ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இஸ்ரோவின் இலவச சான்றிதழ் படிப்பு!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 24 மணி நேரத்தில் படிக்கக் கூடிய சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

News image
Updated On :27 அக்டோபர் 2020, 12:30 am

DIN

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 24 மணி நேரத்தில் படிக்கக் கூடிய சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ரிமோட் சென்சிங் அமைப்பு பேரிடர் ஆபத்து மேலாண்மை (ஜியோஸ்பேசியல் அப்ளிகேஷன்ஸ் ஃபார் டிசாஸ்டர் ரிஸ்க் மேனேஜ்மென்ட்)   குறித்து திறந்தநிலை ஆன்லைன் படிப்பை நடத்துகிறது.

பேரிடர் மேலாண்மைக்கு வலு சேர்க்கும் வகையில் இந்த படிப்பு நடத்தப்படுகிறது.  இந்த படிப்புக்கு கட்டணம் இல்லை. முற்றிலும் இலவசம்.

அரசு அதிகாரிகள், நிபுணர்கள், கல்வியாளர்கள், பல்கலைக் கழக மாணவர்கள் இந்தப் படிப்புக்கான வகுப்புகளை நடத்துகின்றனர்.  புவிசார்ந்த ஆர்வலர்கள், பேரிடர் மேலாண்மை துறையை சேர்ந்தவர்கள் இந்த படிப்பை படிக்கலாம்.

இந்த படிப்பு இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.  முதல் பிரிவில் புவிசார் தொழில்நுட்பம், புவிசார் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவை குறித்து வகுப்புகள் நடத்தப்படும்.  முதல் பிரிவு முடித்தவர்கள் அடுத்த பிரிவு வகுப்புகளில் பங்கேற்கலாம்.  முதல் பிரிவு முடித்து 2- ஆம் பிரிவு வகுப்புகளில் பங்கேற்க முடியாதவர்களுக்கு முதல் கட்ட அடிப்படை வகுப்புகள் முடித்தமைக்கான சான்றிதழ் வழங்கப்படும். 

இரண்டாம் பிரிவில் புவிசார் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மையில் புவிசார் நுண்ணறிவு, சுற்றுச்சூழல் பேரிடர், புவிசார் பேரிடர், வெள்ளத்தினால் ஏற்படும் பேரிடர் ஆகியவற்றைப் பற்றிய புவிசார் கவனிப்பு ஆகியவை குறித்து   வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 

முதல் மற்றும் இரண்டாம் பிரிவு வகுப்புகளை முடித்தவர்களுக்கு முழு படிப்பு முடித்தமைக்கான சான்றிதழ் வழங்கப்படும்.  முதல் மற்றும் இரண்டாம் பிரிவு வகுப்புகள் தலா 12 மணி நேரம் மொத்தம் 24 மணி நேரம் மட்டுமே இந்த படிப்புக்கான கால அளவாகும்.

இந்த சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்க இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ரிமோட் சென்சிங் (ஐஐஆர்எஸ்) இணையதளத்திற்குச் சென்று  தங்களுடைய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.  பிறகு சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.  பதிவுகள் அக்.13-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்காணும் இணையதள இணைப்பைப் பாருங்கள்.
https://isat.iirs.gov.in/courseDocs27/MOOC_Brochure.pdf 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.