பார்க்கிங் பணியில் ரோபோ!
இன்றைய காலச்சூழலில், பரபரப்பான நகரச் சாலைகளில் சொந்த காரை இயக்குபவர்களின் ரத்த அழுத்தம் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும்.


இன்றைய காலச்சூழலில், பரபரப்பான நகரச் சாலைகளில் சொந்த காரை இயக்குபவர்களின் ரத்த அழுத்தம் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கி, கடைசி நேரத்தில் ரயில், விமான நிலையங்களுக்கு சென்றடைபவர்களின் நிலையோ பரிதாபம். இதில் காரை, வாகன நிறுத்தத்தில் சரியாக நிறுத்திவிட்டு விட்டு உரிய நேரத்தில் ரயிலை, விமானத்தைப் பிடிப்பது என்பது சவாலாகவே இருக்கிறது. அப்படி நிறுத்திய காரை திரும்பி வந்து எந்த இடத்தில் நிறுத்தினோம் என்று ஞாபகத்துடன் தேடிக்
கண்டுபிடித்து எடுப்பதும் பெரும் கஷ்டம்தான்.
மனிதர்களின் இந்தப் பிரச்னைகளை "வாகனம் நிறுத்தும் ரோபோ' தீர்த்து வைக்கிறது. பிரான்ஸில் உள்ள "லியான் செயின்ட் எக்ஸ்பியுரி' விமான நிலையத்
தில் கார்களைப் பார்க்கிங் செய்யும் பணியில் ரோபோ நியமிக்கப்பட்டுள்ளது.
ஸ்டான்லி நிறுவனம் தயாரித்துள்ள இந்த ரோபோக்கள் பார்ப்பதற்கு சிறு காரைப்போலவே இருக்கின்றன. விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் தங்கள் கார்களைப் பிரத்யேக மையத்தில் நிறுத்திவிட்டுச் சென்றால் போதும். அந்த மையத்துக்குச் செல்லும் பார்க்கிங் ரோபோ, அந்த காரை அப்படியே எடுத்துக் கொண்டு ஏராளமான வாகனங்களை நிறுத்தும் இடத்துக்கு கொண்டு சென்று நிறுத்திவிடுகிறது.
அந்தப் பயணி திரும்பும் நாளை டிக்கெட் மூலம் அறிந்து கொள்ளும் ரோபோ, மீண்டும் அவரது காரை வாகன நிறுத்தும் மையத்தில் இருந்து எடுத்து அவர் காரை விட்டுச் சென்ற இடத்தில் வைத்துவிடும்.
இதனால் பயணிகள் எந்தவிதடென்ஷனும் இல்லாமல் வாகனங்களை நிறுத்திவிட்டு, பின்னர் எடுத்துச் செல்லலாம். தற்போது சுமார் 500 கார்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனை 6,000 கார்களுக்கு விரிவாக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பார்கிங் ரோபோக்களை உருவாக்கி வரும் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரோபோக்களே வாகனங்களை இயக்கி வரும் இன்றைய காலகட்டத்தில், இந்த பார்க்கிங் ரோபோக்கள் பயணிகளின் சுமையைக் குறைத்தால்வரவேற்கக் கூடியதே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...