பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 141

புரொபஸர், கணேஷ், ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரின் காத்திருக்கும் அறையில் இருக்கையில்

News image
Updated On :29 மே 2018, 5:32 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர், கணேஷ், ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரின் காத்திருக்கும் அறையில் இருக்கையில் டார்லிங் எனும் பக் நாயிடம்
பேசுகிறார்கள். அது புரொபஸரிடம் ஒரு கேள்வி கேட்கிறது.
டார்லிங்: சார், நீங்க pensive என்ற சொல்லைப் பற்றி விளக்கும் போது எனக்கு வீட்டில் என்னை அடைத்து வைக்கும் pen நினைவு வந்தது.
கணேஷ்: பென்னா? அது பேனா இல்லையா? அதற்குள் எப்படி நாயை அடைத்து வைக்க முடியும்?
புரொபஸர்: இது dog pen. நாய் வெளியே ஒடாமல் இருப்பதற்கான ஒருவித வேலி. (டார்லிங்கிடம்) நீ சொல்லும்மா
டார்லிங்: இந்த வேலியை ஏன் பென் என்று சொல்ல வேண்டும்? பேனாவுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லையே.
புரொபஸர்: நல்ல கேள்வி. Pen என்ற சொல்லுக்கு ரெண்டு பொருளுமே உண்டு. ஒன்று, எழுதும் பேனா, இன்னொன்று, கால்நடைகளை அடைத்து வைக்கும்
பட்டி. பேனாவில் இருந்து புறப்படும் எழுத்து சுதந்திரத்தின் குறியீட்டு. அதற்கான பென் என்ற சொல் எப்படி ஒரு விலங்கை அடைத்து கட்டுப்படுத்தி வைக்கும்
சொல்லுடன் தொடர்பு கொண்டிருக்க முடியும்? அது தானே உன் கேள்வி?
டார்லிங்: ஆமாம் சார், you nailed it.
புரொபஸர்: ரெண்டு சொற்களும் ஒன்று போல் தெரிந்தாலும் அவற்றின் மூலச் சொற்கள் வேறு. பேனாவுக்கான சொல் pene எனும் பிரஞ்சு சொல். இதன்
பொருள் பறவையின் இறகு. முற்காலத்தில் மக்கள் இந்த இறகின் முனையை மையில் தோய்த்து முன்பு ஓலைகளிலும் தடித்த காகிதங்களிலும் எழுதினர்.
பின்னர் நவீன பேனா வந்த போது அதற்கு இப்பெயர் வைக்கப்பட்டது. ஆனால் dog pen என்பதில் உள்ள பென் penne எனும் பழமையான ஆங்கிலச் சொல்
ஒன்றில் இருந்து உருவானது. Pen என்ற சொல்லுக்கு அமெரிக்க ஆங்கிலத்தில் சிறை என்று கூட பொருள் உண்டு தெரியுமா?
டார்லிங்: அப்படியா?
புரொபஸர்: கடுங்குற்றங்கள் செய்த கைதிகளுக்கான சிறையை penitentiary என அழைப்பார்கள். இதை கொச்சையாக சுருக்கமாய் pen என்பார்கள்.
கணேஷ்: சார்... டார்லிங் பற்றி ஒரு கேள்வி...
புரொபஸர்: அதை நீ டார்லிங் கிட்ட இல்ல கேட்கணும்
கணேஷ்: இல்ல சார்... இது அப்பெயரின் காரணத்தைப் பற்றி. இது எனக்கு ரொம்ப பிடிச்ச வார்த்தை.
டார்லிங்: யெஸ் நீ போட்டிருக்கிற இந்த நீல சட்டை it is such a darling
கணேஷ்: சட்டையைக் கூடவா டார்லிங்குன்னு சொல்வோம்?
புரொபஸர்: ஓ... சொல்லலாமே. நமக்குப் பிரியமானவர்களை கொஞ்ச மட்டுமல்ல, ஒரு விசயம் பார்க்க ரொம்ப அழகா மனம் கவரும்படி இருக்குதுன்னு சொல்ல
darling பயன்படுத்தலாம். charming என்ற பொருளில் இங்கு டார்லிங் வரும். Her Honda car is such a darling; she looks like
an angel riding it.
டார்லிங்: In fact எங்களுக்கு ஒரு ஹோண்டா கார் இருக்குது. 
புரொபஸர்: தொண்ணூறுகளில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இருந்த ஒரே டார்லிங் சச்சின் தான். Sachin was the darling of the Indian masses
in the nineties. அதாவது ஒரு தரப்பினருக்கு பிரியமானவராய், ஒரு தொகுதி மக்களிடையே பிரசித்தமாய் இருப்பது. Vijay Sethupathy is a
darling among the serious and alternative film goers.
கணேஷ்: Vijay Sethupathy is a rage என்று சொல்லல் ஆகாதா?
புரொபஸர்: ஓ... சொல்லலாம். ஆனால் அர்த்தம் மாறும். தஹஞ்ங் என்பதை இந்த இடத்தில் "விஜய் சேதுபதி விசயத்தில் ரசிகர்கள் பைத்தியமாக இருந்தார்கள்'
எனும் பொருள் பட வருகிறது.  Craze, fad ஆகிய சொற்களுக்கு இணையாக இங்கு rageI சொல்லலாம். தமிழில் "வெறி' என்றும் சொல்லலாம். 
கணேஷ்: ஆனால் rage என்பதன் ஆதி அர்த்தம் கோபம் தானே?
புரொபஸர்: வெறும் கோபமில்லை. கடும் சினம், ஊரையே பொசுக்கும் ஆத்திரம். When the coach found the team unprepared and unfit
for the game he flew into a rage. தன் அணியினர் போதுமான பயிற்சி மற்றும் உடல் தகுதியுடன் இல்லை என்பதை அறிந்த பயிற்சியாளர்
கடுஞ்சினம் கொண்டார். 
டார்லிங்: Sometimes my owner rages on about the 
ill}effects of alcoholism when she finds her husband
arrives home mildly drunk. 
கணேஷ்: எனக்குப் புரியல
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.