விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 166

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணி களுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள்.

News image
Updated On :19 நவம்பர் 2018, 6:30 pm

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணி களுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். நடாஷா எனும் பெண்ணும் மீசைக்காரர் எனும் போலீஸ்காரரும் அங்கு காத்திருக்கிறார்கள். நடாஷா புரொபஸரிடம் ஒரு சந்தேகம் கேட்கிறார்.  Herb என்பதற்கு முன் ஹ சரியா, இல்ல ஹய் சரியா?

புரொபஸர்: நல்ல கேள்விம்மா! Herb எனும் சொல் அமெரிக்க ஆங்கிலத்தில் erb என்றும் பிரித்தானிய ஆங்கிலத்தில் Herb என்றும் வரும். அதாவது பிரித்தானிய ஆங்கிலத்தில் "ஹெ' ஒலி வரும். ஆகையால் அமெரிக்க ஆங்கிலத்தில் எழுதும் போது an herb என்றும் பிரித்தானிய ஆங்கிலத்தில் a herb என்றும் எழுத வேண்டும். கொஞ்சம் பிசகினால் தப்பாகி விடும். என் இங்கிலிஷ் டீச்சர் a herb என்று தான் சொல்லித் தந்தாங்க எனச் சொல்லி நியாயப்படுத்த முடியாது.
நடாஷா: தாங்க்ஸ். என்னோட ஒரு பிரண்டு. அவள் பேரு பிங்கி. பிங்கி ற்ட்ங் பயன்படுத்தும் போது ற்ட்ங்ங் என்று சொல்வாள். எப்பவுமே அப்படித் தான் பேசுவாள். ஆனால் நான் ற்ட்ன்ட் என்று தான் உச்சரிப்பே. I like ‘thuh’ smile of yours.
புரொபஸர்: சரிம்மா… ற்ட்ங் விசயத்தில்…

நடாஷா: I really meant that as a compliment. Nice smile.

புரொபஸர்: நன்றி!
கணேஷ்: சார்... ஒரு மாணவி உங்களுடைய புன்னகையைப்  பாராட்டலாமா? அதை நீங்க ஏத்துக்கலாமா? அது சரியா?
புரொபஸர்: ஏன் கூடாது? அவங்க என் மாணவி இல்ல. இருந்தாலும் கூட  ஓகே தான். அதில எந்த தப்பான உத்தேசமும் இரண்டு பேருக்கும் இல்லாத பட்சத்தில.நடாஷா: Yeah right, I agree!

கணேஷ்: ஓகே சார், சும்மா தான் கேட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க.
புரொபஸர்: உன்கிட்ட எந்த தப்பான உத்தேசமும் இல்லேன்னு நம்புறேன். அதனால no problem. வர வர நம்மூர்ல எல்லாத்தையும் சந்தேகிக்கிறாங்க. ஒரு தாத்தா தலையைத் தொட்டு ஆசீர்வாதம் பண்ணினா கூட சந்தேகப்படுறாங்க. இது மாதிரி சந்தர்ப்பங்களில் men are always under a cloud. நிஜமா தப்பு செய்யுறவங்க தப்பிடுவாங்க, அப்பாவிகள் அடி வாங்குவாங்க. In this time of pseudo-activism, people bark up the wrong tree.

கணேஷ்: Under a cloud சந்தேகத்துக்கு உள்ளாகிறதா சார்?
புரொபஸர்: அதில்ல, சரியா சொல்றதுன்னா தொடர்ந்து, ஆதாரமில்லாமலே ஒருவர் சந்தேகிக்கப்படுறது. உறுதிப்படாத சந்தேகம்.
கணேஷ்: ஸ்யுடோ ஆக்டிவிசம்ன்னா போலியான அரசியல் போராட்டமா சார்?
புரொபஸர்: இல்ல ஆக்டிவிசம்னா வெறும் அரசியல் செயல்பாடல்ல, ஆக்டிவிசம் என்றால் ஓர் அரசியல் சமூக மாற்றத்தை கொண்டு வர்றதுக்கான பிரச்சார முயற்சிகள். அது தெருவில இறங்கி போராடறதாகவோ வழக்கு தொடுப்பதாகவோ மறியல் பண்றதாகவோ ஊடகங்களில் எழுதுவதாகவோ இருக்கலாம்.

கணேஷ்: சார், நான் இப்போ அதிகமா பார்க்கிறது எதிலேயும் பட்டுக்காம பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் ஷேர் பண்ணி நடக்கிற ஆக்டிவிசம். பேசுறது கூட இல்ல ஜஸ்ட் லைக் போட்டு, ஒரு ஸ்டேட்டûஸ காப்பி பேஸ்ட் பண்ணிக்கிட்டு தங்களை ஆக்டிவிஸ்டுன்னு சொல்லிக்கிறாங்க. Social media activits ன்னு இன்னிக்கு இவங்களுக்கு மீடியா பட்டம் வேற கொடுத்துக்குது.
புரொபஸர்: நீ சொல்றது உண்மைதான். ஆனால் அதே நேரம் இவங்க ஒரு பெரிய அளவிலான அழுத்தத்தை ஊடகங்கள் மேல கொடுக்கிறாங்க. ஒரு பிரச்னையை கவனிச்சு அதைப் பெரிசா பேச வைக்கிறாங்க. சில நேரம் அது ஒரு சரியான ஆக்டிவிசமா மாறுவதுண்டு. 
நடாஷா: Actually sir, we live in an age of 
clicktivism. ஒண்ணும் பண்ண முடியாது.
புரொபஸர்: அப்படி சொல்லிட முடியாது. எந்த பிரச்சாரமும் போராட்டமும் களத்தில் நடப்பில் நிகழணும். இல்லேன்னா அது கள நிலவரத்தை புரிஞ்சுக்காத அரைகுறை பிரச்சாரமாயிடும். தம்மோட பிரச்சாரத்தோட விளைவு என்னன்னு கவலைப்படாம, அடுத்தடுத்த நாட்கள் புதுப்புது பிரச்னைகளுக்காக கிளிக் பண்ணிட்டு மறந்திடுவாங்க. ஆங்கிலத்தில் இதை slactivism சொல்வாங்க. Clicktivism என்பதை விட இது தான் பொருத்தமான சொல்.
நடாஷா: மீடூ இயக்கம் இப்படித் தான் ஒரு ள்ப்ஹஸ்ரீந்ற்ண்ஸ்ண்ள்ம் ஆ மாறிக்கிட்டு போகுது. 
புரொபஸர்: நாம தேவையில்லாம distract ஆகிறோம். நீ அந்த ற்ட்ங் பற்றி கேட்டே இல்ல…
கணேஷ்: சார் எனக்கு அந்த bark up the wrong tree ஐ கொஞ்சம் விளக்குங்களேன் ப்ளீஸ்.

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.