ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மாணவர்கள் பங்கேற்கும்  சர்வதேச மாநாடு!

இன்று உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உலகம் முழுக்க இருந்து 6,700 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

News image
Updated On :30 அக்டோபர் 2018, 6:28 am

இரா. மகாதேவன்

இன்று உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உலகம் முழுக்க இருந்து 6,700 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். சர்வதேச அளவில் அனைத்து மாணவர்களின் முன்னேற்றத்துக்கான பல திட்டங்களை இந்தப் பல்கலைக்கழகம் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக மாணவர்களை அனைத்து திறன் கொண்டவர்களாக மாற்றவும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் 214 மாணவர் அமைப்புகளை (Student Organizations) ஏற்படுத்தியுள்ளது ஹார்வார்ட் பல்கலைக்கழகம். அவற்றில் ஒன்றுதான் Harvard Model United Nations (HMUN)  அமைப்பு.

ஹார்வார்ட் பல்கலைக்கழகம் 1927-இல் முதன்முறையாக நாடுகளின் மாதிரி கூட்டமைப்பு (ஙர்க்ங்ப் கங்ஹஞ்ன்ங் ர்ச் சஹற்ண்ர்ய்ள்) மாநாட்டை நடத்தியது. இதன்பிறகே 1945-இல் ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு உருவானது. இதைத் தொடர்ந்து, மாதிரி ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டை (Model United Nations conference) 1953 முதல் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அமெரிக்காவில் மட்டுமே நடைபெற்றுவந்த இந்த மாநாடு, கடந்த 2010 முதல் சீனாவிலும்,  இந்தியாவில்  

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் கடந்த 2011 முதல் நடைபெற்று வருகிறது Harvard Model United Nations India (HMUN -India) மாநாடு. பள்ளி மாணவர்கள் சர்வதேச பிரச்னைகள் குறித்து அறிந்துகொள்ளவும், அதற்கான தீர்வுகளை யோசிக்கவும், விவாதிக்கவும் வழிகாட்டும் இந்த மாநாடு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் 4 நாள்கள் நடைபெறுகிறது. 

கடந்த ஆகஸ்ட் 12 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த 150 பள்ளிகளில் இருந்து 200 ஆசிரிய ஆலோசகர்கள், 1400 மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்கும் மாணவர்கள் ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் செயல்பாடுகள், சர்வதேச உறவுகளில் இதன் பிரதிநிதிகள், இதர சர்வதேச அமைப்புகளின் உறுப்பினர்கள், நாடுகளின் அமைச்சரவைகளுக்கு உள்ள பணிகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ள முடியும். மேலும், சர்வதேசப் பிரச்னைகளில் உலகத் தலைவர்கள் கொண்டுவரும் வரைவுத் தீர்மானங்கள் குறித்து அறிந்துகொள்ளவும், அதுகுறித்து மாநாட்டில் விவாதிக்கவும் வாய்ப்புக் கிடைக்கும். 

உலகளாவிய பிரச்னைகள் குறித்து   பிற தன்னார்வலர்களுடன் சேர்ந்து விவாதித்து, நம்முடைய திறமைகளை மேம்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக, சர்வதேச அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றம் குறித்த சிக்கலான  பிரச்னைகளில் வெளிப்படையாகப் பேசுவதற்கான ஆக்கப்பூர்வமான மன்றமாக இது உள்ளது. மாநாட்டின் போது, சர்வதேச சமுதாயத்தின் தேவைகளுக்கு ஏற்ப, நாடுகள் தங்களின் ஆர்வமிக்க செயல்பாடுகளை சமநிலையில் வைத்திருக்க வேண்டியதன் அவசியம், நாடுகளின் சக்தி மற்றும் சர்வதேச பேச்சுவார்த்தைகளுக்கான அளவுகோல்கள் குறித்தும் மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும். 

கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற மாநாட்டில், சமுதாய முன்னேற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய பல ஆளுமைகள் பங்கேற்றனர். குறிப்பாக, ஹார்வார்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த மாநாட்டை ஒருங்கிணைத்த Worldview Education நிறுவுநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சம்ரீத் ரெட்டி, இந்தியாவுக்கான முன்னாள் ஆப்கன் அரசு தூதர் சய்தா முகமது அப்தாலி, இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ.எஸ். கிரண்குமார், 

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் உதவி செயலாளர் சோபா மிஸ்ரா கோஸ், ஃபிளேம் பல்கலைக்கழகப் பேராசிரியர் சாரோன் பார்ன்ஹார்ட், கோக்க கோலாவின் பெருநிறுவன விவகாரங்களுக்கான இந்திய துணைத் தலைவர் இஸ்தீயக் அம்ஜத், இதே நிறுவனத்தின் பெருநிறுவன விவகாரங்களுக்கான இயக்குநர் சந்த்ரமோகன் குப்தா உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுடன் உரையாடினர்.

கடந்த மாநாட்டில் பங்கேற்க பள்ளி பதிவுக்கட்டணமாக ஒரு மாணவர் மற்றும் ஆசிரிய ஆலோசகருக்கு சேர்த்து ரூ. 6795 பெறப்பட்டுள்ளது. பள்ளி அல்லாத பங்கேற்பாளருக்கு 13,800 ரூபாயும், அவருக்கான கட்டாய ஆசிரிய ஆலோசகருக்கு 6,795 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில், மாநாட்டின் பல்வேறு நிகழ்ச்சிகள், திறன்வளர்ப்பு முகாம், பயிற்சிப் பட்டறை, உணவு, ரயில், விமான நிலையங்களில் இருந்து மாநாட்டு அமைப்பு பரிந்துரைத்த விடுதி மற்றும் விடுதியில் இருந்து மாநாட்டு அரங்குக்கு வந்து செல்வதற்கான வாகனப் போக்குவரத்து கட்டணம் ஆகியவை அடங்கும்.  வரும் ஆண்டு மாநாட்டில் பங்கேற்க இப்போதே தயாராகுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.