ஆன்லைன் ரேடியோ கல்வி!

கரோனா என்ற சொல்லைக் கேட்டவுடனேயே உடலெல்லாம் பதை பதைக்கிறது.
ஆன்லைன் ரேடியோ கல்வி!

கரோனா என்ற சொல்லைக் கேட்டவுடனேயே உடலெல்லாம் பதை பதைக்கிறது. அது டெல்டா, ஆல்பா என உருமாறி உலகப் பொருளாதாரத்தை மட்டுமின்றி நமது கல்விமுறையையும் மாற்றிவிட்டிருக்கிறது. மாணவர்கள் வீட்டுக்குள் முடங்கி, இணையதளத்தில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வி கற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதிலும் காலை முதல் இரவு வரை செல்போன் முன் ஒரே இடத்தில் பலமணி நேரம் அமர்ந்து ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை கண்கள் பாதிப்புக்கு ஆளாகும் அளவிற்கு கற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். செல்லிடை பேசிகளை அதிக நேரம் பார்த்தால் மூளைப்புற்றுநோய் வரும் என எச்சரிக்கை மணி அடித்து அவற்றை பயன்படுத்தஅரசுகள் தடைவிதித்திருந்த நிலையில், இன்று மாணவர்களின் கரங்களில் செல்போன்களைக் கொடுத்து பாடம் கற்கச்சொல்வது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

செல்போன்களில் கல்வி கற்பதால் அதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் மாணவர்களின் பார்வைத்திறன் குறைபாடு, உடல்சார்ந்த நோய்கள்ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், தொலைக்காட்சியில் ஆன்லைன் கல்வி போல, ஆன்லைன் ரேடியோ கல்வி என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளார்கள் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள்.

தமிழகம் முழுவதும் 28 மாவட்டங்களில், 75 ஆசிரியர்கள் மூலம் செயல்படுத்தப்படும் இந்த ஆன்லைன் ரேடியோ கல்வி முறைத்திட்டம் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளிடையே மட்டுமின்றி, பெற்றோர்களிடமும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தொடர்பாக ஆன்லைன் ரேடியோ கல்வி முறைத்திட்ட'ஒருங்கிணைப்பாளர்கள் கரூர் ஆண்டாங்கோவில் புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை த.கண்மணி, உதவி ஆசிரியைகள் தீ.கீதா, சு.சுபத்ரா மற்றும் கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் கத்தாளை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர் ஆ.கார்த்திக் ராஜா ஆகியோரிடம் பேசினோம். அவர்கள் கூறியதிலிருந்து....

""கல்வி தொலைக்காட்சி போல கல்வி ரேடியோ தொடங்கலாம் என நினைத்தோம். வானொலியில் உரிய அனுமதி பெற காலதாமதமாகும் என்பதால் ஆன்லைன் ரேடியோ என்பதைக் கண்டறிந்தோம். இதற்காக ரேடியோ வாங்க வேண்டாம். செல்போன் இருந்தால் போதும். ஆன்லைன் என்பதால் உலகில் எந்தப் பகுதியிலும் உள்ள மாணவர்களும் அதைப் பயன்படுத்தி கற்கலாம்.

முதலில் 3,4- ஆம் வகுப்புகளுக்கு சோதனை யோட்டத்தில் செய்து பார்த்தோம். நல்ல வரவேற்பு கிடைத்ததால் 1 முதல் 8- ஆம் வகுப்பு வரை போனில் வாய்ஸ் ரிக்கார்டு செய்து, வாட்ஸ்அப்பில் அனுப்பி மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறோம். தமிழகத்தில் 28 மாவட்டங்களைச் சேர்ந்த 75 ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து இதனைச் செயல்படுத்தி வருகிறோம்.

மாணவர்களுக்கு பாடம் மட்டுமின்றி திருக்குறள், பழமொழி கதைகள், நீதிபோதனைக் கதைகள், ஆங்கில இலக்கணம் போன்ற மாணவர்களுக்குத் தேவையானவற்றை கற்றுக்கொடுத்து வருகிறோம். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஒளிபரப்புகிறோம்.

இதற்கு ஜ்ஜ்ஜ்.ந்ஹப்ஸ்ண்ழ்ஹக்ண்ர்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் போதும், உடனே அதில் கேட்கலாம். அட்டவணைப்படி வகுப்புகள் நடக்கும். திங்கள்கிழமை தமிழ், செவ்வாய் ஆங்கிலம், புதன்கிழமை கணிதம், வியாழக்கிழமை அறிவியல், வெள்ளிக்கிழமை சமூகஅறிவியல் என வாரம்தோறும் பாடம் நடத்துகிறோம்.

இந்த பாடத்திட்டத்திற்கு மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் நல்ல வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு மாவட்டம் வாரியாக குரூப் தொடங்கி, பாடங்களின் சந்தேகம் குறித்து விளக்கமளித்து வருகிறோம். மாணவனுக்கு தேவையான கல்வி அறிவை ஆடியோ வடிவில் கொடுக்கிறோம். இதற்கு ஆண்டிராய்டு போன் கூட தேவையில்லை. சாதாரண போன் இருந்தால் போதும்.

ஜனவரியில் தொடங்கப்பட்ட ஆன்லைன் ரேடியோ இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் 1,80,000 முறை கேட்கப்பட்டுள்ளது. 11,500 மணி நேரம் இந்த ரேடியோவை மாணவர்கள் பயன்படுத்தியுள்ளனர். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் இது பாதிப்பை ஏற்படுத்தாது.

மாலை 6 மணிக்கு "மின்மினிகள் மின்னும் நேரம்' என்ற நிகழ்ச்சியை ஒலிபரப்புகிறோம். அதில் மாணவர்கள் பேசிய ஆடியோவை ஒலிபரப்பி அவர்களை ஊக்கப்படுத்தி இ-சான்றிதழ் (எலக்ட்ரானிக் சான்றிதழ்)கொடுக்கிறோம். மாணவர்களுக்கு தேர்வை எழுதி அவற்றை போட்டாவாக அனுப்பி வைக்கச் சொல்வோம். அதில் நல்ல மதிப்பெண் பெறுவோருக்கு இ-சான்றிதழ் கொடுக்கிறோம்.

பாடத்திட்டத்தில் சந்தேகம் வரும்போது, பாடம் எடுக்கும் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு பாடத்தையும் ஆடியோவாக எடுத்து அனுப்புவோம். பயணத்தின்போதும் கூட இதைப் பயன்படுத்தி பாடங்களைக் கற்க முடியும்'' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com