ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இணைய வெளியினிலே...

நாளையெனும் புதிரில் மரணம் இருக்கலாம் என்ற உண்மையை உணர்ந்த பின் "அதனாலென்ன?' என்பது போல நம்பிக்கையோடு நான் இன்றில் வாழ்கிறேன்.

News image
Updated On :13 அக்டோபர் 2020, 12:30 am

DIN


முக நூலிலிருந்து....

நாளையெனும் புதிரில் மரணம் இருக்கலாம் என்ற உண்மையை உணர்ந்த பின் "அதனாலென்ன?' என்பது போல நம்பிக்கையோடு நான் இன்றில் வாழ்கிறேன்.

வழிப்போக்கன்

ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் உங்களை நெருங்கும்போது அடிமனத்தில் மெல்ல...
துணிவும்,  எதிர்கொள்ளலும் எழுகிறதல்லவா?
நண்பா, நாம் சந்தித்துக் கொள்ளுமிடம்  அது.

ப்ரியம்

தோற்பதற்குத் தயாரில்லையெனில்...
ஒரு போதும் குழந்தைகளோடு விளையாடாதீர்கள்.

இரா.எட்வின்

தோல்விதான் வெற்றியின் முதல்படின்னு நினைக்கும்போது...
இருக்கிற எல்லா படிகளிலும் எவனாவது விளக்கெண்ணெய்யை  ஊற்றி வச்சிடுறான்.

ராமய்யா நாராயணன்

சுட்டுரையிலிருந்து...


சோறு சிந்தாமல் சாப்பிடுபவர்களை அதிகம் பிடித்துப் போகிறது...
டேபிள் துடைக்கும் சிறுவனுக்கு.

பழைய சோறு


நாணயமாய் இருக்கிறேன்...
பத்து ரூபாய் காசைப் போல பார்க்கிறார்கள்.

வெண்பா


சிலர் சொல்வதுண்டு...
செய்வதில்லை.
சிலர் செய்வதுண்டு...
சொல்வதில்லை,  -உதவி

அ.ப.பெருமாள்.


நீ வலிமையாய்க் காட்டிக் கொள்ள பலவீனமானவர்களுடன் மோது.

ச ப் பா ணி


எது நடந்ததோ அது நன்றாகவே நடக்கவில்லை...
எது நடக்கிறதோ அதற்கு முன் நடந்ததே பரவாயில்லை...
என்ன நடக்குமோ...
அதைப்  பற்றி ஐடியாவே இல்லை. 

அகரன்

வலைதளத்திலிருந்து...


உலகின் மிக மோசமான காற்றுத்தரம் உள்ள நகரங்களில் ஒன்று டில்லி. பல ஆண்டுகளாக டில்லி அரசாங்கம், டீசல் பஸ்களை இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி, காற்று மாசைக் குறைக்க முற்பட்டு வெற்றி பெறவில்லை. டில்லியின் மெட்ரோ ரயில் இந்த முயற்சியின் ஒரு பங்கு. டில்லியைப்போல இந்திய நகரங்களான மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னையின் கதையும் இதேதான்.  ஆனால், டில்லியின் முக்கிய தோல்விக்கான காரணம், குளிர்காலத்தில் சுற்றியுள்ள வயல்களில் எரிக்கப்படும் 500 மில்லியன் டன் பயிர்த்தூர்.

 நவம்பர் 2019 - டில்லியின் காற்று மாசு அளவு 1000 -ஐத் தாண்டியதால் பள்ளிகள் மூடப்பட்டன. ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி பல நிறுவனங்கள் கேட்டுக் கொண்டன. அரசாங்கம், மாசு முகமுடிகளை  நகர்வாசிகளுக்கு வழங்கி, நிலைமையைச் சரிக்கட்ட முயற்சித்தது. டில்லியின் புகை மண்டலத்திற்குக் காரணங்கள் பல. தீபாவளி பட்டாசு, பயிர்த்தூர் எரிப்பு, வருடத்திற்கு 1 மில்லியன் புதிய ஊர்திகளைச் சேர்த்துவரும் தொல்லெச்ச எரி மாசு மற்றும் அனல் மின் நிலையங்கள். இவற்றில் தீபாவளி பட்டாசு, பயிர்த்தூர் எரிப்பு குளிர்காலத்தில் மட்டுமே நடக்கும் விஷயம். மற்றவை வருடம் முழுவதும் நடக்கும் விஷயங்கள். இந்த இரண்டு குளிர்கால விஷயங்களும் 700 அளவில் உலவும் டில்லியை (இதுவே ஒரு மிக மோசமான நிலை), 1000 -க்கும் மேலாகக் கொண்டு சென்று வாழ்க்கையையே சிரமமாக்குகிறது.

https://solvanam.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.