வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 128
புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி டிபன் சாப்பிடச் சென்ற உணவகத்தில் அவர்கள் சந்திக்கும் சர்வரிடம் ஜூலி சில கேள்விகள்


புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி டிபன் சாப்பிடச் சென்ற உணவகத்தில் அவர்கள் சந்திக்கும் சர்வரிடம் ஜூலி சில கேள்விகள் கேட்கப் போவதாகவும், அதில் குறைந்தது மூன்று கேள்விகளுக்காவது அவன் சரியாகப் பதிலளிக்காவிட்டால் அவனது காதலி ராக்கியின் தலை வெடித்து சிதறி விடும் என கூறுகிறது. சர்வர் சவாலை ஏற்கிறான். முதல் கேள்விக்கு அவன் சரியாகவும் இரண்டாவதற்கு தவறாகவும் பதிலளிக்கிறான். இதையடுத்து அவன் ஜூலியிடம் சவாலாய் ஒரு கேள்வி கேட்கிறான். ஜூலி தவறாகப் பதிலளித்தால் இரண்டாவது கேள்வியில் சர்வர் ஜெயித்ததாக ஆகும். ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களில் தனிச்சொற்களாய் இயங்கத் தக்க எழுத்துக்கள் எவை? ஐந்தே வினாடிகளுக்குள் இக்கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். ஜூலியால் ஓர் எழுத்தை மட்டுமே கண்டறிந்து சொல்ல முடிகிறது: A. அடுத்தது?
ஜூலி: அடுத்த எழுத்து I தானே?
சர்வர்: கரெக்ட். ஆனால் time out முடிந்து விட்டதே...
ஜூலி: சரி... பரவாயில்லை. அடுத்தது என் கேள்வி. இதுக்கு நீ தலைகீழாய் நின்றாலும் பதில் சொல்ல முடியாது.
சர்வர்: அப்படீன்னா It will be a dud. மொக்க கேள்வியாத் தான் இருக்கும். கேளு!
ஜூலி: இது நான் சற்று முன்னே கேட்ட கேள்வியோட தொடர்ச்சி. துணைக் கேள்வி. 26 எழுத்துக்களும் வரும் வாக்கியம் இருக்கிறதல்லவா, அதன் பெயர் என்ன?
சர்வர்: ம்ஹும்...
ஜூலி: Panagram. மூணாவது கேள்வியில் தோத்துட்டே.
சர்வர்: சரி, ஓகே. நான் இதை ஒட்டி ஒரு துணைக்கேள்வி கேட்கிறேன்.
ஜூலி: ஆனால் இதுக்கு நான் சரியான பதில் சொன்னால் நீ ரெண்டு கேள்விகளில் தோற்றதா ஆயிடும்.
சர்வர்: டபுள் ஓகே. இதைக் கேள்: ஒரு சொல் அல்லது வாக்கியம் அல்லது எண். அதை நேராகவோ திரும்பவோ படித்தாலும் அதன் உச்சரிப்போ அர்த்தமோ மாறக் கூடாது.
ஜூலி: ஓ... இதுவா ஈஸி. 1991... 1881. சொற்கள் என்றால் pop. Eve. சரியா?
சர்வர்: நான் அதைக் கேட்கவில்லை. இப்படியான சொல், வாக்கியம் அல்லது எண்ணை ஆங்கிலத்தில் என்ன பெயரில் அழைப்பார்கள்?
ஜூலி: ஐயோ... அது தெரியலியே?
சர்வர்: Palindrome.
ஜூலி: ஓ... இதை நான் எங்கியோ சமீபத்தில் கேள்விப்பட்டிருக்கேனே...
சர்வர்: ஆமா... கிரிக்கெட்டில்
ஜுலி: ஆமா... ஆமா... வாய் நுனியில் இருக்குது.
சர்வர்: தென்னாப்பிரிக்க தொடக்க மட்டையாளரோட பெயர் Markram. அதை நீங்க திருப்பியும் படிக்கலாம். அதே போல Madam I'm Adam. இந்த வாக்கியத்தை திருப்பிப் படிச்சாலும் அதே போல கேட்கும்.
ஜூலி: கரெக்ட். நல்ல கேள்வி. நீ ஜெயிச்சுட்டே. சரி... இனி என் கேள்வி. Ghost word என்றால் என்ன?
சர்வர்: செத்துப் போன, புழக்கத்தில் இல்லாத வார்த்தை?
ஜூலி: இல்ல...
சர்வர்: பிறகு? பேய்களைப் பற்றின வார்த்தை? பேய்கள் பயன்படுத்தும் வார்த்தை?
ஜுலி: எதுவும் இல்ல. பதில் தெரியல தானே?
சர்வர்: ஆமா...
ஜூலி: அகராதிகளில் அச்சுப்பிழை காரணமாக சில சொற்கள் அறிமுகமாவதுண்டு. அச்சொற்களுக்கு அர்த்தமே இல்லை; பயன்பாடும் இல்லை. அவை உலகில் எங்குமே இல்லை; அகராதியில் மட்டுமே உண்டு.
சர்வர்: ஓ...
ஜூலி: 1934-47 வரை - அதாவது 13 வருடங்கள் - Websters's New International Dictionary இல் ஒரு தவறான ghost word இடம்பெற்றது. Dord. இதன் பொருள் அடர்த்தி என குறிப்பிடப்பட்டது. ஆனால் அப்படி ஒரு சொல்லே இல்லை, அது ஓர் அச்சுப்பிழை என பின்னர் கண்டறிந்து நீக்கினார்கள். Ok, quiz ஆகிய பிரசித்தமான சொற்கள் கூட ghost words தான் என்கிறார்கள். OCR கேள்விப்பட்டிருக்கிறாயா?
சர்வர்: Optical Character Recognition.
ஜூலி: அச்சுப் பிரதி ஒன்றை ஸ்கேன் செய்து பின்னர் இந்த Optical Character Recognition (OCR) மென்பொருளில் ஏற்றினால் அதை இது எடிட் செய்யக் கூடிய டிஜிட்டல் பிரதியாக மாற்றி விடும் ஜப்பானிய தொன்மக் கதைகளில் வரும் ஒரு பிராணி தான் Hsiao. இதை ஒரு பறக்கும் குரங்கு என்கிறார்கள். இப்பிராணியின் தொல்கதையை OCR வழி டிஜிட்டலாக மாற்றிய போது மென்பொருள் Hsiao என்பதை Hsigo என தவறாக எழுதியது. விளைவாக இதன் பெயரே இவ்வாறு மாறி பல கட்டுரைகள் இதைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்டன. விக்கிபீடியாவில் ஒரு பதிவு கூட இதைப் பற்றி தவறாக ஏற்பட்டது. பின்னர் இத்தவறு திருத்தப்பட்டது.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...