

முகநூலிலிருந்து...
காற்றில் அசையும் இலை
நுனியில் அமர்ந்திருக்கிறது
அசையாமல் எறும்பு.
வண்ணை சிவா
கோபங்கிறது கிழிஞ்ச உடுப்பு மாதிரி...
நாம உடுத்துனாலும்
அசிங்கமா இருக்கும்...
அடுத்தவங்களுக்குக் கொடுத்தாலும்
அசிங்கமா இருக்கும்.
மயிலம் இளமுருகு
தாத்தா பாருங்க
ரோடு பூரா கூட்டம்...
யாரும் சொன்ன பேச்சைக் கேக்கல...
நாந்தான் குட் கேர்ள்
நாராயணி கண்ணகி
சுட்டுரையிலிருந்து...
""சூரியன் 6 மணிக்கெல்லாம் வருது...
இன்னும் தூங்குறியே... சோம்பேறி''ன்னு திட்றாங்களே...
சூரியன் சாயங்காலம் 6 மணிக்கே தூங்கப் போயிடுதே...
நாம தூங்கப் போனா சும்மா இருப்பாங்களா?
யாதுமாகி
ஒரு சொல்லில் கவிதை என்றால் அது அம்மா...
ஒரு சொல்லில் சரித்திரம் என்றால் அது அப்பா.
பாண்டியன்
யாரோ ஒருவரால் நிராகரிக்கப்படும் அன்பு,
யாரோ ஒருவரால் விரும்பப்படலாம்...
அன்பு என்றும் அனாதையல்ல!
பொன்னை நாதன்
கோபத்துல
மொபைலைத் தூக்கிப் போடும்போது கூட
கரெக்டா பெட் மேலே தூக்கி போடுறவங்க கிட்ட தான் கத்துக்கணும்...
கோபத்துல கூட
எப்படி நிதானமா இருக்கணும்னு.
புதுவை புதல்வன்
வலைதளத்திலிருந்து...
மாற்றுக் கருத்துடன் செயலாற்ற தைரியத்தைவிட, தெளிவே பிரதானம். இன்றும் மக்கள் நலன் சார்ந்து இயங்குபவர்களைத் தெளிவற்றவர்களாகச் சித்திரித்து ஒரு சிலர் செய்து வரும் சூழ்ச்சிகளையும் அவதூறுகளையும் அறிகிறோம்.
தனிநபர்களைத் தாங்க வேண்டிய அவசியம் கொள்கைகளுக்கில்லை. ஆனால், ஒருவர் துன்புறுத்தலுக்கு ஆட்படும்போது துயருறுவதே அறம். எந்த நேரத்திலும் என்னை ஊக்கி உந்தியெழ வைக்கும் "நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின, நன்மைக் கண்டோமென கும்மியடி' என்கிற பாரதியின் வரிகளை நினைத்துக் கொள்கிறேன்.
தளர்வுற்று வீழும் தருணங்களில் தன்னம்பிக்கை ஊசியாக அவ்வரிகளையே எனக்குள் ஏற்றிக் கொள்கிறேன். "இழப்பதற்கு எதுவுமில்லை' என்பதே எதார்த்தம். கனவுகள் சுகமானவை. என்ன நடந்தாலும் மௌனமாகக் கடந்து
விடும் கீழ் மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாக என்னை என் குடும்பம் வளர்க்கவில்லை. ஓரளவு வாசிக்கவும் கேள்வி கேட்கவும் அனுமதித்தது. அதன் பொருட்டு சமூக விஷயங்களில் என்னை நான் இயல்பாகவே ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.
சிறுவயதில் போராட்டக் களங்களில் ஆளும் அரசுகளுக்கு எதிரான பதாகைகளை ஏந்திக் கொண்டு நடந்ததை மறப்பதற்கில்லை. முழுவதுமாக அக்காரியங்களில் என்னை நான் இணைத்துக்கொள்ள வாழ்வும் வயிறும் வழிவிடவில்லை. குடும்பத்தின் மூத்த மகனாக ஆற்ற வேண்டிய கடமைகளை உத்தேசித்து ஒதுங்க நேர்ந்தது. ஆனாலும், காலத்தைக் கவனிக்காமலில்லை.
பாசத்தின் பதுங்கு குழியிலும் தேசத்தையே நினைத்து வந்திருக்கிறேன்.
https://yugabharathi.wordpress.com.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அம்பையில் திருக்குறள் அறக்கட்டளைக் குழு விழா

மந்தித்தோப்பு கோயிலில் சிறப்பு பூஜை

மானங்காத்தானில் கலையரங்கம் திறப்பு
47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு! - டிரம்ப்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

