வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 263
ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.


ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப்பேரரசின் சக்ரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். அப்போது மயில்களுடன் ஒரு போட்டோ ஷூட் செய்ய வீரபரகேசரி நினைக்க, மயில்களையும் ஆடுகளையும் மேய்க்கிறவர்களும் வருகிறார்கள்.
அப்போது புரொபஸரிடம் கணேஷ் close up business என்பதன் பொருள் என்ன எனக் கேட்கிறான்.
புரொபஸர்: அதாவது தம்பி குளோஸ் அப் பிஸனஸ் என்றால் வியாபாரத்தை நிறுத்திக் கொள்வது. கடையை மூடுவது அல்ல.
ஆடுகளின் மேய்ப்பர் அப்போது ஒரு ஆட்டுக்குட்டியை துரத்தியபடி அவர்கள் இடையே ஓடி வருகிறார். அந்த களேபரத்தில் புரொபஸரும் கணேஷும் தடுமாறி ஒதுங்குகிறார்கள். ஆட்டுக்குட்டியைப் பார்த்து ஜூலி முதலில் குரைக்கிறது. அடுத்து ஜூலி வாலாட்ட அது புன்னகைத்து "ஹ்ஹ்ஹி' என்கிறது. ஜூலி அதனுடன் நட்பாகிறது.
ஜூலி: ஹை, மை நேம் இஸ் ஜூலி. நான் ஆம்பளை தான். பேரைத்தான் மாற்றி வச்சுட்டாங்க கடன்காரனுங்க.
ஆட்டுக்குட்டி: ஹ்ஹ்ஹி ... என் பேரு வள்ளி.
ஜூலி: nice name. உன்னுடைய முருகன் யாரு?
வள்ளி: அவர் பேரு முருகனே தான். அவர் என்னை வளர்த்தவர். அவர் ஒரு வழக்கறிஞர்.
எங்கள் ஆடுகளின் மன்றத்தில் பல பிரச்னைகளுக்கு அவரே தீர்வு காண்பார். ஓர் ஆடு புல்லு வேணுங்கும், இன்னொண்ணு இலைதலை போதுங்கும்.
இன்னொண்ணு விருந்துல கிடைக்கிற எச்சில் இலையைச் சாப்பிட மாட்டேன்னு அடம்புடிக்கும். But for all of them, his word is the law. அவர் சொன்னா யாரும் மறுக்க மாட்டாங்க.
ஜூலி: ஏன் அவரைப் பார்த்து அப்படி பயமா?
வள்ளி: இல்லை. He is a yes-man. அவர் வழக்காடினால் எதிர்த்தரப்புக்கும் அவர் சொல்வது சரியெனத் தோன்றும். அதனால் வழக்கு தோற்றாலும் ஜெயித்தது போலத்தான். அதனால் தான் I said his word is the law. ஒருமுறை ஒரு கொடூரமான கொலைகாரனுக்காக வாதிட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் கொலை நடந்தது. ஆனால் நடக்கல. என் கட்சிக்காரர் தான் கொலைகாரர். ஆனால் அவர் கொலை செய்யலை. இப்படி பேசிப்பேசி அதை நிரூபிக்கவும் செஞ்சிட்டார். அதைப் பார்த்து மயங்கி விழுந்த நீதிபதி பிறகு எழுந்திருக்கவே இல்ல. எதிர்க்கட்சி வக்கீல் இவர் கிட்ட உதவியாளரா இணைஞ்சிட்டார். அவர் பேசினா யாருக்கும் அவர் திட்டுறாரா பாராட்டுறாரான்னே புரியாது. என்னைத் தவிர.
ஜூலி: அது எப்படி?
வள்ளி: We have such a good connect always. ஒரு heart-to-heart talk போதும், ஒரு நொடியில் அவர் நினைக்கிறது எனக்குப் புரியும், நான் நினைக்கிறது அவருக்குப் புரியும்.
ஜூலி: அபாரம். உலகில் எந்த காதலர்களாலும் சாதிக்க முடியாத ஒன்று அது. எப்படி அந்த heart-to-heart சம்பாஷணை நடக்கும்?
வள்ளி: ஜிம்பிள்.
ஜூலி: என்னது? come again.
கணேஷ்: அதான் அது வந்திருச்சே. திரும்ப திரும்ப வரச் சொன்னா எப்படி?
ஜூலி: ஷட் அப்
கணேஷ்: ?
வள்ளி: ஹலோ, come again என்றால் திரும்ப வா என்றல்ல, சற்றுமுன் சொன்னதை திரும்பச் சொல்
லெனப் பொருள்.
கணேஷ் நொந்தபடி போகிறான்: ஒரு ஆட்டுக்கு என்னை விட அறிவா? நான் தற்கொலை பண்ணிக்க போறேன்.
வள்ளி: ஐயோ போறாருங்க.
ஜூலி: அவன் அப்படித்தான். ரெண்டு நிமிஷம் தனக்குள் அழுதிட்டு திரும்ப வந்திருவான். நீ சொல்லு. அதென்ன ஜிம்பிள்.
வள்ளி: ஜிம்பிள். ஈஸி.
ஜூலி: ஓ... சிம்பிளா. அதை ஜிம்பிள்ளுன்னு சொல்லக் கூடாது.
வள்ளி: நான் ஜிம்பிள்னு தான் சொல்வேன்.
ஜூலி: போகட்டும். எப்படி நீங்க ரெண்டு பேரும் ட்ங்ஹழ்ற் ற்ர் ட்ங்ஹழ்ற் பண்ணுவீங்க?
வள்ளி: அவர் என் கிட்ட வந்ததும் நான் சொல்வேன்: ஹ்ஹ்ஹி. உடனே அவர் என்கிட்ட ஹ்ஹ்ஹி எனச் சொல்வார். அவ்வளவு தான்.
கணேஷ் திரும்ப வந்து இதைக் கேட்கிறான்:
அடப்பாவி, நம்ம ஊர்ல இப்படி ஜிம்பிளா, சாரி, சிம்பிளா ஓர் ஆண்-பெண் சம்பாஷணை இல்லாமல் போச்சே.
ஜூலி: சரி அப்புறம் என்னாச்சு?
வள்ளி சோகமாய்: என் முதலாளி என்னை இந்த ஆல் இன் ஆல் அழகுமலையிடம் வித்துட்டார்.
ஜிம்பிள்.
ஆட்டு மேய்ப்பர் ஆல் இன் ஆல் அழகுமலை வருகிறார்: நீங்க பேசிக்கிட்டு இருந்ததை கேட்டுக்கிட்டு தான் இருந்தேன் ஜி. உங்க புரொபஸர் சொன்னது தப்பு.
புரொபஸர்: சொல் குற்றமா? பொருள் குற்றமா?
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...