செயலிகளை ஒன்றிணைக்கும் செயலி!
செல்லிடப்பேசிகளில் மிகக் குறைவான எண்ணிக்கையில் வரும் குறுந்தகவல்களை, பொழுதுபோக்கிற்காக சேமித்து வைத்து திரும்பத் திரும்ப பலர் படித்த காலம் ஒன்றிருந்தது.


செல்லிடப்பேசிகளில் மிகக் குறைவான எண்ணிக்கையில் வரும் குறுந்தகவல்களை, பொழுதுபோக்கிற்காக சேமித்து வைத்து திரும்பத் திரும்ப பலர் படித்த காலம் ஒன்றிருந்தது.
ஆனால், இணையவழி செயலிகள் மூலம் தற்போது வரும் ஏராளமான குறுந்தகவல்களை ஒரு முறை கூட படிக்க முடியாமல் மக்கள் திணறுகின்றனர்.
இதனால் செயலிகளில் 999+ என்ற எண்ணிக்கையில் பல நாள்களாக செல்லிடப்பேசிகளில் படிக்காத தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. அதுவும் தகவல் பரிமாற்றம் செய்ய தற்போது புதிது புதிதாக ஏராளமான செயலிகள் வெளியாகி வருகின்றன. நிறையத் தகவல்களைப் படிக்க முடியாமல் இருப்பதால், தேவையான, முக்கிய தகவல்களைப் படிக்காமல் தவற விடும் நிலையும் ஏற்படுகிறது.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண "பீப்பர்' என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஃபேஸ்புக் மெசேஞ்சர், சிக்னல், டிவிட்டர், டெலிகிராம், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஸ்கைப் உள்ளிட்ட 15 தகவல் பரிமாற்றச் செயலிகளை ஒன்றிணைத்து அவற்றின் தகவல்களை இந்த "பீப்பர்' செயலி காண்பிக்கிறது.
ஆன்ட்ராய்டு மட்டுமின்றி ஐபோன்களில் பயன்பாட்டில் உள்ள தகவல் பரிமாற்றம் செயலிகளையும் இந்த "பீப்பர்' செயலி ஒன்றிணைக்கிறது.
"பீப்பர்' செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்துவிட்டால் போதும், அனைத்துத் தகவல் பரிமாற்ற செயலிகளையும் ஒன்றிணைக்கும் பாலமாக அது செயல்படுகிறது. அனைத்து செயலிகளுக்கும் வரும் தகவல்களை "பீப்பர்' செயலியில் மட்டும் பார்த்து படித்துவிடலாம். எனினும், இந்த செயலியைப் பயன்படுத்த பத்து டாலர் கட்டணமாக வைக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் பல புதிய தகவல் பரிமாற்றச் செயலிகளும் விரைவில் இணைக்கப்படும் என்று "பீப்பர்' தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...