காணொலிக் காட்சியில் 20000 பேர்!
கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து, வீட்டை விட்டு வெளியே அடிஎடுத்து வைக்க மக்கள் பயப்படுகிறார்கள்.


கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து, வீட்டை விட்டு வெளியே அடிஎடுத்து வைக்க மக்கள் பயப்படுகிறார்கள்.
வீட்டில் முடங்கிக் கிடந்தாலும், அவர்களைச் சிந்திக்க வைக்கவும், சம்பாதிக்க வைக்கவும், பொழுதுபோக்கவும் இணையம் வழிவகுக்கிறது.
பல நாடுகளில் உள்ள பெரு நிறுவனங்கள் முதல் சிறிய அலுவலகங்கள் வரை பணிபுரியும் ஊழியர்களை இணையவழி மூலம் பணியாற்ற இந்த கரோனா வழிவகுத்துள்ளது. அதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயில்வதற்கு இணையம் இணைப்புப் பாலமாக அமைந்துள்ளது.
இதற்கு ஜூம், கூகுள் மீட், மைக்ரோசாப்ட் டீம்ஸ், ஸ்கைப், வாட்ஸ் ஆப் போன்ற இலவசச் செயலிகள் பெரும் உதவியாக இருக்கின்றன.
இதில், ஜூம் அதிகபட்சமாக 500 பேர் வரையும், கூகுள் மீட்டில் 100 பேரும், ஸ்கைப்பில் 250 பேரும், வாட்ஸ் ஆப்பில் 8 பேரும் இடம்பெறும் வகையில் உள்ளது.
எனினும், பெரு நிறுவனங்களில் நடத்தப்படும் ஆலோசனை, பயிற்சிக் கூட்டங்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்க வேண்டியிருப்பதால், அதிகம் பேரை பங்கேற்கச் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் போட்டா போட்டி ஏற்பட்டது.
இதில், கணினி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட், ஒரே நேரத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்கும் லைவ் சாட் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
60 நாள்கள் மட்டும் சோதனை பயன்பாட்டுக்காக இலவசமாக இது வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகு கட்டணம் செலுத்திப் பயன்படுத்த வேண்டும்.
எனினும், இந்த சாட்டில் பங்கேற்பவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்றால் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை ஆயிரமாகக் குறைந்துவிடும்.
அதேநேரத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் இருக்கும்போது "கிளவுட் பேஸ்ட் போன் சிஸ்டம்" எனப்படும் இணையவழி மூலம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் புதிய சேவையையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
எது எப்படியோ கரோனா பாதிப்பின் பிடியில் இருந்து தப்பிக்க விஞ்ஞானிகள் உருவாக்கும் இதுபோன்ற தொழில்நுட்பங்களை நாம் வரவேற்றே ஆக வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...