இணைய வெளியினிலே...

யோசித்துப் பாருங்களேன்...ஒற்றையடி பாதைகளுக்கு மனிதனைத் தவிர...எதுவுமே தெரியாது. 
இணைய வெளியினிலே...
Updated on
1 min read

முக நூலிலிருந்து....


யோசித்துப் பாருங்களேன்...
ஒற்றையடி பாதைகளுக்கு மனிதனைத் தவிர...
எதுவுமே தெரியாது. 

சத்யராஜா

என்ன படிக்கிறாய்  என்றார்கள், எத்தனை மதிப்பெண்  என்றார்கள்
எங்கு வேலை என்றார்கள், எவ்வளவு சம்பளம்  என்றார்கள்
எப்போது கல்யாணம்  என்றார்கள், எத்தனை பிள்ளைகள் என்றார்கள்
அப்புறம்..  
எப்போது மரணம் ? என்று கேட்டுவிடுவார்களோ என பயமாக இருக்கிறது.

மகுடீசுவரன். மு

இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது... 
அப்பாவின் கைக்கடிகாரம்!

- டி.வி.எஸ்.சோமு 

உனக்காக இருப்பேன் என்பது குடும்பம்;
உனக்காக மட்டும இருப்பேன் என்பது காதல்;
எனக்கென்ன... அதான் நீ இருக்கிறாயே என்பதுதான் நட்பு. 

வசந்தி ஆதித்தன்

சுட்டுரையிலிருந்து...


முகம் பார்க்க வேண்டியதில்லை என்பதால்...
அதிகமான "பொய்யர்களை' - 
காது கொடுத்துக் கேட்க வேண்டிய கட்டாயத்தில்.... கைபேசி. 

சவேதி

முதலில் உங்களது ஒவ்வொரு செயலையும் உற்று நோக்குங்கள்...
அதுதான் உங்களுக்கென தனி அடையாளத்தைப் பெற்றுத் தரும்.

தேவதை


மலை ஏற வேண்டும் என நினைத்துவிட்டால்
படிகளை எண்ணிக் கொண்டு இருக்கக் கூடாது. 
யோசித்து செய்;  செய்த பின் யோசிக்காதே..!

குழந்தை. செல்வா

முடிந்த வரை நடிக்க கற்றுக் கொள்ள வேண்டும்...
ஏமாற்ற அல்ல...
போலியான உறவுகளைக் கண்டறிய.

மிஷின்காரன் 

விட்டுக் கொடுப்பதற்கும் விட்டுச் செல்வதற்கும் வேறுபாடு அறிக.

ஏமாளி 


வலைதளத்திலிருந்து...

மின்னஞ்சல், ஸ்கைப், டுவிட்டர், எஸ். எம். எஸ். , வைபர், வாட்ஸ்அப் அறிமுகமானதன் பின்னர் கடிதம் எழுதுவதே அரிதாகிவிட்டது. இவை அண்ணன் தம்பிகள் போன்று அடுத்தடுத்து பிறந்த குழந்தைகள். தற்காலத்தில் படிவங்களையும் ஆன்லைனில் பூர்த்தி செய்து அனுப்ப முடிந்திருப்பதனால் அதிலும் பேனாவுக்கு வேலையில்லாமல் போய்விட்டது.
காசோலைக்கு ஒப்பமிடுவதற்கு மாத்திரம் பேனா உதவும் காலத்திற்கு வசதிபடைத்தவர்கள் மாறிவிட்டார்கள்.
எழுத்தாணியும் பனையோலை ஏடுகளும் வெள்ளீய அச்சும் நூதன சாலைக்குச் சென்றுவிட்டது போன்று தபால் முத்திரைகளும் வருங்காலத்தில் ஆவணக் காப்பகங்களிலும் அருங்காட்சியகங்களிலும் இடம் பெறலாம். வெளிநாடுகளில் வதியும் தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களை இலங்கையில் ஏதாவது ஒரு கிராமத்திலிருந்தும் ஸ்கைப்பின் ஊடாக மணித்தியாலக்கணக்கில் பேச முடிகிறது. இந்த இலட்சணத்தில் யார்தான் கடிதம் எழுதி தபாலில் அனுப்பிக் கொண்டிருக்கப் போகிறார்கள்? சம்பிரதாயத்திற்காக திருமண சாமத்தியச் சடங்கு அழைப்பிதழ்கள் தபாலில் வருகின்றன. அவற்றுக்குச் செல்ல முடியாதவர்கள் வாழ்த்துமடல் அனுப்புகிறார்கள்.
https://nowshadonline.wordpress.com/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com