உடம்பைப் பார்த்தோம்... மனசைப் பார்த்தோமா?
வாழ்க்கை தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்னை அல்ல; அது அனுபவிக்கப்பட வேண்டிய உண்மை.


வாழ்க்கை தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்னை அல்ல; அது அனுபவிக்கப்பட வேண்டிய உண்மை.
- சோரென் கீர்கேகார்ட்
போட்டித்தேர்ளகளுக்கான மாணவர்கள் அவர்கள். துடிப்பான இளைஞர்கள். அவ்விருவரும் தங்களது கல்லூரிக் காலத்தில் அவர்களது உடற்கட்டினை வலுப்படுத்துவதிலேயே மிகுந்த ஆர்வமாக செலவழித்தனர். அதில் ஒருவர் உடலினை வளர்த்ததோடு, இன்னும் ஒரு படி மேலே சென்று, பணம், பளன், சொத்து என்பதிலும் குறியாக இருந்தார். சம்பந்தப்பட்ட மாணவர்களைக் குறைசொல்ல ஒன்றுமில்லை. அவர்களது பெற்றோரும், சுற்றமும் காட்டிய வழியில் அவர்கள் பயணித்தனர்.
இதில் என்ன தவறு இருக்கிறது என்கிறீர்களா? முதலில் நானும் அப்படித்தான் யோசித்தேன். ஆனால், அந்த இரு மாணவர்களில் ஒருவருக்கு ஒரு பிரபல திரைப்படத்தில் நடிக்கின்ற வாய்ப்பு கிட்டியது. அவர் தனது உடலை வலுவாக்குகிறேன் என்று சொல்லி, சாப்பிடக் கூடாததையெல்லாம் அளளக்கு மீறி சாப்பிட்டு, ஒரு கொடுமையான நள்ளிரவில் திடீரென்று மரணித்தார். அடுத்தவர், "பொன் சேர்த்தேனே... பொருள் சேர்த்தேனே' என்று மிதமிஞ்சிய பேராசையில் ஓடி, அடிதடி, வழக்கு என்று சிக்கி, சின்னாபின்னமாகி பின்னர் கொலையுண்டு மாண்டார்.
இந்த இருவரோடு தங்களது போட்டித்தேர்ள பயணத்தைத் தொடங்கிய பெரும்பாலான மாணவர்கள் இன்று கண்ணியமான உயர் அலுவலர்களாக, அரசு ஊழியர்களாக தங்களாலான சமூகத் தொண்டை மிகச்சிறப்பாகச் செய்து கொண்டிருக்கின்றனர். பொதுவான நிலவரம் இப்படியிருக்க, இவர்கள் இருவருக்கும் ஏன் இந்த கதி? உடலின் மீதும், பணம் பொருள் மீதும் அதீத அக்கறை காட்டியதுதான் குற்றமா?
இரண்டு விவசாய நண்பர்கள் இருந்தனராம். அவர்களிடம் தரிசான விளைநிலம் இருந்தனர். அந்த வருடத்தில் நல்ல மழை பெய்தது. நிலத்தில் ஏதாவது விதைத்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என பேசிக் கொண்டனர். "தக்காளி பயிரிடலாம்' என யோசித்து மறுநாளே அதற்குரிய வேலையைத் தொடங்கினர். விதை விதைத்து, செடி வளர்ந்தது.
முதல் விவசாயி தன் தோட்டத்தைச் சுற்றி வேலியடைத்தான். அவ்வப்போது களையெடுத்தான். கவனமாக நீர் பாய்ச்சினான். ஆனால், இரண்டாம் விவசாயி, ""இவனுக்கு வேலையில்லை. இதற்கெல்லாம் வேலி போட்டு களை பிடுங்க வேண்டுமா? தண்ணீர் பாய்ச்சினால் போதாதா?'' என்று முதல் விவசாயியைக் கிண்டலடித்தான்.
கனி தரும் காலமும் வந்தது. இரண்டு தோட்டத்திலும் காய் காய்த்து குலுங்கியது. தினமும் மாலை இருவரும் தோட்டத்தை பார்வையிடும்போது இரண்டாம் விவசாயி, ""நான் வேலி அடைக்கவில்லை. களை பிடுங்கவில்லை. ஆனாலும் என்னுடைய தோட்டமும் நன்றாக காய்த்திருக்கிறதுதானே? நீ வேலி அடைத்து உன் பணத்தையும், களை பிடுங்கி உன் நேரத்தையும் வீணாக்கி விட்டாய். நீ வெட்டி வேலை செய்திருக்கிறாய்'' என்று ஏளனம் செய்தான். தக்காளிகளெல்லாம் நன்றாக முற்றி விட்டது. நாளை பறித்தால் சரியாக இருக்கும்.
