வாங்க இங்கிலீஷ் பேசலாம் 143
புரொபஸர், கணேஷ், ஜுலி, டார்லிங் எனும் நாய், அதன் உரிமையாளர் பிங்கி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரின் காத்திருக்கும் அறையில் இருக்கிறார்கள்.


புரொபஸர், கணேஷ், ஜுலி, டார்லிங் எனும் நாய், அதன் உரிமையாளர் பிங்கி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரின் காத்திருக்கும் அறையில் இருக்கிறார்கள். அவர்கள் ஆர்வமாய் அரட்டை அடிக்க கணேஷ் தான் மட்டும் தனியாய் விடப்பட்டதாய் ஆதங்கப்படுகிறான்.
ஜூலி (திரும்பி): என்னாச்சு கணேஷ்?
கணேஷ்: நீயாவது இருக்கியே. சந்தேகத்தை தீர்த்து வை.
ஜூலி: Rage என்றால் கட்டற்ற கோபம். Rage on என்றால் ஒரு விசயத்தின் பாலான நம் கட்டற்ற சினத்தை வெளிப்படுத்துவது. The husband was furious that the
chutney was too salty; he raged at his wife’s lack of care in culinary matters for almost an hour. இங்கே கோபத்தில் கத்துவது எனும் பொருளில் Rage at வருகிறது.
கணேஷ்: ஆங்?
ஜூலி: என்னாச்சு?
கணேஷ்: அதென்ன கல்லினரி?
ஜூலி: சமையல் சம்பந்தமான. இது culinary எனும் லத்தீன் சொல்லில் இருந்து வருகிறது. கலினா என்றால் சமையலறை. இப்படித் தான் ஸ்ரீன்ப்ண்ய்ஹழ்ஹ்
எனும் சொல் தோன்றியது. நான் சொன்ன உதாரணத்தில், வீட்டுக்காரி சமைத்த சட்னியில் உப்பு சற்று அதிகமாகிட, கணவர் "உனக்கு சமையலும் தெரியல ஒரு
மண்ணும் தெரியல' என வெகுண்டெழுந்து கத்துகிறார்.
டார்லிங்: புறாவுக்காக ஒரு போரா?
ஜூலி: You nailed it. Ha ha... நாட்டின் நிறைய போர்கள் அற்ப பிரச்சனைகளுக்காகத் தான் நடக்கின்றன.
கணேஷ்: ஏற்கெனவே ஒருமுறை இதை பயன்படுத்தினீங்க. அதென்ன nailed it? Nail என்றால் நகம் தானே?
டார்லிங்: அது மட்டுமா என்ன?
கணேஷ்: இல்ல நிச்சயமா. ஆணி கூட nail தான்.
டார்லிங்: so nailing means?
கணேஷ்: ம்ம்ம்... ஆணியை சுவத்தில அறையுறது?
டார்லிங்: கரெக்ட். Nailed it என்பதற்கு நிறைய அர்த்தங்கள். குறிப்பாய் அமெரிக்க ஆங்கிலத்தில் அடிக்கடி பயன்படும் expression இது. ஹாலிவுட் படங்கள்
பார்த்தேன்னா அடிக்கடி you come across it.
கணேஷ்: ஓ... நான் நேத்து கூட ஒரு ஹாலிவுட் படம் பார்த்தேனே. Connan the Barbarian.
டார்லிங்: அதெல்லாம் சண்டை படம். நான் சொல்றது நிறைய உரையாடல் உள்ள படங்கள். டிராமா, ரொமான்ஸ் வகை படங்கள் எல்லாம் பாரு. சரியா?
கணேஷ்: சரி... இதோட பொருளை யாராவது விளக்குங்களேன்.
டார்லிங்: எனக்கு அதுக்கெல்லாம் பொறுமை இல்லை. சாரி. மேலும் என் மூட் சரியில்ல
ஜூலி: என்னாச்சு?
கணேஷ் (ஜூலியிடம்): நீ எனக்கு பதில் சொல்லிட்டு போய் கொஞ்சு
ஜூலி: நான் உங்கிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன். அதுக்கு நீ ரொம்ப சரியா பதில் சொன்னா "அட்ரா சக்க' என்று சொல்வேன் இல்லை
கணேஷ்: ஆமா
ஜூலி: அதான் nailed it
கணேஷ்: ஆனா ஏன் இதுக்குள் ஆணியெல்லாம் வரணும்?
ஜூலி: நீ வீட்டில் ஆணி அறையும் போது சுத்தியல் சரியா ஆணியில் படாது. பத்து அடி அடித்தால் ஒரு தடவை சரியாய் பட்டு ஆணி உள்ளே போகும். அது
தான்.
கணேஷ்: கில்லி அடி
ஜூலி: ஆமா அது தான் nailed it
கணேஷ்: அவ்வளவு தானா?
ஜூலி: please wait (டார்லிங்கிடம்) டார்லிங் டார்லிங் ஏன் மூஞ்சிய திருப்பிக்கிறே?
டார்லிங்: நீ என்னை டார்லிங்க்குன்னு கூப்டியா இல்ல என் பெயரை சொன்னியா?
ஜூலி: ம்ம்ம்... உன்னை அன்பா அப்டி அழைச்சேன்
டார்லிங்: then I don’t have to respond
ஜூலி: ஏன்?
டார்லிங்: நீ தான் என் பெயரைக் கூப்டலியே
ஜூலி: சரி... உன் பெயரைத் தான் சொன்னேன், ஓகேவா?
டார்லிங்: ஓ... அப்படீன்னா I won’t respond
ஜூலி: why?
டார்லிங்: அப்போ நான் உன் டார்லிங் இல்ல? அந்நியோன்யமில்லாம ஏதோ தெருநாயை அழைக்கிற மாதிரி என்னை பெயர் சொல்லி கூப்டறே?
ஜூலி: இதென்ன சோதனை?
புரொபஸர்: A classic case of dilemma
கணேஷ்: அதென்ன சார் டிலெம்மா?
புரொபஸர்: எந்த பக்கம் போனாலும் அடிங்கிற மாதிரி சூழ்நிலை. உன்னால் இப்போ அவளை டார்லிங் என்று கூப்பிடவும் முடியாது; கூப்பிடாமல் இருக்கவும்
முடியாது. எப்படி பார்த்தாலும் பிரச்னை தான். It is also a conundrum, a catch-22 situation, a predicament. A
quandary. இதெல்லாம் உன் அவலநிலைக்கான வேறு
சொற்கள்.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...