் அதிகமானோர் வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அவர்களில் குறிப்பிட்ட 4 பேரின் ஆண்டு மொத்த ஊதியம் ரூ. 95 லட்சம். இதில், அதிகபட்சம் பெற்ற மாணவரின் ஆண்டு ஊதியம் ரூ. 29 லட்சம். இது கடந்த ஆண்டில் பணிவாய்ப்பு பெற்ற மாணவரின் ஊதியத்தை விட (ரூ. 26 லட்சம்) ரூ. 3 லட்சம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.