மேலாண்மை தொடர்பான படிப்புகளுக்கு அண்மைக்காலமாக அதிக கிராக்கி ஏற்பட்டு வருகிறது. பொறியியல் துறையில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை மேலாண்மை தொடர்பான படிப்புகள் ஈடுகட்டி விடுகின்றன. இதனால் இளங்கலையில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படித்தவர்கள் கூட முதுகலையில் மேலாண்மை தொடர்பான படிப்புகளைப் படித்து மென்பொருள் நிறுவனங்களில் பணியில் அமர்ந்து விடுகின்றனர்.
தற்போதைய சூழலில் முதுகலையில் குறிப்பிடத்தக்க இரண்டு படிப்புகள் எதுவெனில் எம்பிஏ மற்றும் எம்ஐபி ஆகியவையாகும். எம்பிஏ என்பது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கல்வித்துறையில் புகழ்பெற்ற மற்றும் பிரபலமான படிப்பாகும். முதுகலைப் பாடத்திட்டத்தில் கோட்பாடு, நடைமுறை, மினி மற்றும் பெரிய திட்டம் உட்பட 4 செமஸ்டர்களைக் கொண்ட 2 ஆண்டு பாடத்திட்டமாகும். எம்பிஏ படிப்பில் சேர்வதற்கு 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்ற எந்த இளங்கலை பட்டம் பெற்றிருப்பதும் தகுதியானது. எம்பிஏ படிப்பவர்கள் சிறந்த நிர்வாக, மேலாண்மை மற்றும் வணிக திறன்களைப் பெற்று விளங்க முடியும். கூடுதலாக அவர்கள் சிறந்த தலைமை, சந்தைப்படுத்தல், ஆய்வாளர், தொழில் உறவு, பேரிடர் மேலாண்மை மற்றும் விளம்பரம் கையாளும் நபராகவும் பணியாற்ற முடியும்.
தற்போதைய சூழலில் எம்பிஏவிற்கு அதிகரித்து வரும் மவுசைக் குறித்து கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் வேலை வழிகாட்டி துறையின் தலைவர் அ.விமலா நம்மிடம் பகிர்ந்து கொண்டவை...
""முதுகலை வணிக மேலாண்மை பயில விரும்பும் மாணவர்கள் டான்செட் எனும் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். இந்த நுழைவுத் தேர்வு தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கும் பொருந்தும். இந்திய அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட அனைத்து இந்திய மேலாண்மை கழகத்தில் ஐஐடியில் பயில விரும்பும் மாணவர்கள் கேட் எனும் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். இரண்டாம் கட்ட "பி' ஸ்கூலுக்கான நுழைவுத் தேர்வாக மேட் எழுத வேண்டும். மேற்கண்ட கல்விக் குழுமங்களைத் தவிர்த்து, பிற "பி' ஸ்கூல்களில் எம்பிஏ பயில விரும்பும் மாணவர்கள் சேட், ஐஐஎப்டி, ஸ்னாப், டிஷ்னெட் மற்றும் ஜி மேட் போன்ற நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டும்.
எம்பிஏ பாடத்திட்டத்தில் மனித வள மேலாண்மை, நிதி மேலாண்மை, சந்தையியல் மேலாண்மை மற்றும் தகவல் அமைப்புகள் மேலாண்மை ஆகியவையே பிரதான பாடப் பிரிவுகளாகும். ஆனால், இவற்றில் தற்போது சுமார் 50 உட்பிரிவுகளும் உருவாகியுள்ளன. இவற்றில் சர்வதேச வணிக மேலாண்மை, தொழில் முனைவோர் மேலாண்மை, செய்முறை மேலாண்மை, மருத்துவமனை மற்றும் சுகாதார மேலாண்மை, பேரிடர் மேலாண்மை, சில்லறை மற்றும் தளவாடங்கள் மேலாண்மை, சுற்றுலா மேலாண்மை, வேளாண் வணிக மேலாண்மை, ஹோட்டல் மேலாண்மை, டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.
முதுகலை வணிக மேலாண்மை படிக்கும் மாணவர்கள் அனைத்து மேலாண்மை மற்றும் நிர்வாகத் துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்ற முடியும். மேலும் அவர்கள் ஒரு தொழில் முனைவோராகவும் மாறலாம். மனித வள மேலாளர், நிதி மேலாளர், சந்தைப்படுத்தல் மேலாளர், உற்பத்தி மற்றும் செயல்பாட்டு மேலாளர், தகவல் தொழில்நுட்ப மேலாளர், திட்ட மேலாளர், வாடிக்கையாளர் உறவு மேலாளர், மேலாண்மை ஆலோசகர் உள்ளிட்ட பணிகளோடு வங்கிகளிலும், பிற நிறுவனங்களிலும் எந்தவொரு நிர்வாகப் பணியையும் அவர்கள் செய்ய முடியும்'' என்றார்.
இந்நிலையில் கோவையிலிருந்து ஆண்டுதோறும் பல்வேறு தனியார் கல்லூரிகளிலுள்ள இங்கிலாந்திலுள்ள பல்கலைக் கழகங்களுக்கு சம்மர் ஸ்கூல் என்ற பெயரில் விடுமுறைக்கால பள்ளியில் பயில்வதற்கு மாணவ, மாணவியர்அழைத்து செல்லப்படுகின்றனர். இதன்மூலம் அவர்களது மூன்றாம் பருவப் படிப்பின்போது வெளிநாட்டில் கல்வி கற்க வாய்ப்புக் கிடைக்கிறது. இங்கிலாந்தில் கோடைக்காலத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை கிடையாது. அதற்குப் பதிலாக பருவமழைக் காலத்தில்தான் விடுமுறைக்காலமாகும். அப்போது பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவியர் எவரும் இருக்க மாட்டார்கள் என்பதால் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களை சம்மர் ஸ்கூலுக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். பயணச்செலவு, தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவற்றோடு கல்விக் கட்டணமாகவும் சேர்த்து நபருக்கு இந்திய மதிப்பில் ரூ.2 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பு வெளிநாட்டு பல்கலைக்கழக்ததிலும் கல்வி கற்றோர் என்ற பெருமையை எம்பிஏ மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தருகிறது.
இதைப்போலவே கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் விரிவாக்கம் மற்றும் மேல் வழிகாட்டி துறையின் சார்பில் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் தொடர்பான தேசிய அளவிலான விழிப்புணர்வு கருத்தரங்குகளை அவ்வப்போது நடத்தி வருகிறது. இதில் பேச்சுத்திறன், வேலை வழிகாட்டி நெறிமுறைகள், கணினி அறிவு உள்ளிட்டவற்றை வளர்த்துக் கொள்வதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய கருத்தரங்குகளின் மூலம் மாணவர்களின் திறன் மெருகூட்டப்படுவதோடு அவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. இவ்வாண்டில் பாரதியார் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு மட்டும் 1, 218 மாணவர்கள் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-ஏ.பேட்ரிக்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 211 ரன்கள் இலக்கு!

பாமக பேரவைக் குழு தலைவர் செளமியா அன்புமணி!
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
