வாங்க இங்கிலீஷ் பேசலாம் 149
புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். போகும் வழியில் கணேஷ் a dog with two tailsஎனும் இடியத்திற்கான அர்த்தத்தை வினவுகிறான்


புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். போகும் வழியில் கணேஷ் a dog with two tails
எனும் இடியத்திற்கான அர்த்தத்தை வினவுகிறான். கனடாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒட்டாவா நதிக்கு மேலாக பாலம் அமைத்த ஜான் மெக்டெகார்ட்
என்பவர் தான் முதன்முதலில் இந்த இடியத்தை ஒரு நூலில் குறிப்பிட்டு எழுதியவர். Off went the Laird, as proud as a dog with two tails என்ற வாக்கியத்தை அவர் தன் நூலில் எழுதினார். பாலத்தின் மீது ஒரு கனவான் முதன்முதலாய் பெருமிதத்துடன் செல்கிறார் என்று இதற்கு அர்த்தம். ஏன் ரெட்டை வால் என கணேஷ் கேட்க, ஜூலி விளக்குகிறது. நாய்கள் மகிழ்ச்சியை காட்டுவதற்காக வாலை குழைத்து ஆட்டுவதுடன் நிறுத்திக் கொள்வதில்லை என்கிறது ஜுலி.
ஜூலி: நாங்கள் வாலை உயர்த்தி பிடித்திருப்போம். சிலநேரம் அச்சத்தில் மரியாதையில் வாலை தழைத்து தரையில் தேய விடுவோம். சிலநேரம் லேசாய் வால் நுனியை மட்டும் ஆட்டுவோம். அவ்வப்போது வாலை அம்பைப் போல நேராய் நிற்க வைப்போம். ஒவ்வொன்றுக்கும் ஓர் அர்த்தம் உண்டு. சில நாய்களின் வால் இயல்பாகவே மேல்நோக்கி திரும்பி இருக்கும். போமரேனியன் போல. இதைக் காண்கையில் அந்த நாய் மிகவும் கெத்தாய் இருப்பதாய் கருதுவோம். ஒரு வாலுக்கே இவ்வளவு பெருமை என்றால் ரெண்டு வால்கள் இருந்தால்? பாலம் மீது பயணிக்க நேர்ந்த ஒரு கனவானின் பெருமிதத்தை பகடி செய்யும் இடியமாய் ஜான் மெக்டெகார்ட் இதை இங்கு பயன்படுத்துகிறார் என்பது தெளிவு.
கணேஷ்: ஆஹா என்னவொரு விளக்கம். நாய்களின் உடல்மொழி அகராதியையே திறந்து காட்டி விட்டார். அது சரி, அந்த பாலம் அமைத்த பின் என்னவானது?
ஜூலி: 1841-இல் மேல் மற்றும் கீழ் கனடாக்கள் இணைக்கப்பட்டு ஒருமித்த கனடா உருவானது. அது தான் இன்றைய கனடா.
உதவியாளர்: நீங்கள் வலது பக்கம் திரும்பி சென்றால் வெயிட்டிங் ரூம் வரும். அங்கே காத்திருங்கள்
கணேஷ்: இப்போ டாக்டரைப் பார்க்க முடியாதா?
உதவியாளர்: Doctor is meditating
கணேஷ்: என்னது?
உதவியாளர்: ஆமாம். ஒவ்வொரு நோயாளியை பார்த்த பின்னரும் அவர் பத்து நிமிடம் தியானம் பண்ணுவார். Please wait.
(அவர்கள் வெயிட்டிங் ரூமுக்குப் போகிறார்கள். அங்கே நீளமான வெள்ளை சோஃபாக்களில் ஏற்கெனவே ஐந்து பேர் இருக்கிறார்கள். புரொபஸர், கணேஷ்
ஆகியோர் ஒரு மீசைக்காரர் அருகே போய் அமர்கிறார்கள். புரொபஸர் நெளிகிறார்)
கணேஷ்: சார் எனக்கொரு சந்தேகம்.
புரொபஸர்: இருப்பா... என்னால முடியல...
கணேஷ்: என்னாச்சு சார்?
புரொபஸர்: இங்கே அதெல்லாம் சொல்ல முடியாதுப்பா...
கணேஷ்: சும்மா சொல்லுங்க சார்...
புரொபஸர்: I have got to see a man a about a dog.
கணேஷ்: ஓ.... புதுசா நாய் வாங்க போறோமா?
புரொபஸர்: அதில்லப்பா. ஐயோ முடியலையே (சுற்றும் முற்றும் தேடிப் பார்க்கிறார்)
ஜூலி: எனக்குத் தெரியும்
கணேஷ்: என்ன?
ஜூலி: நீ இங்க வா சொல்றேன்.
(ஜுலியும் கணேஷும் வெளியே போகிறார்கள்.)
ஜூலி: To see a man about a dog என்றால் என்ன தெரியுமா?
கணேஷ்: என்ன?
ஜூலி: சூச்சூ
கணேஷ்: ஆங்?
ஜூலி: சூச்சூ போகணும்னு அர்த்தம்பா...
கணேஷ்: அடப்பாவி அதுக்குத் தான் நெளியுறாரா?
ஜூலி: யெஸ். It is an idiom.
(கணேஷ் எட்டிப் பார்க்கிறான். புரொபஸர் கழிப்பறைக்குச் சென்றிருக்கிறார்)
கணேஷ்: எனக்கு வேறொரு சந்தேகம் ஜூலி
ஜூலி: கேளு
கணேஷ்: அந்த உதவியாளர் அம்மா பேசும் போது Doctor is meditating என்று சொன்னாங்க. அதில் ஏன் வெறும் டாக்டர்னு சொன்னாங்க. The doctor தானே
சரி.
ஜூலி: ஆமா the doctor தான் சரி. ஏன்னா ஒரு குறிப்பிட்ட டாக்டரைச் சொல்றாங்க. வெறும் டாக்டர் என்றால் ஊரில் உள்ள எல்லா டாக்டர்களும் என்று
அர்த்தம் ஆகி விடும். அது மட்டுமல்ல, டாக்டர் என்றாலே the சேர்ப்பது ஒரு மரபு. An apple a day keeps the doctor away. A doctor என்று இந்த பழமொழியில் வரவில்லை பார்த்தாயா?
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...