தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 139 

புரொபஸர், கணேஷ், ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரை நாடி செல்கிறார்கள்.

News image
Updated On :15 மே 2018, 4:30 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர், கணேஷ், ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரை நாடி செல்கிறார்கள். அவர் புரொபஸரின் இளம்வயது நண்பர். பெயர் வெங்கடாசலபதி. அவருடன் அரட்டையடித்த பின் மூவரும் காத்திருக்கும் அறைக்கு செல்கிறார்கள். அங்கே ஜூலி அருகே ஒரு பெண் ஒரு பக் நாயுடன் வந்திருக்கிறார். பக் நாயிடம் ஜூலி பேச்சு கொடுக்கிறது. தன்னுடைய உரிமையாளருக்கு depression என்றும், அதற்காகவே மருத்துவரைப் பார்க்க வந்திருப்பதாகவும் அது சொல்கிறது.
கணேஷ்: சார்... இங்கே இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் எனக்கும் டிப்ரஷன் வந்திடும் போல இருக்கு.
புரொபஸர்: ஏன்?
கணேஷ்: ஆளாளுக்கு உம்முன்னு கோபமா கசப்பா உட்கார்ந்திருக்காங்க.
புரொபஸர்: ம்ம்ம்...
கணேஷ்: இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்றது?
புரொபஸர்: glum, gloomy, dull, bitter, 
self  absorbed, irritable. 
கணேஷ்: சார் உங்களையும் பார்க்க அப்படித் தான் இருக்குது.
புரொபஸர்: உனக்கொண்ணு தெரியுமா? நாம இருக்கிற இடம், சூழல் இதெல்லாம் நம் மனநிலையைப் பாதிக்கும். டிப்ரஷன் ஒரு biochemical - அதாவது உயிரி ரசாயன - கோளாறால் வருகிற வியாதியா அல்லது சூழ்நிலை நம்மில் ஏற்படுத்துகிற பாதிப்பா என ஒரு பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது தெரியுமா?
கணேஷ்: ஆமா சார், என் வகுப்பில யாருக்காவது அப்சட்டானா உடனே டிப்ரஷன்கிறாங்க. யாரைப் பார்த்தாலும் டிப்ரஷன்
புரொபஸர்: நான் இது சம்பந்தமா சில புஸ்தகங்கள் படிச்சேன். Shrink Rap அப்படி ஒண்ணு. டிப்ரஷன் எதனால வருதுன்னு மருத்துவர்கள் குத்துமதிப்பா சொல்றாங்களே ஒழிய, கெமிக்கல் இம்பேலன்ஸ் தான் காரணம் என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்கிறார்கள் அந்நூலின் ஆசிரியர்கள். அதாவது இப்போது நடைமுறையில் அளிக்கப்படும் பல மாத்திரிகைகளின் மருத்துவ பலன்கள் போதுமான ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டவில்லை. அதாவது வியாதியோ அதன் மருந்தோ போதுமான நிரூபணம் இல்லாமல் மக்கள் மீது திணிக்கப்படுகிறது.
கணேஷ்: அடக்கடவுளே...
புரொபஸர்: ஆமா
கணேஷ்: சார் shrink என்றால் உளவியல் மருத்துவர்னு அன்னிக்கு சொன்னீங்க. அதென்ன rap? இதுவும் ரேப்பும் ஒண்ணா?
புரொபஸர்: சேச்சே, இது ராப். ராப் மியூஸிக் கேட்டதில்லை?
கணேஷ்: ஆமா - பேட்டா ராப் - காசென்ன பணமென்ன இருப்பது ஒரு லைப்...
புரொபஸர்: சரி... சரி ... அதான். விடாம மந்திர உச்சாடனம் மாதிரி பேசியே பாடறது. அமெரிக்க ஆங்கிலத்தில் ஒருவர் இப்படி ஒரு தலைப்பில் பேசிக் கொண்டே போவதை rapping என்பார்கள். எளிமையாய் சொல்வதானால் - உரையாடல்.
கணேஷ்: உளவியலாளர்களின் உரையாடல்
புரொபஸர்: ஆமா.
கணேஷ்: இங்கே இருக்கிறவங்களோட முகங்கள் சோக ஸ்மைலி மாதிரி இருக்குல்ல?
புரொபஸர்: Down in the mouth கேள்விப்பட்டிருக்கியா?
கணேஷ்: இல்லியே. வித்தியாசமா இருக்குது சார்...
புரொபஸர்: சோக ஸ்மைலியோட உதடுகள் எப்படி இருக்கும்?
கணேஷ்: கீழ்நோக்கி வளைஞ்சு
புரொபஸர்: சோகமா melancholicஆ இருக்கிறவங்களோட உதடுகளும் அப்படி இருக்கும் என்பதால் they are down in the mouth.
கணேஷ்: செம சார். ரொம்ப விஷுவலா இருக்கு. நான் இதை மறக்கவே மாட்டேன். (திரும்பி கற்பனையாய் தன் காதலியிடம்) Dear I am so down in the mouth today, can't you see it?
அருகில் இருக்கும் பக்: Stupid
கணேஷ்: சார் இந்த நாய்க்குட்டி என்னை திட்டுது...
புரொபஸர்: ஹி ஹி...
பக்: பின்னே?
கணேஷ்: என் பாட்டில் பிழையென்ன?
பக்: Down in the mouth என்பதை நீ 
உனக்கே சொல்லிக்க கூடாது. அடுத்தவங்களுக்கு தான் சொல்லணும்.
கணேஷ்: ஏன்?
பக்: அது அப்படித் தான். மேலும் அதானே லாஜிக். நீ அடுத்தவங்க வருத்தமா உதடுகள் கீழாக வளைஞ்சு இருக்குதுங்கிறதை தானே பார்க்க முடியும்? உன் முகத்தை நீயே பார்ப்பியா? 
கணேஷ்: ஓ... அப்படி....
பக்: ம்ம்ம்...
கணேஷ்: you are so sweet. உன் பேரென்ன?
பக்: டார்லிங்
கணேஷ்: ஓ வாவ்
பக்: ம்ம்ம்...
கணேஷ்: டார்லிங் உன் மேடம் பேரென்ன?
பக்: பிங்கி. பிங்கி மிஷ்ரா. அவங்களைப் பார்த்தா என்ன தோணுது?
கணேஷ்: அழகா ஜாலியா புத்தகம் படிச்சுட்டு புன்னகை புரிந்தபடி...
பக்: ஆனால் உள்ளுக்குள்ள அவங்க ஒரு சந்திரமுகி. Melancholic to the core.
கணேஷ்: சார் நீங்களும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினீங்க. அதுக்கும் சோகம் என பொருளா?
(இனியும் பேசுவோம்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.