வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 137
புரொபஸரின் ஸ்கூட்டரில் கணேஷும் ஜூலியும் சென்னை திருவல்லிக்கேணி கண்ணகி சிலை எதிரில் உள்ள அகன்ற தெருவுக்குள் சென்று அங்கிருந்து இரண்டாவது இடது சந்துக்குள் நுழைந்து அங்கிருந்து பல குறுக்குநெடுக்கு


புரொபஸரின் ஸ்கூட்டரில் கணேஷும் ஜூலியும் சென்னை திருவல்லிக்கேணி கண்ணகி சிலை எதிரில் உள்ள அகன்ற தெருவுக்குள் சென்று அங்கிருந்து இரண்டாவது இடது சந்துக்குள் நுழைந்து அங்கிருந்து பல குறுக்குநெடுக்கு சந்துகளுக்குள் புகுந்து குழம்பி, இறுதியாக "டாக்டர் வெங்கடாசலபதி, ங.ஈ.' என பெயர்ப்பலகை தொங்கும் ஒரு சிறிய பழைய கட்டிடத்தின் முன் வந்து நிற்கிறார்கள். உள்ளே வரவேற்பறையில் இருபதுக்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருக்கிறார்கள். அதிகமும் 30-50 வயதுக்குள்ளான பெண்கள். அவர்களில் சிலர் கூண்டில் பூனை, எலி ஆகியனவும் வேறு சிலர் கையில் உயர்ஜாதி நாய்களும் வைத்திருக்கிறார்கள். உள்ளே விலங்குகளின் புழுக்கமான வீச்சமும் இடையறாத ஒலிகளும். வெளியே ஓர் அழுக்கான அம்பாசிடர் கார் நிற்கிறது. அதன் கதவு திறந்திருக்க, அதில் ஒருவர் சாய்ந்து நிற்கிறார். நீண்ட சுருள் சுருளான வெண்மயிர், தொளதொளவென்ற சட்டை, ஜீன்ஸ் பேண்ட். அவர் கூலிங்கிளாஸ் ஒன்றை கழுத்து வாருடன் இணைத்து அணிந்திருக்கிறார். ஒரு கிட்டாரை இசைத்து மென்மையாகப் பாடிக் கொண்டிருக்கிறார்.
புரொபஸர்: டாக்டர் வந்திட்டாரான்னு விசாரி
கணேஷ்: சார், இதோ அந்த பிச்சைக்காரன் கிட்ட கேட்கவா?
புரொபஸர் அந்த நபரை கவனித்து ஆச்சரியப்பட்டு: டேய் அது பிச்சைக்காரன் இல்ல; அவர் தான்டா டாக்டர். (அவரைப் பார்த்து) சலபதி...
(டாக்டர் அமோதித்து தலையசைக்கிறார்)
புரொபஸர்: அவன் ரிலாக்ஸ் பண்றான். நாம உள்ளே போய் வெயிட் பண்ணுவோம்.
கணேஷ்: சார்... அவர் கழுத்தில மாட்டி இருக்கிற வாரை பார்த்தீங்களா?
புரொபஸர்: ஆமா
கணேஷ்: அதுக்கு இங்கிலீஷ்ல என்ன?
புரொபஸர்: அது... அது... ம்..ம்...ம்... neck strap for eye glasses
டாக்டர்: நோ. டெக்னிக்கலா சொல்றதுன்னா it is an eyewear retainer or eyewear holder
புரொபஸர்: ரெண்டும் ஒண்ணு தான்டா
டாக்டர்: நோ நோ ஒண்ணில்ல. Neck strapன்னா என்ன? வெறுமனே கழுத்தில அணிவதற்கான வார். ஆனால் retainer என்பதில் இருந்து அதை அணிவதற்கான நோக்கம் முழுக்க தெரிந்து விடுகிறது இல்லையா?
கணேஷ்: அதான் என்ன? நான் பொதுவா சினிமால காமெடியன்ஸ் இதை அணியறதை பார்த்திருக்கேன்.
டாக்டர்: that's a load of bullshit
ஜூலி: retain என்றால் என்ன? தக்க வைக்கிறது. தங்ற்ஹண்ய்ங்ழ் என்றால்?
கணேஷ்: தக்க வைக்கிற சாதனம்
ஜூலி: கரெக்ட். Eyewear retainer என்பது கண்ணாடியை தொலைந்து போகாமல் மூக்கில் தக்க வைக்க உதவுவது. Eyewear holder என்பதும் அது தான்.
டாக்டர் (கிட்டார் வாசிப்பதை நிறுத்தி வியப்புடன் ஜூலியை குனிந்து பார்க்கிறார்): நாய் பேசுமா?
ஜுலி: நாய் பேசாது. ஆனால் நான் பேசுவேன்.
டாக்டர்: whiskey tango foxtrotன்னா தெரியுமா?
கணேஷ்: அதென்ன சார்?
டாக்டர்: ஏன் நீயே யோசி. ஏன் எப்பப் பாரு அவனை கேட்டுட்டு. உனக்கு மூளையில்லியா?
கணேஷ்: ம்ம்ம்... சரி நானே கண்டுபிடிக்கிறேன். விஸ்கி தெரியும். டாங்கோ என்றால் ஒரு டான்ஸ். கரெக்டா?
ஜூலி: யெஸ். லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள ஒரு ball dance. அதாவது விருந்துகளில் ஆடப்படும் நடனம்.
கணேஷ்: ஊர்ஷ் என்றால் நரி. பழ்ர்ற் என்றால் குதித்து ஓடுவது. இதெல்லாம் சேர்த்தால்?
டாக்டர்: சேர்த்தால்?
கணேஷ்: விஸ்கி குடிச்சிட்டு குதித்தோடும் நரி டாங்கோ நடனம் ஆடுகிறது. சரியா?
டாக்டர்: அடப்பாவி... நீ நமது கல்வி அமைப்போட சரியான பிரதிநிதிடா. எதையும் மாத்தி யோசிக்கத் தெரியாது.
புரொபஸர்: அது ஒரு abbreviation டா!
கணேஷ்: ம்ம்ம்...
புரொபஸர்: Also an interjection. உணர்ச்சிக்குறி. அதை விரிவாக்கி சொன்னா கெட்ட வார்த்தை. ஆனால் சுருக்கமாக சொன்னால் not offensive.
கணேஷ்: சார் அந்த நரி, குதித்தோடறது, விஸ்கி, டான்கோ?
புரொபஸர்: அதை அப்படி பார்க்கக் கூடாது. NATO தெரியுமில்லையா?
கணேஷ்: North Atlantic Treaty Organization. ஐரோப்பிய தேசங்களுடைய ராணுவ கூட்டமைப்பு.
புரொபஸர்: ஆமா. இந்த அமைப்புக்குள் ரகசியமாய் சேதிகள் பரிமாற சங்கேத குறிகளுடைய வடிவமைப்பை உருவாக்கினார்கள். அது தான் NATO phonetic alphabet. ஒவ்வோர் ஆங்கில எழுத்துக்கும் ஒரு மாற்று சொல்லை பயன்படுத்தினார்கள். அதைக் கொண்டு ஒரு சொல்லை ஒரு நீண்ட வாக்கியமாக எழுதுவார்கள். அதாவது NATO phonetic alphabetஇல் ஒரு வாக்கியமாக தெரிவது உண்மையில் ஒரு சொல்.
கணேஷ்: அப்படீன்னா whiskey tango foxtrot?
புரொபஸர்: பொறு... விளக்குறேன்
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...