ஆகவே நாளை காலையிலேயே இவற்றை பறித்து சந்தையில் போய் போடுவோம் என்று இருவரும் பேசிக் கொண்டார்கள். சாக்குகளோடு மறுநாள் அதிகாலையிலேயே தோட்டத்திற்கு வந்தனர் இருவரும். வேலியடைக்காத தோட்டத்திலுள்ள காய்கள் எல்லாம் திருடப்பட்டு தோட்டமே அலங்கோலமாகக் கிடந்ததைப் பார்த்த இரண்டாவது விவசாயிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. வெறுங்கையோடு வீட்டிற்கு திரும்பிச் சென்றான் அவன்.
இந்த இரண்டாம் விவசாயின் நிலைதான் நாம் மேலே பார்த்த இரு மாணவர்களின் நிலையும்.
ஒவ்வொரு தோட்டமும், விளைநிலமும் அனைத்து காவலோடும் வேலியமைத்து காக்கப்படுவதைப்போல, நம் ஒவ்வொருவரது மனமும் காக்கப்பட வேண்டும். ஏனெனில், அதுவே வற்றாத ஜீவநதியாக ஊற்றெடுக்கிற நம் எண்ணங்களின் புனிதப் பிறப்பிடம். அவ்விடத்தில் மாசு படிந்து அழுக்கு சேருமானால் ஊற்று நீரான எண்ணங்கள் எப்படி சுத்தமானதாக இருக்கும்? அவ்வெண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படும் செயல் எப்படி ஆரோக்கியமானதாக இருக்கும்?
சரி, நம் மனதை எப்படி வேலி போட்டு காப்பது? "மனதினை அடக்கிய மனிதன் மகான் ஆகின்றான்' என்கிறார்களே உண்மையா? மகானெல்லாம் ஆகவேண்டாம்... மனிதனாகப் பயணித்து வெற்றி பெறுகின்ற அளவிற்கு மனதினை மாசுபடியாமல் காப்பது எப்படி? வாழ்வாங்கு வாழ்ந்த நம் முன்னோர்கள், சான்றோர்கள் ஆகியோரின் வாழ்க்கையை, வார்த்தைகளைப் படித்து தெரிந்துகொண்டு, அவற்றை நம் இதயத்தில் தக்க வைத்து... சோதனை வரும்போதும், பிரச்னைகள் வரும்போதும் அவற்றை பயன்படுத்துவது ஒருமுறை.
ஒருவரது இதுபோன்ற முயற்சிகளைக் கேலி செய்ய பலர் இருக்கத்தான் செய்வார்கள். "ஒழுக்கமாக உழைத்த உனக்கும் நல்ல வேலை... உழைக்காத எனக்கும் நல்ல வேலை. உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?' என்று சொல்வார்கள்.
அப்படி கேலி செய்பவர்களின் வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்த்தால் எல்லாமே நன்றாக இருப்பதைப் போலத்தான் தெரியும். ஆனால் பலன் கொடுக்கும் காலம் ஒன்று உண்டு. அன்று மனதை வேலிபோட்டு காத்து ஒழுக்கமாக உழைத்தவனின் அறுவடையைப் போல மற்றவர்களின் அறுவடையும், மகசூலும் இருக்காது என்பது திண்ணம்.
ஒரு பறவை பறந்து கொண்டே பூமியைப் பார்ப்பது போலத்தான் ஒரு மனிதன் மலைகளின் உயரே இருந்து சுற்றத்தைப் பார்ப்பதும், தரமான மனதோடு இவ்ளலகையும், அதில் வாழும் உயிர்களையும், செயல்களையும் பார்ப்பதும். பக்குவமான மனது எப்படி அது சார்ந்த மனிதர்களைப் பலருக்கும் நன்மை பயக்கும் காரியங்களை செய்ய வைத்து... அவர்களையும் உயர்ந்த இடத்தில் வைக்கின்றது? இதன் சூட்சுமம், மாசுபடியாமல் மனதை வேலி போட்டுக் காப்பதில் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...