வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 138
புரொபஸர், கணேஷ், ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரை நாடி செல்கிறார்கள். அவர் புரொபஸரின் இளவயது நண்பர். பெயர் வெங்கடாசலபதி.


புரொபஸர், கணேஷ், ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரை நாடி செல்கிறார்கள். அவர் புரொபஸரின் இளவயது நண்பர். பெயர் வெங்கடாசலபதி. உரையாடலின் இடையே WTF எனும் interjectionI (உணர்ச்சிக்குறி) பயன்படுத்துகிறார். அதைப் பற்றி விவாதம் நடக்கையில் அவர் முற்றிலும் புதிரான வகையில் whiskey tango foxtrot என மற்றொரு பிரயோகத்தை எடுத்து விடுகிறார். அதன் பொருளென்ன என கணேஷ் புரொபஸரிடம் கேட்கிறான். அவர் அது NATO அமைப்பு தமது ரகசிய சங்கேத பரிமாற்றத்துக்காக முன்பு பயன்படுத்திய phonetic alphabet என்கிறார். இதன்படி ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் ஒரு சொல் அளிக்கப்படும். ஒரு சொல்லை இதன்படி எழுதும் போது அது ஒரு வாக்கியம் ஆகி விடும் - அதுவும் பொருள் விளங்காத குழப்பமான வாக்கியம். whiskey tango foxtrot என்பது எப்படி இந்த phonetic alphabet படி பொருள் பெறுகிறது என புரொபஸர் விளக்குகிறார்.
புரொபஸர்: NATO phonetic alphabet படி A முதல் Z வரை கீழ்கண்ட சொற்பட்டியல் தரப்பட்டுள்ளது. (புரொபஸர் தன் போனைப் பார்த்து படிக்கிறார்):
A = Alfa, B = Bravo, C = Charlie, D = Delta, E = Echo, F = Foxtrot, G = Golf, H = Hotel,
I = India, J = Juliet, K = Kilo, L = Lima, M = Mike, N = November, O = Oscar, P = Papa,
Q = Quebec, R = Romeo, S = Sierra , T = Tango, U = Uniform, V = Victor, W = Whiskey, X = X-ray, Y = Yankee, Z = Zulu
கணேஷ்: ஓ... அப்படீன்னா (அவன் மனதுக்குள் சொற்களை கோர்க்கிறான்): Whiskey tango foxtrot என்றால் அதே தான் இல்லையா? WTF
புரொபஸர்: ஹா... ஹா...
கணேஷ்: அடப்பாவி... இதுக்கா என்னை இவ்வளவு சுத்த விட்டீங்க?
டாக்டர்: ஆனால் நீ ஒரு புது சங்கேத பாஷை கத்துக்கிட்டியே இப்போ...
கணேஷ்: டாக்டர் எனக்கொரு சந்தேகம்
டாக்டர்: ம்... கேளு
கணேஷ்: இந்த பாஷையில ஒருத்தர் கிட்ட பேசணுமுன்னா..?
டாக்டர்: நாம பேசறவங்களுக்கு அந்த பாஷை தெரியலேன்னா என்ன பண்றது? அதானே?
கணேஷ்: ஆமா டாக்டர்...
டாக்டர்: அதான் அதோட த்ரில்லே. ஊருக்கே தெரிஞ்சா அது சங்கேத பாஷையா சொல்லு? இப்போ நான் உன்கிட்ட Whiskey tango foxtrot என்று சொல்லும் போது I was testing waters
கணேஷ்: அப்டீன்னா?
டாக்டர்: ஒரு விசயத்துக்குள்ள இறங்கிறதுக்கு முன்னாடி சோதிச்சு பார்க்கிறது - அது சரியா வருமான்னு காலை விடறதுக்கு முன்னாடியே ஆழம் பார்க்கிறது. சரி நான் என்ன தெரிஞ்சிக்கிட்டேன்?
கணேஷ்: எனக்கு NATO phonetic alphabet தெரியாதுன்னு
டாக்டர்: கரெக்ட். அதனால நான் அதுக்கு மேல எதுவும் எடுத்து விடல.
கணேஷ்: ஓ...
டாக்டர்: ஆனால் ஒருவேளை நாம பேசறவங்களுக்கு phonetic alphabet தெரியுமுன்னா அது ரொம்ப exciting-ஆ, த்ரில்லிங்கா இருக்கும். சட்டுன்னு ரெண்டு பேரும் நெருக்கமாயிடுவோம். சரி நான் என் கன்சல்டிங் ரூமுக்குப் போறேன்.
(அவர் கிளம்புகிறார்)
ஜூலியை அழைத்துக் கொண்டு காத்திருக்கும் அறைக்கு செல்கிறார்கள். ஜூலி அருகே பிங்க் வண்ண சட்டை அணிந்த ஒரு பக் நாயை ஒரு மேட்டுக்குடி பெண்
வைத்திருக்கிறார்.
ஜூலி பக்கை நோக்கி திரும்பி: Yankee Oscar Uniform - Alfa Romeo Echo - Hotel Oscar Tango
Td: Yankee Echo Sierra, India - Alfa Mike
கணேஷ்: அட நீயுமா? என்ன சொன்னே?
ஜூலி: You are hot
கணேஷ்: ஹாட் என்றால் அழகு தானே?
ஜூலி: அது மட்டுமில்ல, ரொம்ப கவர்ச்சியா இருக்கிறது.
கணேஷ்: ஓ... அதுக்கு அது என்ன சொல்லிச்சு?
ஜூலி: Yes, I am. அப்படீன்னா "ஆமா நான் செம அழகுதான்' என்று அர்த்தம். (பக் நாயிடம்): சரி நீ இங்க எதுக்கு?
பக்: My owner - she is depressed.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...