தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மாற்றங்களை நோக்கி...!

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று சொல்வது போல் நாம் நமது வாழ்வில் மாற்றத்தை தேடியே பயணித்துக் கொண்டிருக்கிறோம். மாற்றத்திற்கான அடிப்படை, நம்பிக்கை ஒன்றுதான். 

News image
Updated On :24 ஏப்ரல் 2018, 1:55 pm

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று சொல்வது போல் நாம் நமது வாழ்வில் மாற்றத்தை தேடியே பயணித்துக் கொண்டிருக்கிறோம். மாற்றத்திற்கான அடிப்படை, நம்பிக்கை ஒன்றுதான். 
நம்பிக்கையோடு இருக்கின்ற போது வருகின்ற எந்த மாற்றத்தையும் நாம் தயங்காமல் ஏற்றுக் கொள்வோம். 
நீங்கள் உங்கள் சிந்தனை, செயல்கள் ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? இதோ சில வழிகள்: 
சிந்தனையில் மாற்றம்: சிந்தனையின் மையப் புள்ளியில் தான் மற்றம் தொடங்குகிறது. நீண்ட காலமாக நம்பிக்கையோடு எதைப்பற்றி நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களோ அது உங்கள் கைவசமாகும் காலம் வந்தே
தீரும். ஒரு பொருளை வாங்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் 
தோன்றுவதோடு, அதை எப்படியும் வாங்கியே தீருவேன் என்று நம்பிக்கையும் இருந்தால் அதை வாங்கிவிடுவீர்கள். என்னால் இதைச் சாதிக்க முடியும் என்று உங்கள் உள்ளுணர்வு எதைச் சொல்கிறதோ, அதை கையில் எடுத்து கொள்ளுங்கள். அதை செய்ய முயலுங்கள். உங்களால் சாதிக்க முடியும். நம்பிக்கை, உங்களுடைய சக்தியாகிறது. 
எதிர்ப்பார்ப்புகளில் மாற்றம்: உங்கள் எதிர்பார்ப்புகள் உங்கள் அணுகுமுறையை மாற்றும் வல்லமை கொண்டவை. வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்க முதல்படியாக இருப்பது எதிர்பார்ப்புகள்தாம். எந்த ஒரு விசயத்தையும் நாம் எதிர்பார்ப்போடு முனைப்போடு செய்யும் போது அது நமக்கான முழு பலனையும் கொண்டு வந்து சேர்க்கும்.
செயல்களில் மாற்றம்: மாற்றங்களைச் செய்ய விரும்பினால் அந்த மாற்றங்களை முதலில் உங்களிடம் இருந்து தொடங்குங்கள். 
நம்மில் பலர் தங்கள் பிரச்னைகளுக்கு சரியான தீர்வு எது என்பதை விட நமக்கு சௌகரியாமனது எது என்பதை தேர்வு செய்துகொண்டு அந்த பிரச்னைகளுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 
சில மாற்றங்கள் நமக்கு நல்லதாக இருக்கும் என்று நாம் அறிந்தாலும் கூட அந்த மாற்றங்களை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. அதற்குக் காரணம், தற்போது இருக்கும் சௌகரியத்தை இழக்க விரும்பாததே. தற்போதைய செüகரியங்களை இழக்காதவரை, முன்னேற்றத்துக்கான கடுமையான செயல்களில் ஈடுபடாத
வரை, வெற்றி சாத்தியமில்லை.
வாழ்கையில் மாற்றம்: ஒரு வாய்ப்பைத் தவற விடும் அந்த நேரத்திலேயே நாம் நமக்கான வெற்றியை இழக்கிறோம். ஒரு விசயத்தில் தோல்வி அடைந்தால் அந்த தோல்விக்கான முழு காரணங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். அதுவே வெற்றியை உருவாக்க வழிவகுக்கும். என்றாலும் எல்லாவற்றிற்கும் சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டு இருக்கும் ஒருநபரால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. என்னால் இது முடியாது, எனக்குத் தெரியாது, நேரம் இல்லை என காரணங்களைத் தேடி கண்டுபிடித்து ஒரு விசயத்தை செய்யாமல் இருக்கும் எவரும் வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றத்தையும் காண முடியாது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.