தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பிரச்னைகள் + தீர்வுகள் = வாழ்க்கை!

சிலர்,  "ஐயோ எனக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறது; மற்ற யாருக்கும் இப்படி நடக்கவில்லை.

News image
Updated On :20 ஜூலை 2021, 12:30 am

வி.குமாரமுருகன்


சிலர், "ஐயோ எனக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறது; மற்ற யாருக்கும் இப்படி நடக்கவில்லை. என்று வருத்தப்படுவார்கள். அழுது புலம்புவார்கள்.
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பிரச்னை என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
துள்ளித் திரியும் மான்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். நாம் பார்த்து ரசித்துக் கொண்டேஇருக்கக் கூடிய அழகு அதற்கு இருக்கும். ஆனாலும் புலி, சிங்கம் போன்ற விலங்குகளால் அதற்குஎப்போதும் பிரச்னை ஏற்படலாம். அத்தகையவிலங்குகளால் ஏற்படக்கூடிய பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக மான்கள் தீர்வைத் தேடி ஓடிக் கொண்டே இருக்கின்றன.
உலகில் பிரச்னை இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவருக்கும் அவரவர் அளவில் பிரச்னைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.
சாப்பிடுவதற்கு ஒன்றுமே இல்லாத மனிதர்களுக்கு, அடுத்த வேளை சாப்பாட்டிற்கு என்னசெய்வது என்பது பிரச்னை. சாப்பிடுவதற்கு உணவுப்
பொருட்கள் இருப்பவருக்கு எந்த உணவைச் சாப்பிட்டால் உடல் ஒத்துக் கொள்ளும் என்ற பிரச்னை.
வேலை பார்த்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு குறிப்பிட்ட பணியை குறிப்பிட்ட நேரத்திற்குள் எவ்வாறு செய்து முடிப்பது என்பது பிரச்னை. வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை எப்போது கிடைக்கும் என்பது பிரச்னை.
இப்படி பிரச்னைகள் எல்லாருக்கும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றன. எனவே நமக்கு மட்டும்தான் இப்படி பிரச்னை வந்து கொண்டே இருக்கிறது என்று நினைப்பதை முதலில் நாம்கைவிடவேண்டும்.
பூட்டு செய்யும் நிறுவனத்தில் வெறும் பூட்டு மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதில்லை. அந்தப் பூட்டைத் திறப்பதற்கான சாவியும் உற்பத்தி செய்யப்படுகிறது. எந்தப் பூட்டிற்கு, எந்த சாவி என்பதைச் சரியாகத் தேர்ந்தெடுத்து விட்டால் போதும், எளிதாகப் பூட்டைத் திறந்து விடலாம்.
அதுபோல்தான், உலகத்தில் உருவாகும் ஒவ்வொரு பிரச்னைக்கும் நிச்சயம் தீர்வு இருக்கும். நம்முடைய பிரச்னை எது என்பதை உணர்ந்து அதற்கான
சரியான தீர்வினை தேர்வு செய்து விட்டால்,பிரச்னை காணாமல் போய்விடும்.
இன்பம் வரும்போது மகிழ்ச்சியான மனநிலைக்கு நாம் செல்வது போல், துன்பம் வரும்போது அதை ஏற்றுக்கொண்டு, அதைப் புரிந்து கொண்டு இன்பத்திற்கான வழியைத் தேடுவதில் ஆர்வம் காட்டவேண்டும். அதை விட்டுவிட்டு அது குறித்தகவலையை மட்டுமே மனதில் சுமந்தால் இன்பத்திற்கான பாதையைத் தேடும் சிந்தனை நமக்குத்தோன்றவே தோன்றாது.
பொதுவாக ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல, இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை என்று சொல்வார்கள். தொழில்
துறையாக இருந்தாலும், கல்வியாக இருந்தாலும்அல்லது வேறு எந்தத் துறையாக இருந்தாலும்,
இன்பம், துன்பம் ஆகிய இரண்டுமே கலந்து தான் நாம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.
சிலருக்கு எப்போதும் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்றால், அவர்கள் பிரச்னைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் விட்டு இருப்பார்கள் என்றுதான் அர்த்தம். கடந்த காலங்களில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் நாம் செய்த தவறுகள் எவை என்பதை உணர்ந்துஅல்லது நமக்கு ஏற்பட்ட பிரச்னைகள் எவை என்பதைத் தெரிந்து அது ஏன் ஏற்பட்டதுஎன்பதைப் புரிந்து கொண்டவர்கள், மீண்டும் அந்தபிரச்னையில் சிக்க மாட்டார்கள். சிலர் கடந்த கால பிரச்னைகளுக்கான தீர்வினைத் தேடி இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் பிரச்னை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
எனவே கடந்த கால அனுபவங்கள் மூலம் பிரச்னைகளை உணர்ந்து அதற்கான தீர்வினைக் கண்டறிந்தவர்கள் மட்டுமே பிரச்னைகள் இன்றி தொடர்ந்து பயணிக்க முடியும்.
இன்னும் சிலர் தாங்கள் சொல்வதுதான் சரி,மற்றவர்கள் சொல்வது சரியல்ல என்று நினைக்கக் கூடியவர்கள் ஆக இருப்பதும் பெரும் பிரச்னை
களுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.
எனவே, தொழில் துறையில் ஈடுபடும் இளைஞர்கள் அதில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது மட்டுமின்றி, நிறுவனத்தில் பணிபுரியும் அனுபவசாலிகளின் கருத்தையும் கேட்டு செயல்பட்டால் அந்த பிரச்னைகளிலிருந்து எளிதில் வெளிவந்துவெற்றியை ஈட்ட முடியும்.
அதுபோல் சிலர் ஒரு விவாதப் பொருளைஉருவாக்கி அந்த விவாதத்தில் தாங்கள் தான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பேசுவார்கள்.அந்த விவாத்தில் கலந்து கொள்ளும் மற்றவர்களின் கருத்துகளைக் கேட்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். இதனால் முக்கிய பிரச்னைகளுக்குக் கூட தீர்வு கிடைக்காமல் போய்விடக் கூடும். எனவே விவாதங்களில் மற்றவர்கள் கூறும் கருத்துகளைஉள்வாங்கி அந்த கருத்துகளில் பிரச்னைகளுக்கான தீர்வு இருக்கிறதா? என்பதை ஆய்ந்தறிந்து பயன்படுத்திக்கொண்டால் எத்துறையிலும் ஒருவர் வெற்றி பெற முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.