இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

இணைய வெளியினிலே...

படிக்கிற பழக்கம் வழக்கொழிந்து கொண்டே வருகிறது என்பது எப்படி உண்மையோ, அதே அளவுக்கு படிப்பவர்கள் உருவாகிக் கொண்டும்

News image
Updated On :25 டிசம்பர் 2018, 10:00 am IST

முக நூலிலிருந்து....
* மழையில் நனைகிறேன்- 
கையில் குடையுடன்... 
சுதந்திரம்?
ப்ராக்ஸி பாரதி

* ஒரு முனையில்
நானெனும் ஆணவம் 
மறுமுனையில்
ஏதுமற்ற வெறுமை
இடையில் ...
ஆகப் பெரும் போதை, 
இந்த உலகம்.
சுசீலா மூர்த்தி

* வானளந்து கடலளந்து முடித்த பின்னும் 
வசப்படாத ஓர் இரையைத் தேடி அலையும் 
இந்தப் பறவையின் நம்பிக்கை... 
அந்த கடலையும் வானையும் விட பெரியது!
திருமலை சோமு

* சாரையில் பிரிந்த எறும்பொன்று 
வெகு நேரமாய் சுற்றிக் கொண்டிருக்கிறது...
அறையின் சுவர்களில். 
நேசமிகு ராஜகுமாரன்

* வாழ்க்கையில் முன்னேறணுமா ?
நினைவாற்றல் தேவை ...
வாழ்க்கையில் மகிழ்ச்சி வேணுமா ?
ஞாபகமறதி தேவை! 
எஸ்.தக்ஷ்ணாமூர்த்தி

சுட்டுரையிலிருந்து...
* எல்லாராலும் நாம் கவனிக்கப்பட வேண்டும் என்னும் 
ஆழ்மன ஆசைதான்...
யார் எது சொன்னாலும்
அது நம்மை நோக்கித்தானோ என்றெண்ண வைக்கிறது.
யாத்திரி

* உ ன் முதுகுக்குப் பின்னால் 
உன் தவறை பலரிடம் கூறும் நண்பரை விட... 
உன் முகத்திற்கு முன் 
உன் தவறைக் கூறும் எதிரியேயானாலும்
அவரை மதித்து பெருமை கொள்...
கர்வம் கொள்... என் எதிரியென. 
சிட்டுகுருவி 

* சில பேருக்கு மட்டும்
நாம் என்ன செய்தாலும் 
தவறாகவே தெரியும்
பட்சத்தில்
குறை என்பது
நம் செயலில் அல்ல, 
அவர்கள் பார்வையில்!
முகிலன்

* தெரியாம ஒரு தப்பு பண்ணிருப்போம்...
அது முன்னாடியே தெரிஞ்சிருந்தா
அந்த தப்ப பண்ணிருக்க மாட்டோம்ன்னு
நினைத்து மனம் வருந்திட்டு இருக்கிறப்ப தான்..,
சொல்லுவாங்க, "எனக்கு இது முன்னாடியே
தெரியும்... இப்படி நடக்கும்ன்னு'
அவங்க ... பெரிய மனுஷங்களாம்.
ஃபஸில் ஏஎம்எஃப்

வலைதளத்திலிருந்து...
படிக்கிற பழக்கம் வழக்கொழிந்து கொண்டே வருகிறது என்பது எப்படி உண்மையோ, அதே அளவுக்கு படிப்பவர்கள் உருவாகிக் கொண்டும் இருக்கிறார்கள். படிப்பவர்கள் இல்லாமலா சேத்தன் பகத்தின் புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்கிறது என்பீர்களேயானால் நியாயமாய் நம் நாட்டின் மக்கள் தொகைக்கு கோடிக்கணக்கில் விற்க வேண்டும். சினிமாவில் தற்போது வரும் பெரும்பாலான உதவி இயக்குநர்களுக்கு படிக்கும் பழக்கமே சுத்தமாய் இல்லை என்பதும், அதை விட எழுதும் திறமை... அட்லீஸ்ட் கம்ப்யூட்டரிலாவது எழுதும் பழக்கம் கூட இல்லை என்றே சொல்ல வேண்டும். மேக்ஸிமம் ட்விட்டரில் ரெண்டு வரியும், பேஸ்புக்கில் நாலு வரியும் மட்டுமே இவர்களின் மொத்தமான எழுத்துப் பணி. வெறும் சினிமா பார்த்தே படமெடுக்க வருகிறார்கள். அதனால் தான் பெரும்பாலான தற்போதைய படங்களில் கேரக்டர்கள் மனதுக்கு நெருக்கமாய் இருப்பதில்லை. 
என்னிடம் உதவியாளராய் வர விரும்பும் இளைஞர்களிடம் நான் கேட்பது ரெண்டே ரெண்டு கேள்விதான். "புத்தகங்கள் படிப்பாயா? சமீபத்தில் பார்த்து மிகவும் பிடித்த படமெது?' என்பதுதான். முதல் கேள்விக்கு பெரும்பாலானவர்கள் பொன்னியின் செல்வனையும், சுஜாதாவையும் கட்டாயமாகச் சொல்வார்கள். "பொன்னியின் செல்வன் எத்தனை பாகம்?' என்ற கேள்வியிலேயே "டக் அவுட்' ஆகி போகிறவர்கள் ஒருபுறமென்றால், இன்னொரு புறம் சரியாய் பதில் சொல்லி, "சரி பழுவேட்டரையர் யார்?' என்று கேள்விக்கு மிக தீவிரமாய் மூளையை நிரடி தேடிப் பார்த்து, "சாரி சார்... மறந்திருச்சு' என்பார்கள். சுஜாதா பற்றிக் கேட்டால் இன்னும் சுத்தம். "இந்தியன் படத்துக்கு டயலாக்... மணிரத்னம் படம்' என்று ஜல்லியடிப்பார்கள். இன்னும் கொஞ்சம் பேர், "அவரோட திரைக்கதை எழுதுவது எப்படி? மட்டும் படிச்சிருக்கேன் சார்...' என்பார்கள். "அப்படியா உனக்கு பிடித்த சிறந்த திரைக்கதை எது?' என்று கேட்டால் அப்போதைக்கு பரபரப்பாய் ஓடி ஒர் பெரிய நடிகரின் பெரும் மசாலா படத்தை சொல்வார்கள். சமீபகாலமாய் திரைப்படங்களிலிருந்து திரைப்படமெடுக்க காப்பியடிப்பதிலிருந்து இம்ப்ரூவ் ஆகி, குறும்படம் எடுக்க குறும்படத்தையே காப்பியடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். úஸா படிப்பது என்பது இல்லாததால்தான் இந்த நிலை. எப்படியாவது வருங்கால சந்ததியரைப் புத்தகம் படிக்க பழக்குவது என்பது எதிர்கால இந்தியாவுக்கு மிக அவசியமான ஒன்று என்றே தோன்றுகிறது.
http://www.cablesankaronline.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.