வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 145
புரொபஸர், கணேஷ், ஜுலி, டார்லிங் எனும் நாய், அதன் உரிமையாளர் பிங்கி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரின் காத்திருக்கும் அறையில் இருக்கிறார்கள்.


புரொபஸர், கணேஷ், ஜுலி, டார்லிங் எனும் நாய், அதன் உரிமையாளர் பிங்கி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரின் காத்திருக்கும் அறையில் இருக்கிறார்கள். உளவியல் மருத்துவரின் அழைப்பு மணி அடிக்க காத்திருப்போர் கூட்டத்தில் சிறு பரபரப்பு. எல்லாரும் திரும்பிப் பார்க்கிறார்கள். செல்லப்பிராணிகள் எழுந்து தலையைத் தூக்கி செவியை திருப்பி கவனிக்கின்றன. மருத்துவரின் உதவியாளரான ஒரு வயதான அம்மா வந்து தன் கையில் உள்ள அட்டையைப் பார்த்து, ""கமலா'' என்கிறார்.
ஒரு நளினமான இளம்பெண் எழுந்து நிற்கிறார்.
உதவியாளர்: நீங்க தான் கமலாவா?
இளம்பெண்: இல்லை (அவர் தன் கையிலுள்ள பூனையைத் தூக்கிக் காட்டுகிறார்) she is!
உதவியாளர் மீண்டும் அட்டையைப் பார்க்கிறார்: ஐ ஆம் சாரி கமலா இல்லை, பிங்கி...
டார்லிங்: பவ்... வவ்...
இளம்பெண்: நட்ண்ற் (என்றபடி எரிச்சலாய் அமர்கிறார்.)
பிங்கி எழுந்து: Come Darling! (பிங்கி டார்லிங்கை கையில் தூக்கிக் கொண்டு உளவியலாளர் அறைக்கு செல்கிறார்.)
கணேஷ்: சார் நான் ஒரு வித்தியாசமான டவுட் கேட்கப் போகிறேன்.
புரொபஸர்: ம்...ம்...ம்... நான் வேறொன்னு யோசிக்கிறேன்.
கணேஷ்: என்ன சார்?
புரொபஸர்: If only I were a pet like Darling...
கணேஷ்: சார் if only I was என்றல்ல சொல்ல வேண்டும்?
புரொபஸர்: இல்லை... இந்த இடத்தில் I were தான் பொருத்தம். நான் இதை உனக்கு ஏற்கனவே சொல்லித் தந்திருக்கிறேனே, இல்லையா?
கணேஷ்: மறந்து விட்டது சார்...
புரொபஸர்: It is a conditional clause இது மூன்றாவது conditional clause அதாவது சாத்தியமில்லாத ஒரு மிகுகற்பனை சூழலைப் பற்றி பேசும் clause. உதாரணமாய், நான் மட்டும் கடவுளாக இருந்தால் தங்கக் காசுகளாய் மழை பெய்ய வேண்டும், உலக மக்களெல்லாம் பணக்காரர்களாக வேண்டும், உலகில் பசியே இருக்கக் கூடாது என்பேன். இங்கு இந்த சந்தர்ப்பத்தில் நான் ஓர் அழகிய இளம் நங்கையின் கையில் ஒரு செல்லப்பிராணியாக இருக்கலாகாதா என ஏங்குகிறேன். அது சாத்தியமாகாது, சாத்தியமானாலும் நல்லதல்ல என அறிந்தே ஏங்குகிறேன். அப்படியான ஒன்றைச் சொல்வதற்கே மூன்றாவது conditional clause. அதற்கு I was அல்ல I were. If only I were Darling in Pinky's arms, I would be in heaven now.
கணேஷ்: ஓ... ஓ... அப்படி...
புரொபஸர்: சரி உன் டவுட்டை கேள்
கணேஷ்: அந்த வார்த்தை... அவங்க கோபத்தில் யாரையோ திட்டுறதுக்கு பயன்படுத்தினாங்களே...
புரொபஸர்: ஆமா, ஷிட்
கணேஷ்: அதோட நேர்ப்பொருள் ரெண்டுக்கு போறது தானே?
புரொபஸர்: ஆமா
கணேஷ்: அதை ஏன் கெட்ட வார்த்தையாக பயன்படுத்துறாங்க?
புரொபஸர்: விசித்திரம் தான். ஆனா அதுக்கு ஒரு வரலாற்று பின்னணி இருக்கு. இங்கிலாந்தில் கீழ்த்தட்டு மக்கள் வசித்த இடங்களில் சரியான கழிப்பறை வசதி அக்காலத்தில் இல்லை. நான் சொல்வது ரொம்ப முன்பு. அக்காலத்தில் கழிவுகள் சேரிப்புறங்களில் நகரங்களின் இடையில் ஆறாக ஓடுமாம். ஆக, Schiteburne Lane எனும் பெயரில் சேரித் தெருக்கள் இருந்திருக்கின்றன. Schite என்றால் பழைய ஆங்கிலத்தில் shit. Schiteburne Lane என்றால் கழிவுகள் ஆறாக ஓடும் தெரு. அதாவது மலத்தெரு. அப்போது இது கெட்டவார்த்தை அல்ல. ஆனால் இப்படி சேரி மக்கள் வசித்த பகுதிக்கென உண்டான பெயர் என்பதால் மலம் என்றாலே கீழான மக்கள் என்ற அர்த்தம் உருவானது. அப்படியே மலம் என்ற பொருளில் ள்ட்ண்ற் ஒரு கெட்டவார்த்தையானது. அது ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களைப் பழிக்கும் கெட்டவார்த்தை என்பதை இன்று அதைப் பயன்படுத்தும் பலரும் உணர்வதில்லை.
கணேஷ்: ஓ! சார் இப்போது அந்த பெயரில் இங்கிலாந்தில் அத்தெரு உள்ளதா?
புரொபஸர்: இப்போது அதன் பெயர் மாறி விட்டது. Sherbourn Lane என ஆகி விட்டது. கெட்டவார்த்தை அப்பெயரில் இருந்து மருவி மறைந்து விட்டது. இப்போது அது இங்கிலாந்தில் உயர்வர்க்கத்தினர் வசிக்கும் பணமதிப்பு மிக்க ஒரு பகுதி. என் உறவினர் ஒருவர் அங்கு சமீபத்தில் ஒரு வீடு வாங்கினார். இந்திய மதிப்பில் சுமார் மூன்று கோடி.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...