ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தொலையுணர்வில் கல்வி!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) கீழ், முன்னணி பயிற்சி மற்றும் கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள இந்திய தொலையுணர்வு நிறுவனம்

News image
Updated On :5 ஜூன் 2018, 9:49 am

இரா. மகாதேவன்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) கீழ், முன்னணி பயிற்சி மற்றும் கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள இந்திய தொலையுணர்வு நிறுவனம் (Indian Institute of Remote Sensing}IIRS). 1966-இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தொலையுணர்வு, புவித் தகவல்கள், இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் பேரழிவு மேலாண்மை ஆகியவற்றில், புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பத் திறனாளர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
தொழில்நுட்பங்களை பொதுமக்களுக்கு கொண்டு சென்று, அவர்களிடம் திறன்களை உருவாக்குவது, புவியியல் தகவல் நுட்பம் மற்றும் தொலையுணர்வு பயன்பாடுகளில் மாணவர்களுக்கு முதுநிலைப் பட்டங்கள் வழங்குவது ஆகியன IIRS-இன் முக்கிய செயல்பாடுகள்.
மேலும், இயற்கை வள மேலாண்மை, தொலையுணர்வு, புவியியல் தகவல் அமைப்புகள் (GIS), உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு (GPS) தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்திய தொலையுணர்வு நிறுவனம் மேம்பட்ட சேவையை வழங்கி வருகிறது. இதன் பத்தாயிரத்துக்கும் அதிகமான முன்னாள் மாணவர்கள் உலகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர். 
அண்மைக்காலமாக, புவியில் இருந்து அனுப்பப்படும் புவி கண்காணிப்பு செயற்கைக் கோள்கள், நிலம், கடல், வளிமண்டலம், சுற்றுச்சூழலின் பல அம்சங்கள் தொடர்பான தகவல்களை நமக்கு அனுப்பி வருகின்றன. இந்தத் தகவல்கள் அனைத்தும் இயற்கை வளங்களை நிர்வகிப்பது, கண்காணிப்பது, தட்பவெப்ப நிலைகளை முன்கூட்டியே அறிவிப்பது, பேரிடர் மேலாண்மை உதவி, வளர்ச்சி செயல்பாடுகளைத் திட்டமிடுவது-கண்காணிப்பது ஆகியவற்றில் மத்திய, மாநில அரசுகளின் சிறப்பான ஆட்சிக்கு உதவி செய்யக் கூடியவையாக உள்ளன. 
இந்திய தொலையுணர்வு நிறுவனம் An Overview for Decission Maker's Course  என்ற கோர்ûஸ நடத்தி வருகிறது. இதில், எந்த ஒரு நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள், மேலாளர்கள், திட்ட தலைவர்கள், திட்டமிடுநர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், வேளாண்மை, வனத்துறை, நீர்வளம், சுற்றுச்சூழல், சூழலியல், பேரிடர் மேலாண்மை, வானவியல், புவியியல், பொருளாதாரம், நகரம், கடலியல் ஆகிய துறைகளில் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
இயற்கை வளம், பேரிடர் மேலாண்மை, திட்டமிடுதல் ஆகியவற்றில், தொலையுணர்வு தொழில்நுட்பம் மற்றும் புவியியல்தகவல் அமைப்பு தொழில்நுட்பத்தின் மூலம் உதவிசெய்து, அதன் நன்மைகள் மற்றும் தடைகளை பொதுமக்கள் மதிக்கும் போக்கை வளர்ப்பதே இந்த கோர்ஸின் நோக்கம். இதேநோக்கில், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான மள்ங்ச்ன்ப்ப்ய்ங்ள்ள் ர்ச் தங்ம்ர்ற்ங் நங்ய்ள்ண்ய்ஞ் & எஐந ச்ர்ழ் உய்ஸ்ண்ழ்ர்ய்ம்ங்ய்ற் நற்ன்க்ண்ங்ள் என்ற கோடைக்கால வகுப்பும் டேராடூன் வளாகத்தில் ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது. 
மேலும், விண்வெளி தொழில்நுட்பம், அதன் பயன்பாடுகள் குறித்து பயனாளர்கள் மற்றும் கல்வித்துறையில் வலுவான புரிதலை ஏற்படுத்தும் பொருட்டு, இணையவழி கல்வியாக IIRS Outreach Programme என்ற திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இது, இணையவழி நேரலை கலந்துரையாடல் முறை (Edusat), e}Learning Mode என 2 வழிகளில் செயல்படுத்தப்படுகிறது.
நேரலை முறையில், ISRO, IIRS  உள்ளிட்ட புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் நிபுணர்கள் வகுப்புகளை நடத்துவார்கள். இந்த முறையில் ஐஐதந இதுவரை 22 கோர்ஸ்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதில் 626 கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த சுமார் 47 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்த அவுட்ரீச் திட்டத்தில் சேர்ந்து இணையம் வழியாகப் பயில கட்டணம் கிடையாது. 
மத்திய, மாநில, தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்,  மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், புவியியல் தொழில்துறை, தன்னார்வ நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள் இந்த அவுட்ரீச் திட்டத்தில் சேர்ந்து பயிலலாம்.
நிறுவனங்கள், இணையவழி நேரலை பயிற்சிக்கான வகுப்பறையை தங்கள் சொந்த செலவிலேயே அமைத்துக் கொள்ள வேண்டும். கல்லூரி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே கணினி மூலம் இந்த நேரலை வகுப்பில் பங்கேற்கலாம். நிறுவனங்கள், அவற்றின் சார்பாக ஒருங்கிணைப்பாளரை நியமித்து இதில் பங்கேற்க வேண்டும். இந்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒவ்வொரு கோர்ஸின் நிறைவிலும் சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்படும். அதோடு, தொலையுணர்வு மற்றும் புவியியல் தொழில்நுட்பம் குறித்த தொடர்ச்சியான புது தகவல்களை IIRS-இல் இருந்து இந்த ஒருங்கிணைப்பாளர்கள் இலவசமாகப் பெறலாம். மேலும், IIRS பயனாளர் ஆண்டு கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்க ஒருங்கிணைப்பாளர்கள் அழைக்கப்படுவர். 
இந்த கோர்ஸில் பங்கேற்கும் அலுவலர்களுக்கு 70 சதவீத வருகைப் பதிவு மற்றும் செயல்திட்ட ஒப்படைப்பின் அடிப்படையிலும், கல்லூரி மாணவர்களுக்கு 70 சதவீத வருகைப்பதிவு மற்றும் இணையவழி தேர்வின் அடிப்படையிலும் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்திய தொலையுணர்வு நிறுவனத்தில் அளிக்கப்படும் பயிற்சிகள், நடத்தப்படும் கோர்ஸ்கள் குறித்த மேலும் விவரங்களை www.iirs.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று அறிந்துகொள்ளலாம். 
SPIE}The International Society for Optics and Photonics என்ற ஐரோப்பிய தன்னார்வ நிறுவனத்தின் Remote Sensing  பிரிவு புவி கண்காணிப்பு அமைப்பு, தொழில்நுட்பம், பயன்பாடு ஆகியவற்றில் நவீன வளர்ச்சி குறித்த சர்வதேச மாநாட்டை ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் வரும் செப்டம்பர் 10-13ஆம் தேதி வரை நடத்துகிறது. இதில், தொலையுணர்வு தொடர்பான 11 தலைப்புகளில் நிபுணர்கள் பங்கேற்று கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்க பொறியாளர்கள், விஞ்ஞானிகள், திட்ட மேலாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட ஆர்வலர்களுக்கு நடஐஉ நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.